ads

Tuesday, 20 March 2012

சிந்திக்க சில நிமிடம்....!

நீங்கள் நாத்திகரா... !

பரவாயில்லை.

நம்பிக்கையே இல்லையா?

அதனால் ஒன்னும் ஆகபோறது இல்லை. .   விதிவழிதான் மதி செல்கிறது.  மதி வழிதான் விதி செல்கிறது.  ஒத்துகிறிங்களா.

நீங்க என்ன நினைச்சாலும் சரி..  இதுதான் உண்மை. 

விதி என்பது கிரகம்.  விதி என்பது காலம்.  இதைதான் பெரியோர்கள் தலை எழுத்து என்றார்கள்.

ஏன்? விதியை மதியால் வெல்ல முடியாதா?  --- கேட்கலாம். 

விதியின் விருப்பம் அதுவாக இருந்தால் மட்டும்தான் அது  முடியும்.  நாம் விரும்பி இந்த வாழ்கையை பெறவில்லை.  இந்த தாய் தகப்பனுக்கு பிறக்க வேண்டும் என்பதும் நம் விருப்பமில்லை.

ஒப்பனா உடைச்சு சொல்லவா.   நம் தாயும் தகப்பனும் இச்சையோடு இணைந்த நேரத்தில் நிச்சயிக்கப்பட்டது  இந்த வாழ்க்கை. 

அப்படியானால் யாரால் இந்த வாழ்க்கை தீர்மானிக்கபடுகிறது?

அவரை கடவுள் என்கிறார்கள். கருவாய் உருவான  அடுத்த கணமே நம் வாழ்க்கை கிரகங்களின் கையில் போய் விடுகிறது.

அந்த கிரகங்களின் விருப்பப்படிதான் எல்லாமே நடக்கிறது.   ஒருவருக்கு நல்ல நேரம் வருதுன்னு வச்சுக்குவோம்.  நல்ல நேரம் என்பது என்ன?  யோக கிரகத்தின் திசை நடப்பில் வந்துட்டுன்னு அர்த்தம்.

உடனே அந்த கிரகம் நம் வீட்டு கதவை தட்டி ...  நான் தான் நவகிரகம்.  என் திசா காலத்தில் பெரிய தொகையை  உங்களுக்கு கொடுக்க வேண்டி இருக்கு. இந்தாங்கன்னு கொட்டுத்துட்டா போகும்.

செய் தொழில் ஏற்றம் பெரும்.  சேர்ந்தவரால் ஆதாயம்  வரும். பல வகையிலும்  பணவரவுகள் வந்து வாழ்க்கை தரம் உயர்ந்து போய்டும்.

அதுவே கெட்ட காலாமா இருந்தா என்ன செய்யும்?

தப்பு தப்பா யோசனை போகும்.  தப்பானவர்கள் நட்பு நம்மை தேடி வரும்.  மச்சான் .... அதை அப்படி செய்யணும், இதை இப்படி செய்யணும் என்று ஆயிரம்  யோசனை சொல்வார்கள்.

அவர்கள் சொல்லுகிற வழியில் நாம் சென்றால்,  நம் விதிபயன் என்னவோ அது நடந்துவிடும்.
 
கிரகம் எப்போதுமே எங்கேயோ இருக்கிற ஒருவருக்கு,  எங்கேயோ இருக்கிற  ஒருவரோடு முடிச்சு போடும்.

அமெரிக்காவில் இருந்து போனில் பேசினாலும்,  அக்கரை பேட்டையில் இருந்து கேட்கலையா.  அந்த மாதிரிதான். 

யாருக்கோ மகளா பிறந்து,  எப்படியோ வாழ்ந்து,  வாலிப வயசை எட்டியதும் வரன் வந்து இருக்குன்னு,  ஒரு ஆளை காட்டி இவர்தான் அவர்ன்னு சொல்றது இல்லையா.

எல்லாம் விதிதானே.

சர்வ வல்லமை பெற்றவன் ராவணன்.  அவன் தலை எழுத்து எங்கோ பிறந்த ராமன் கையில் இல்லையா.   ராவணன் காலமும் நேரமும் சீதை உருவத்தில் தானே இருந்தது.

அதை விடுங்க.  புராண கதைகள் ஆயிரம் இருக்கு.  நமக்கு ஏற்படும் நட்பு,  வந்து சேரும் உறவுகள்,  பிறக்கும் பிள்ளைகள்,  கல்வி, செல்வம், வாழ்க்கை தரம், வீடு, வாகன யோகம்,  இப்படி எதை எடுத்தாலும் அங்கே கிரகங்கள் வந்து விடுவார்கள்.

எல்லாமே கிரகம்தான் தீர்மானிக்குதுன்னா, அப்பறம் சாமியை ஏன் கும்பிடனும்.  எதுக்கு இத்தனை கோவில்.  இத்தனை சாமி.

நல்ல கேள்வி.  என்ன பதில்.

கோர்ட் தீர்ப்பு சொல்லிட்டா ... ஜனாதிபதிக்கு கருணை மனு போடகூடாதா.

வியாதி வந்துட்டா... அதோட போராட வேண்டியதுதானா.  மருந்து சாப்பிட்டு குணப்படுத்த முயற்சிக்க கூடாதா.

அந்த முயற்சிதான் பரிகாரம்.

ஓங்கி அடிப்பதை தாங்கி விடும் சக்தி.




No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...