Follow by Email

Thursday, 15 March 2012

நான் அவ புருஷன். நான் அவ கூடத்தான் இருப்பேன்- அமானுசிய திகில்

இது ஒன்றும் பரபரப்பான செய்தியை தர வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை அல்ல.   சில சமயம் இதுபோன்ற செய்திகளை நான் பெரிது படுத்துவதே இல்லை.  

காரணம்..... அதில் இருக்கும் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி குறி.  ஆனால் நமக்கு மிகவும் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் நடந்தால்,  எப்படி நம்பாமல் இருக்க முடியும்.

நாகை மாவட்டம்,  வேளாங்கண்ணிக்கு பக்கத்தில் இருக்கும் ஊர்  திருப்பூண்டி.  அங்கே நடந்த ஒரு உண்மை சம்பவம் தான் இது.  

கவிதா.... ( பெயர் மாற்றப்பட்டுள்ளது )

கொள்ளை அழகு.  இளம் சிவப்பு நிறம்.  +2 வரை படித்தவள்.  எந்த சூதுவாதும் தெரியாதவள்.  பார்பவர்களிடம் எல்லாம் படபடவென பேசும் அவளுக்கு கொஞ்சநாளாய் ஒரு பிரச்சனை.

இதை பற்றி முதலில் அவள் வாய் திறந்து சொல்லவே இல்லை.  தற்செயலாய் அவள் அம்மா திலகவதி  ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) பார்த்ததும் அதிர்த்தே விட்டாள்.

இருக்காதா பின்னே.   வயதுக்கு வந்த பெண்.  வாளிப்பான உடல் வாகு பெற்றவள்.  உடம்பில் பொட்டு துணி இல்லாமல் படுத்து கிடந்ததால்,  பெற்ற தாய்க்கு எப்படி இருக்கும். 

நடந்தது இதுதான்.

கவிதாவின் வீடு வசதியானது தான்.  அப்பா சிங்கப்பூரில் இருக்கிறார்.  ஒரு அண்ணன், ஒரு தம்பி.  சிறிய குடும்பம்.  கவிதாவிற்கு என்று தனி அறை உண்டு.   

இரவில் அந்த தனி அறையில் தான்  படுப்பாள்.  ஒரு நாள் சற்று முன்பே எழுந்து விட்ட திலகவதி,  எதேச்சையாய் அவள் அறையை பார்த்தாள்.  அப்போதுதான் முன் சொல்லிய மாதிரி தூங்கி கொண்டிருந்தாள்,  தலை முடி எல்லாம் களைந்து.......

பயந்தது போன திலகவதி அவசரமாய் கதவை தட்டினாள்.  கண் விழித்த கவிதா,  அவசரமாய் உடை மாற்றி கொண்டு எதுவும் தெரியாத மாதிரி வந்தாள்.    

இவளுக்கு என்ன ஆச்சு.  ஆம்பிளை பிள்ளைங்க இருக்கிற வீட்டில் வயதுக்கு வந்த பெண் இப்படியா படுப்பாள்.   மனதுக்குள் கேள்வி எழுந்தாலும் உடனே கேட்கவும்  இல்லை.  

எப்படி கேட்பது?

கவிதா என்ன அறிவில்லாத பெண்ணா என்ன.  சரி.. சமயம் வரட்டும் கேட்போம்  என்று அப்போதைக்கு அமைதியானாள் திலகவதி.

மறுநாள் ...........

இப்படி ஒரு சம்பவம் நடத்த பிறகு பெற்ற தாய்க்கு தூக்கம் வருமா?  புரண்டு புரண்டு படுத்தவள் விடியும் முன் எழுந்தாள்.  கவிதா அறை பக்கம் போய் பார்த்தாள்.  

அங்கே... நேற்று மாதிரியே உடம்பில் துணியே  இல்லாமல் .....

பொறுமை இழந்த திலகவதி கதவை தட்டினாள்.  நேற்று மாதிரியே உடை மாற்றி கொண்டு,   எதுவும் தெரியாத மாதிரி வந்த கவிதாவை  கன்னத்தில் அறைந்தாள்.  

நாயே..  என்னடி உன் மனசில் நினைச்சுகிட்டு இருக்கே.   பொம்பளை பிள்ளையா  லெச்சணமா இருக்கியா  நீ. 
ராத்திரி ஆனா துணியை அவுத்து போட்டுட்டு,  எருமை மாடு மாதிரி என்னடி தூக்கம்.   வீட்டிலே ரெண்டு ஆம்பளை பசங்க இருக்காங்க தெரியுமா.  

கோவமாய் திலகவதி கத்தினாள்.  என்ன பழக்கம் இது.  இத்தனை நாளா இல்லாமல்,  தடி மாடு மாதிரி வளர்ந்த பிறகு என்னடி ஆச்சு உனக்கு?

திலகவதி போட்ட கூச்சலில் ... பயந்தது போன கவிதா சொன்னது இதுதான்.

இது கடந்த ஒரு மாதமாய் நடக்கும் சம்பவம்.  கவிதா இரவில் தூங்கும்போது அவளுடன்  ஒரு ஆண் வந்து பக்கத்தில் படுத்து கொள்கிறான்.  அவன் சும்மா இருப்பதில்லை.  அவளுடன் உறவு வைத்து கொள்கிறான்.

இது எல்லாமே தூங்கும்போது நடந்தாலும் எதுவும் செய்ய முடிவதில்லை.  இதை பற்றி வெளியே சொன்னால் உன்னை கொன்று  விடுவேன்.  நீ என் மனைவி.  உன்னுடன் நான் இருப்பேன் என்று அந்த உருவம் மிரட்டுகிறது.  அதனால் நான் ஒன்றும் சொல்லவில்லை,   என்று சொல்லிவிட்டு அழுதாள்.

இப்போது உங்களிடம் சொல்லிவிட்டேன்.  அது என்னை என்ன செய்ய போகிறதோ தெரியவில்லை என்று பயந்து அழுதாள்.

கவிதா சொல்வதை நம்புவதா இல்லையா என்றே புரியவில்லை திலகவதிக்கு.

சரி ... இன்று உன்னுடன் நான் படுத்து கொள்கிறேன்.  பயப்பட வேண்டாம் என்று சொன்னாலும்,  கவிதா சொல்வது எவ்வளவு உண்மை என்பது புரியவில்லை அவளுக்கு.

இரவு.... கவிதா எப்போதும் போல் தூக்கத்தில்.  அருகில் இருந்த திலகவதிக்கு தூக்கம் வரவில்லை.

நள்ளிரவு மணி 12 .

தூக்கத்தில் இருந்த கவிதாவின் கைகள், அவள்  சுடிதாரை கழற்ற தொடங்க்கியது.

இது தன் மகளுக்கு தூக்கத்தில் வரும் வியாதி என்று நினைத்த திலகவதி,  ஏய் என்ன பன்றே என்று  சொல்லிக்கொண்டே,  அவளை தடுக்க முயல..... பத்து பேர்  ஓன்று கூடி,  கையை  தட்டி விட்டால் எப்படி கை தூரமாய் போய் விழுமோ   அந்த மாதிரி, தள்ளப்பட்டு அதிர்ந்தாள் திலகவதி.

அத்துடன் நிற்கவில்லை.  தூக்கத்தில் இருந்த கவிதா எழுந்து  ஆம்பிள்ளை குரலில் பேச தொடங்கினாள்.

ஏய்.. வெளியே போ... இவ என் பொண்டாட்டி... இவ கூட நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன்.  என்னை தடுக்க நினைச்சே.... என்று கண்களை உருட்டி மிரட்ட ....பயந்து போன திலகவதி வெளியே வந்து விட்டாள்.

 அறையின் உள்ளே கவிதா,  தன் உடைகளை களைந்து....  துணி இல்லாமல்...    ஆண் பெண் உறவு கொள்ளும் போது நடப்பது போன்றே..... கவிதாவின் ஒவ்வொரு  அசைவும் இருக்க,   செய்வதறியாது திக்கித்த திலகவதி... எப்போது பொழுது  விடியும் என்று காத்திருந்தாள்.

அவளுக்கு புரிந்தது விட்டது..  மகளுக்கு பேய் பிடித்திருக்கிறது.  

விடிந்தது....

வெளியே.... யாரிடமும் சொல்லாமல்,  கவிதாவை அழைத்து கொண்டு, திருத்துறைபூண்டியில் இருக்கும் ஒரு  மந்திரவாதியை போய் பார்த்தாள்.  அவர் அறிவுரை படி,  தொடர்ந்து 48 நாட்கள்  நாகூர் தர்க்காவில் படுத்த பிறகு,  இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

நடந்தது உண்மை.  நம்பாமல் இருக்க முடியவில்லை.  அப்படியானால் பேய் என்பதும், பிசாசு என்பதும் உண்மைதானா...

உண்மைதான்.  மனம் அப்படித்தான் நினைக்கிறது.

இந்த விஞ்ஞான உலகத்தில் இப்படியும் நடக்குமா... சாத்தியமா....என்று யோசிக்கவே முடியவில்லை.

இந்த அமானுசியம் பற்றி இன்னும் சில தகவல் இருக்கிறது.  அதை பிறகு சொல்கிறேன். 

No comments:

Post a Comment