ads

Friday, 23 March 2012

ராசிகளின் ரகசியங்கள் / RASIKALAIN RAGASIYANGAL -MAKARAM

நீங்கள் மகர ராசியா.. !  நீங்களும் சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்தான்.  சந்தோஷ பிரியர்கள்.  மகத்தானவர்கள்.  மனிதாபிமானம் உள்ளவர்கள்.  எதிலும் ஒரு தனித்தன்மை என்பது உங்கள் ராஜமுத்திரை.

உங்களை சாதனையாளர் என்று சொல்லலாமா?

சொல்லலாம். 

கல்லிலும் கலைநயம் காணும் ஆற்றல் மிக்கவர்கள். லெட்சியவாதிகள்.  காசுக்கு கணக்கு பார்க்கும் கறார்  பேர்வழிகள். ஆத்திலே கொட்டினாலும் அளந்து கொட்டு என்பது உங்கள் சித்தாந்தம். 

அடித்தளம் எப்படி இருந்தாலும் அரசனை போல் வாழ வேண்டும் என்பது உங்கள் அவா.  வாழ்வீர்கள் என்பதும் உண்மை.

முன் கோபம், முரட்டுத்தனம், வறட்டு பிடிவாதம் உங்கள் கூட பிறந்ததது.  அதுமட்டுமா ... உங்கள் என்ன ஓட்டங்களை எளிதில் அறிந்து கொள்ள முடியாது. 

நீங்கள் சரியான  சந்தேக பேர்வழி.  எதையும் எளிதில் நம்புவதே இல்லை.  ஆனால் அதை வெளிக்காட்டிகொல்லாமல் இருப்பது இருக்கே....  அதற்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்.

கிட்டாதாயின் சட்டென மற என்பது உங்கள் குணாதிசயம்.  அது அப்படியாக்கும், இது இப்படியாக்கும் என்று நீட்டி முழக்கி விளக்கம் தருகிற பழக்கம் இல்லை.  ஒத்து வரலை ஒதிங்கிட்டேன் என்று ஒற்றை வரியில் பதில் வரும்.

உழைப்பே மூலதனம்.  வீண் பேச்சும், வெட்டியான விவாதமும் அறவே ஆகாது. காரியத்திலும், கடமையிலும் கண்ணாக இருப்பது உங்கள் பிறவி குணம்.

இருட்டை வெளிச்சம் ஊடுருவி பார்ப்பது போல் மற்றவர் மனதை படிக்க தெரிந்தவர்கள்.

என்னதான் இருந்தாலும் ரகசிய வாழ்க்கையும் உங்களுக்கு உண்டு.  வம்புக்கு போவதில்லை.  கொம்பு தேனுக்கும் ஆசைபடுவதில்லை.  வந்ததை வைத்து வாழ்வில் வசந்தம் காண்பிங்க.

பொதுநலவாதியாக இருந்தாலும் சுயநலம் இருக்கும். உழைத்து வாழும் நீங்கள் பிழைத்து கொள்வீர்கள்.

மனோபலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். தேவைபட்டால் தெய்வ பலத்தையும் துணைக்கு அழைப்பது உங்கள் இயல்பு.

அடிக்கடி மன அமைதியை இழப்பதும், பின் அதில் இருந்து மீள்வதும் வாடிக்கை.   நம்பியவரை கடைசிவரை கை விடுவதில்லை.

இருப்பினும் பெரிய அளவில் உறவு வட்டங்களை வைத்து கொள்வதில்லை. உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்,  உலகத்தில் போராடலாம். வாழ்ந்தாலும் தலை வணக்காமல் நீ வாழலாம் என்ற வைர வரிகளை வாழ்க்கை துணையாக கொண்டு வைராக்கியத்துடன் வாழ்பவர்கள்.

எப்போதுமே எதிராளியை பேச விடாமல் உங்கள் கருத்துக்களை ஓங்கி ஒலிப்பிர்கள்.   முன் கோபம் கூட பிறந்தது.  பின் கோவம் பிறகு வந்தது.

இது தான் உங்கள் குணம். 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...