இந்தியா செய்த உதவிக்கு எச்சரிக்கை விடுத்த ராஜபக்ஷே
இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்தியா வாக்களித்தது குறித்து, பெயரளவில் கூட நன்றி தெரிவிக்காத அதிபர் ராஜபக்ஷே, அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், பயங்கரவாத விளைவுகளைப் பற்றி, எதிர்காலத்தில் கவலைப்பட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
---- தினமலர் செய்தி
பாலை அள்ளி கொடுத்தாலும் பாதகம்தான்னு சொல்லுவாங்க. இந்த பழமொழி இந்தியாவிற்கு சரியா பொருந்தும். இந்தியா பிறந்த நேரமோ என்னவோ தெரியலை.
அதன் ஜாதகத்தில் நல்லவர்கள் யாரும் நண்பர்களாக இருப்பதில்லை. நண்பர்களாக இருப்பவர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை. இது தான் இந்தியாவின் ஜாதக விஷேசம்.
பாருங்க பக்கத்து நாட்டை.
சுண்டைக்கா நாடு இலங்கை. இங்கேருந்து இழுத்து முச்சு விட்டா கூட, இருக்கிற இடம் தெரியாம போய்டும்.ஆனால் அதன் அதிபர் ராஜபக்ஷே, விசுவாமித்திரர் மாதிரி சாபம் விடுறார்.
ஆதிகாலம் தொட்டே அரக்கர்கள் ஆண்ட பூமி என்பதாலோ என்னவோ, அங்கே ஆட்சியில் இருப்பவர்களுக்கு இரக்க குணம் என்பதே இருப்பதில்லை.
இலங்கையில் நடக்க கூடாத எல்லாம் நடந்தது. இருந்தும் இந்தியா எதையுமே கண்டு கொள்ளவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி இருந்த இந்தியா, உள்நாட்டு உணவர்வுகளை கூட புரிந்து கொள்ளவில்லை.
காரணம் நட்பு நாடு.
ஜெனீவா தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இனிமேல் மவுனமாக இருக்க முடியாது என்ற நிலை வந்த போது, ஆதரிக்கும் முடிவை கையில் எடுத்தது.
ஆனாலும் பழைய பாசம் விட்டு போகுமா. உடுக்கை இழந்தவன் கை போல இடுக்கண் களைவதாம் நட்பு என்ற வள்ளுவர் வாக்கை மெய்பிக்கும் விதமாக, இலங்கைக்கு பாதகம் இல்லமால் ஒரு திருத்தத்தை கொண்டு வந்து தீர்மானம் நிறைவேறியது. பின்னணியில் இந்தியா.
இருந்தும் ராஜபக்ஷே நன்றியை மறந்து சாபம் விடுகிறார். அவர் விடும் சாபத்தை பார்த்தால், எதிர்காலத்தில் அவரே தீவிரவாதிகளை உருவாக்கி ஊடுருவ விடுவார் போலிருக்கிறது.
இலங்கைக்காக கச்சதீவை விட்டு கொடுத்து இந்தியா. தாராள உதவி, நீண்டகால கடன்கள், உள்கட்டமைப்பு வசதிகளுக்காக தொழில் நுட்பம், என்று இந்தியா செய்தது என்னவோ, இலங்கை இந்தியாவின் இன்னொரு மாநிலம் மாதிரியே இருந்தது.
உண்மையில் விடுதலைபுலிகள் எதிர்ப்பு நிலையை இந்தியா எடுத்த பிறகு இலங்கை பெற்ற ஆதாயம் அதிகம். ஆனால் அந்த நன்றி இருக்கிறதா?
பங்காளாதேஷ்.
இந்த நாடு உலக வரை படத்தில் இடம்பெற இந்தியாவே காரணம். அவ்வப்போது எல்லை பிரச்சனை வந்து வந்து போகும். உண்மையில் இந்தியாவிற்கு இது நட்பு நாடா என்பதே சந்தேகம் வரும்.
இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ இந்த நாடு துணை போகிறது என்பதை விட, பல சமயம் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறது என்பது உண்மை.
போலியான பொருள்களை உற்பத்தி செய்து, கள்ள சந்தையில் விற்பனை செய்யும் சீனா .... மேடு இன் இந்தியா என்று சீல் வைத்து, இந்தியாவிற்குள் அனுப்பி வைக்கிறது.
அதை பங்களாதேஷ் கண்டு கொள்வது இல்லை. அதன் எல்லை வழியாகத்தான் இந்தியாவிற்குள் போலி பொருள்கள் கொண்டு வரப்படுகிறது.
இது இந்தியாவின் நட்பு நாடு.
உலக அளவில் இந்திய பொருள்கள் தரமற்றவை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்ச்சிக்கும் சீனா நட்பு நாடா எதிரியா என்பதே தெரியவில்லை.
புரிந்து கொள்ள முடியாத புதிராக இருக்கும் நாடு. 1962 இல் இந்தியா மீது போர் தொடுத்த சீனா,
இப்போதைக்கு அமைதியாக இருந்தாலும், இந்தியா எங்கள் நட்பு நாடு என்று சொன்னாலும், இந்தியா மீது இன்னும் ஒரு யுத்தத்தை திணிக்க காத்திருக்கிறது என்பது தான் உண்மை.
காஷ்மீரில் அத்து மீறல், காஷ்மீர்வாசிகள் சீனாவிற்கு சென்றால் வெள்ளை காகிதத்தில் தனி விசா, நாகாலாந்து, அருணாச்சலபிரதேசம் என்று எல்லையோர வட மாநிலங்களை சொந்தம் கொண்டாடுவது என்பது எல்லாம் சீனாவின் வாடிக்கையாகி விட்டது.
இருந்தும் இந்தியா அமைதி காக்கிறது.
பாகிஸ்தான் .
சொல்வவே தேவை இல்லை. ஆனாலும் நட்பு கரம் நீட்டியபடியே இந்தியா இருக்கிறது. எப்போது புரிந்து கொள்வார்கள் இந்தியாவை.

No comments:
Post a Comment