ads

Monday, 19 March 2012

அகோரிகள் என்பது யார்?

நாணயத்திற்கு ரெண்டு பக்கங்கள்.   மனிதர்களும் அப்படித்தான்.  

1 .என் வீடு, என்  காரு, என் சொத்து, என் பொண்டாட்டி, என் பிள்ளை,  என் புருஷன் இப்படி பந்த பாசங்களில் வாழ்பவர்கள். சராசரி மனிதர்கள். 

இவர்களுக்கு குடும்பஸ்த்தன்,  அல்லது கிரகஸ்த்தன் என்று பெயர்.  நாம் அனைவருமே அந்த வரிசையில் தான் இருக்கிறோம்.

2 . பந்தமாவது, பாசமாவது எனக்கு எதுவும் இல்லை. நான் தனி மனிதன் என்று நினைப்பவர்கள் .  உலகியல் ஆசைகள் எதுவுமே இல்லாதவர்கள்.  தனக்கென ஒரு குடும்பம்,  வாழ்வதற்கென்று வசதிகளை வைத்து கொள்ளாதவர்கள்.

இவர்களை ஞானிகள் என்றும், ரிஷிகள் என்றும், முனிவர்கள் என்றும் சொல்வார்கள்.  போலி வாழ்க்கை வாழும் சாமியார்கள் இந்த கணக்கில் வரமாட்டார்கள்.  

ஒரு நிமிஷம்....... ரிஷியாக இருந்தாலும் ரிஷி பத்தினிகள் இருந்தார்களே...  ரிஷி பத்தினி என்றால் யாருங்க?  முனிவர்களின் துணைவியார்கள்தானே.  அப்படியானால் அவர்களுக்கு என்று ஒரு குடும்பம் இருந்தது என்பது தானே உண்மை. 

சரி.... சரி..   நான் சொல்லும் இவர்கள் இந்த இரண்டு வகையிலும் வராதவர்கள்,  அகோரிகள்.  

நான் தான் பிரம்மா, நான்தான் சிவன், நான்தான் கடவுள் என்று தத்துவ நிலையில் வாழ்பவர்கள்,   அல்லது நினைப்பவர்கள்.

இவர்களை பிணம் தின்னும் சாமியார்கள் என்கிறார்கள்.  சுடுகாட்டில் வசிப்பவர்கள் என்கிறார்கள், சுடுகாட்டு சாம்பலை பூசி கொள்பவர்கள் என்கிறார்கள்.  முற்றும் துறந்த முழு நிர்வாண சாமியார்கள் என்கிறார்கள்.

சித்தர்கள் போலவும்,  பித்தர்கள் போலவும் உணரப்படும் இவர்கள் வாழ்க்கை புதிரும் புனிதமும் நிறைந்தது.

காசிக்கு செல்பவர்கள் கண்ணில் இவர்கள் படாமல் இருக்க மாட்டார்கள்.  அதுவும் கும்பமேளா வந்து விட்டால்,  இவர்களை படம் பிடிப்பதற்கு என்றே வெளிநாட்டு நிருபர்கள் வந்து குவிந்து விடுவார்கள்.

இவர்களின் உண்மை நிலைதான் என்ன?

நான்கடவுள் படத்தில் சொல்லபடுவது போல்,  வாழ்பவர்கள் இல்லை அகோரிகள்.  வேடம் போட்டு தெருவில் பிச்சை எடுக்கும் சாமியார்கள் மாதிரி காசியிலும் சிலர் இருக்கிறார்கள்.

உடம்பில் சாம்பலை பூசிக்கொள்வது,  மண்டையோட்டை கையில் வைத்து கொள்வது,  பித்தர்கள் போல் ஓரிடத்தில் அமர்ந்து கொள்வது என்று வாழ்பவர்களை பார்த்து விட்டு இவர்கள்தான் அகோரிகள் என்று தவறாக அடையாளம் சொல்கிறார்கள்.

காசி நகரவாழ் மக்கள் இவர்களை அகோரிகள் என்றே சொல்வதில்லை. பொதுவாக வடஇந்தியாவில் பாபாஷி என்கிறார்கள்.  அவர்களை நாம் சாமியார்கள் என்கிறோம்.

அகோரிகள் மக்களோடு கலந்து வாழ்வது இல்லை.  அவர்கள் தனித்து வாழ்கிறார்கள்.  குறிப்பிட்ட நாளில் வந்து விட்டு மின்னலாய் மறைந்து விடுகிறார்கள்.

இவர்களில் நிர்வாண சாமியார்கள் உண்டு.  கூட்டமாய் வந்து விட்டு போய் விடுகிறார்கள்.  இவர்கள்  நர மாமிசம் உண்பவர்கள் இல்லை.  தமிழ் சினிமாவில் தவறாக சித்தரிக்கபட்டிருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் ஆன்மிகவாதிகள்தான்.
  
நமக்கு தெரிந்த ஆன்மிகவாதி யார்?

சதா சர்வ காலம் கடவுள் நாமம் உச்சரிப்பவர்கள், நாள் கிழமை தவறாமல் ஆலயத்திற்கு செல்பவர்கள்,  காவி உடுத்தியவர்கள்,  விரதம், பூஜை , என்று இருப்பவர்கள் மட்டுமே.   

இவர்கள் மட்டுமே ஆன்மிக வாதி இல்லை. மனத்தால் தியானிப்பவர்கள் கூட ஆன்மிகவாதிகள்தான்.

நாம் அகோரிகளை பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.  அதனால்  இவர்கள் வாழ்க்கை இரகசியமாகி விட்டது.  அல்லது இவர்கள் பற்றிய தகவல் முற்றிலும் திரித்து சொல்லபடுகிறது என்பதே உண்மை.

இவர்கள் இயற்கை உணவை உண்பவர்கள்.  தெருவில் ஆசி வழங்குவதும் அதற்கு மக்கள் தரும் பணம் மற்றும் காசை வாங்குவதும்,  நம் பாஷையில் சொல்வதானால்,  சாமியார்கள்.  அல்லது பிச்சைகாரர்கள்.

அகோரிகள் இப்படி உலா வருவதும் இல்லை.  பிச்சை எடுப்பதும் இல்லை. இவர்களை  மொழி, இனம், கலாச்சாரங்களோடு தொடர்பு படுத்தி பார்க்க கூடாது. இதை கடந்தவர்கள் தான் அகோரிகள். 

அதாவது வட இந்தியர்கள் சொல்வது போல் பாபாஸி.  அதாவது உயிர் கொடுத்தவர்கள்.  அல்லது தந்தைக்கு சமமானவர்கள்.


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...