ads

Tuesday, 27 March 2012

உன்னை அறிந்தால்

நீ விரும்பியதை செய்.  

உன் உள்ளுணர்வு சொல்வதை கேள்.

உன்னை நம்பு.  

உன் மனம் கூறுவதை கவனி. 

எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உன்னை உந்துகிறதோ அந்த வழியில் நட.  

அமெரிக்க நாட்டில் ஒரு சர்வே செய்தார்கள்.  உங்களுக்கு பிடித்த வேலையில் நீங்கள் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு சுமார் 95 % சதவீதம் பேர் இல்லை என்று பதில் அளித்தார்கள்.

ஊருக்கு செல்பவர்கள் ஏதோ கிடைத்த வண்டியில் ஏறிக்கொள்வார்கள். எந்த ஊருக்கு போக வேண்டும் என்கிற தெளிவில்லாமல் என்று வைத்து கொள்ளுங்கள் ,  அது போல ஏதோ சோற்று பாட்டிற்கு  வேலை  என்று,  ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து  எல்லாம் சரிதான் என்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். நகர்த்துகிறார்கள் பலர்.

வீட்டில் அப்பா, அம்மா, அத்தை, பாட்டி, ஆசிரியர் என்று பலர் கூறும் யோசனையை கேட்டு பலர் வேலையில் இறங்குகிறார்கள், தேர்ந்தெடுக்கிறார்கள். 

இந்த உலகம்  நம் காதுபட   சதா  சொல்லி கொண்டிருக்கிறது.  

வங்கி வேலைக்கு போ.... நிறைய பணம் கிடைக்கும். நல்ல இடத்தில் இருந்த பெண் கொடுப்பார்கள். 

சொந்த தொழில் இறங்கு.  ஒரு நாள் பெரிய பணக்காரனாவாய். 

தாலுக்கா ஆபிஸ் வேலையில் இறங்கு.  ஆயுசு பூராவுக்கும் யாரும் உன்னை அசைக்க முடியாது. 

ஆசிரியர் வேலைக்கு போ.  அதிக கஷ்டமில்லை. இப்படி பல வாசகங்களை கேட்கிறோம். 

நமக்கோ வாலிப வயசு,  அனுபவமோ இல்லை. பெரியவர்களை சார்ந்தே பழகி இருக்கிறோம்.  எனவே அவர்கள் யோசனையை ஏற்று வாழக்கையை அமைத்து கொள்கிறோம். 

பின்  கொஞ்ச  நாளில்..... நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், இங்கே என்ற கேள்வி ஆத்ம சோதனையாக எழுகிறது.  என்ன சாதிக்கிறேன் இதில் என்ற கேள்விக்குறி நம்மை வாட்டுகிறது.

இந்த செக்கு மாட்டு வாழ்க்கை, உப்பு சப்பில்லாத வாழ்க்கை, என் மனம் இதில் இல்லை.  என் திறமைக்கு இங்கு வழி இல்லை என்ற எண்ணம் கோவமாக எழுகிறது.

அக்கவுன்ட் ஜெனரல் அலுவலகத்தில் வேலை இருந்தது. நாடகம் சினிமாவில் மிகவும் வாய்ப்பு இருந்தது.  லாப நஷ்டம் பாதுகாப்பு என்று பார்க்காமல் கலைத்துறையை தேர்ந்தெடுத்தார் பாலசந்தர்.

கம்புட்டர் கம்பெனியில் வேலை.  எனினும் மனத்திலோ எழுதும் உந்துதல். அன்று உந்துதலை பின்பற்றிய சுஜாதா இன்று எழுத்துலகில் ஒரு தனி சிறப்பிடத்தை பெற்றார். 

அவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எதிர்ப்பு இல்லை என்று என்னுகிறிர்களா?  லாப நஷ்டங்கள் ஏற்படுவதில்லை என்று கூற முடியுமா.

உள்ளுணர்வால் உந்தப்பட்டு தன் வாழ்நாளில் தன் துறையை தேர்ந்தேடுத்து கொள்பவர்கள், ஆத்ம திருப்தியை முக்கியமாக கணக்கில் எடுத்து கொள்கிறார்கள்.

தன்னை நம்புகிறார்கள் தன் காலில் நிற்கிறார்கள். தன்னால் சாதிக்க முடியும் என்ற பெருமையில் வாழ்கிறார்கள்.

தனக்கும், பிறருக்கும், இந்த சமுதாயத்திற்கும் பயன் படுகிறார்கள்.  அவர்கள் சவால்களை கண்டு அஞ்சுவதில்லை.

சவால்களும், சோதனைகளும் தான் மனிதனது முழு திறமையை வெளியே கொண்டு வருகிறது என்பது அவர்களுக்கு தெரியும்.

உலகால் அறியப்படாத ரகசியம் என்ற புத்தகத்தில் இருந்து.  
ஆசிரியர் M .S . UTHAYAMOORTHI 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...