ads

Saturday, 24 March 2012

ஆலய வழிபாட்டு முறைகள்

ஒரு உண்மையை சொல்லப்போனால் நம்மில் பலர்  பக்திமானா இருக்கலாம்.  விழுந்து விழுந்து சாமி கும்பிடலாம்.  ஆனாலும்  அந்த பக்தி பாமரத்தனமான வழிபாடா இருக்கும்..

அது என்னங்க பாமரத்தனமான வழிபாடு?

அதுவா..   ஆகம விதி,  சாஸ்த்திர நியதி எதையும் கண்டுக்கிறது இல்லை. மனசுல என்ன தோணுதோ அதை செய்திட்டு வர்றது.  

அது ஒன்னும் தப்பு இல்லையே... கண்ணப்பநாயனார்  பரம்பரைன்னு வச்சுக்குவோம்.

கடவுள்  ஒன்னும் கோவிச்சுக்க மாட்டார்.  இருந்தாலும் முறைன்னு ஒன்னு இருக்கே.

ஏனோதானோன்னு பக்தி செலுத்துற ஏகாம்பரம் கோவிலுக்கு போறார்ன்னு வச்சுக்குவோம்.   தப்பு தப்பா அவர் செய்யுறதை பார்த்து கடவுள் வாய் திறந்து ஒன்னும் சொல்ல போறது இல்லை.

ஆனா.......உள்ள நுழையும்போதே கடவுள் பார்ப்பார்.  அடடா... ஏகாம்பரம் வர்றான்னு ரெண்டு கண்ணையும்  மூடிப்பார்.   அப்படியெல்லாம் நடக்காமல் இருக்கணும்னா சரியா...முறையா... வழிபாடு செய்றதுதான் சரி.

அது எப்படி சரியா...முறையா... வழிபாடு செய்றது?

இதோ டிப்ஸ்..

சிவன் கோவிலுக்கு போறிங்களா.... முதலில் சிவனை வணங்கிட்டு அப்பறம் தான் உமாதேவியை வணங்கனும்.

பெருமாள் கோவிலுக்கு போறிங்களா....முதலில் தாயாரை வணக்கிட்டு அப்பறம் தான் பெருமாளை வணங்கனும்.

நவகிரக வழிப்பாடு செய்யணுமா... அந்த கோவிலில் பிரதான தெய்வங்களை எல்லாம் வணங்கிட்டு, பிரகாரம் சுத்தி முடிச்ச பிறகுதான் வணங்கனும்.

ஆஞ்சநேயர் வழிபாடு   செய்றிங்களா..  அவரை வணக்கிட்டு ஒரு நிமிடமாவது  கோவிலில் அமர்ந்து அப்பறம்தான் வீட்டுக்கு கிளம்பனும்.

சண்டிகேசுவர் சன்னதியில் கை தட்டி சாமி கும்பிடுறது,  சுண்டுறது இதெல்லாம் கூடாது.   அவர் மவுனமா சிவதரிசனம் செய்றார். அவரை தொல்லை பண்ண கூடாது.

விநாயகர் கோவிலுக்கு போனால் ஆலய பிரகாரம் ஒரு முறை சுற்ற வேண்டும்.

சிவன் கோவிலுக்கு போனால்... மூன்று முறை ஆலய பிரகாரம் பிரகாரம் சுற்ற வேண்டும்.

பெருமாள் கோவிலுக்கு போனால் ... நான்கு முறை ஆலய பிரகாரம் சுற்ற வேண்டும்.

நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும்.

அம்மம் கோவிலுக்கு வெள்ளிகிழமை போறது நல்லது.   துர்க்கை அம்மனை ஞாயிறு அல்லது செவ்வாய் கிழமையில் ராகு காலத்தில் போய் தரிசிக்க வேண்டும்.

காளியம்மனை அஷ்டமி திதியில் வணங்குதல் நல்லது.

ஆலய வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்களுக்கு உள்ளே நுழையும் போதே  காசு போட்டு விட வேண்டும்.  வெளியே வரும் போது போட்டால்,  தரிசன பலனை தாரை வார்த்து போல ஆகிவிடும்.

சாமி பேருக்கு அர்ச்சனை செய்யவேண்டாம். அவர்தான் சகல வசதியோடும் இருக்காரே.  நம் பேர் நட்ச்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 

 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...