உன்னை பாத்து
கண்ணடிக்கிறார்கள்
படவா.....
நட்சத்திரங்கள்
தொடுகிறான்
தழுவுகிறான்
தூதுவேளை செய்ய வந்த
தென்றல்...
அதனால்
இயற்கையை
நான் வெறுக்கிறேன். - பட்டுகோட்டை பிரபாகர்.
நான் ஒரு பிச்சைக்காரன்
உன்
வீடு வாசலில் நிற்கிறேன்
உள்ளே இருந்து
எதுவும் எடுத்து வர வேண்டாம்
நான்
ஏந்தி நிற்கும் பாத்திரத்தில்
உன்னையே போட்டுவிடு. - மு. மேத்தா.
உனக்கென்ன...
ஒரு பார்வையை வீசிவிட்டு போகிறாய்
என் உள்ளமல்லவா
வைக்கோல் போறாய் பற்றி எரிகிறது
உனக்கென்ன
ஒரு புன்னகையை
உதிர்த்துவிட்டு போகிறாய்
என் உயிர் அல்லவா
மெழுகாய் உருகி வழிகிறது - மீரா
அந்தியில் மூழ்கு
நிலவை பார்
மலர் ரசி
சங்கிதம் பழகு
கவிதை வாசி
மனம் சொல்கிறது முடியவில்லை
நீ
தொலைவில் இருப்பதால்
தெரிந்து கொள்
உன் உதடுகள் தொடாத வரை
இந்த புல்லாங்குழலும்
முங்கில்தான் ---துறவி
கிழ் இமைகளில் நீ இருக்கிறாய்
மேல் இமைகளில் நான் இருக்கிறேன்
இந்த இமைகள் மட்டும்
சற்று உறங்கிவிட்டால் என்ன ---- அறிவுமதி
நீ என்னை ஒரு முறை பார்த்தாய்
இதயத்தில் முள் பாய்ந்தது
தயவுசெய்து
இன்னொருமுறை பார் ....
முல்லை முள்ளால் தானே
எடுக்க வேண்டும். ---- மீரா
நான் பாலைவனம்
நீ
பார்த்தாய்
நான் பூத்தேன்.
நான் மரம்
நீ கண்ணசைத்தாய்
நான்
மண் சாய்ந்தேன்
நான் கவிதை
நீ
விழி அசைத்தாய்
நான் மொழி மறந்தேன் --- ஸ்ரீ கிருஷ்ணர்
நான் தென்றலாகத்தானே
வந்தேன்
நீ ஏன் ஜன்னலை
சாத்துகிறாய் -- மதிவாணன்
காற்றுக்கும் ஆசை வந்து
உன் ஆடை தொட்டு விளையாடும்
வாழ்க்கை கவலைகளில்
நான் வாங்கி விட்ட பெருமுச்சு
கடற்கரைக்கு போய் இருந்தால்
கப்பல்களும்
கவிந்திருக்கும் -- நா. காமராசன்
என்னை எரிக்கும் ஈர இரவுகள்
உன்னை பிரிந்ததை
சொல்லுகிறேன்
காதல் சுமந்த கனவுகள் எல்லாம்
கண்ணீர் துளிக்கு சொல்லுகிறேன்
உன்னை இனி மேல்
சந்திக்கும் போது
உயிரோடு இருந்தால் சொல்லுகிறேன்
கண்ணீர் திராவகம் விழுந்து
படுக்கை கருகி போனதை
சொல்லுகிறேன் -- வைரமுத்து
தத்துவம்
பொன்னி நதி அவ்வளவு
போன ரத்தம் போன பின்பு
கன்னியரை எசுதடா உள்ளம்
அது
கால் இடரி யானை விழும் பள்ளம்
கண்ணதாசன்
கண்ணடிக்கிறார்கள்
படவா.....
நட்சத்திரங்கள்
தொடுகிறான்
தழுவுகிறான்
தூதுவேளை செய்ய வந்த
தென்றல்...
அதனால்
இயற்கையை
நான் வெறுக்கிறேன். - பட்டுகோட்டை பிரபாகர்.
நான் ஒரு பிச்சைக்காரன்
உன்
வீடு வாசலில் நிற்கிறேன்
உள்ளே இருந்து
எதுவும் எடுத்து வர வேண்டாம்
நான்
ஏந்தி நிற்கும் பாத்திரத்தில்
உன்னையே போட்டுவிடு. - மு. மேத்தா.
உனக்கென்ன...
ஒரு பார்வையை வீசிவிட்டு போகிறாய்
என் உள்ளமல்லவா
வைக்கோல் போறாய் பற்றி எரிகிறது
உனக்கென்ன
ஒரு புன்னகையை
உதிர்த்துவிட்டு போகிறாய்
என் உயிர் அல்லவா
மெழுகாய் உருகி வழிகிறது - மீரா
அந்தியில் மூழ்கு
நிலவை பார்
மலர் ரசி
சங்கிதம் பழகு
கவிதை வாசி
மனம் சொல்கிறது முடியவில்லை
நீ
தொலைவில் இருப்பதால்
தெரிந்து கொள்
உன் உதடுகள் தொடாத வரை
இந்த புல்லாங்குழலும்
முங்கில்தான் ---துறவி
கிழ் இமைகளில் நீ இருக்கிறாய்
மேல் இமைகளில் நான் இருக்கிறேன்
இந்த இமைகள் மட்டும்
சற்று உறங்கிவிட்டால் என்ன ---- அறிவுமதி
நீ என்னை ஒரு முறை பார்த்தாய்
இதயத்தில் முள் பாய்ந்தது
தயவுசெய்து
இன்னொருமுறை பார் ....
முல்லை முள்ளால் தானே
எடுக்க வேண்டும். ---- மீரா
நான் பாலைவனம்
நீ
பார்த்தாய்
நான் பூத்தேன்.
நான் மரம்
நீ கண்ணசைத்தாய்
நான்
மண் சாய்ந்தேன்
நான் கவிதை
நீ
விழி அசைத்தாய்
நான் மொழி மறந்தேன் --- ஸ்ரீ கிருஷ்ணர்
நான் தென்றலாகத்தானே
வந்தேன்
நீ ஏன் ஜன்னலை
சாத்துகிறாய் -- மதிவாணன்
காற்றுக்கும் ஆசை வந்து
உன் ஆடை தொட்டு விளையாடும்
வாழ்க்கை கவலைகளில்
நான் வாங்கி விட்ட பெருமுச்சு
கடற்கரைக்கு போய் இருந்தால்
கப்பல்களும்
கவிந்திருக்கும் -- நா. காமராசன்
என்னை எரிக்கும் ஈர இரவுகள்
உன்னை பிரிந்ததை
சொல்லுகிறேன்
காதல் சுமந்த கனவுகள் எல்லாம்
கண்ணீர் துளிக்கு சொல்லுகிறேன்
உன்னை இனி மேல்
சந்திக்கும் போது
உயிரோடு இருந்தால் சொல்லுகிறேன்
கண்ணீர் திராவகம் விழுந்து
படுக்கை கருகி போனதை
சொல்லுகிறேன் -- வைரமுத்து
தத்துவம்
பொன்னி நதி அவ்வளவு
போன ரத்தம் போன பின்பு
கன்னியரை எசுதடா உள்ளம்
அது
கால் இடரி யானை விழும் பள்ளம்
கண்ணதாசன்
No comments:
Post a Comment