நீங்கள் துலாம் ராசியில் பிறந்தவரா...!
சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சுதந்திர பிரியர்கள். விதிவழி வாழ்க்கை என்றாலும் மதியால் மாற்ற துடிப்பவர்கள்.
நீதி நேர்மை என்பது உங்கள் கோட்பாடாக இருந்தாலும், சில சமயம் அதில் இருந்து விலகி செல்வதுண்டு. பேராசை பெரும் நஷ்டம் என்பதை உணர்ந்தவர்கள். சாத்தியமானது எதுவோ .... அது உங்கள் சாய்ஸ்.
பெரிசாய் கற்பனை செய்து சின்னதாய் நடப்பதை விட, சின்னதாய் கற்பனை செய்து பெரிசாய் நடந்தால் சந்தோசம், இது உங்கள் அடிப்படை குணம்.
அதுமட்டுமா.... கிணற்றில் விழுந்ததை பற்றி கவலை படாதே. அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி குளித்துவிட்டு வா என்கிற முற்போக்கு சிந்தனையாளர்.
வாழு... வாழ விடு என்பதும் உங்களுக்கு பொருந்தும்.
விதி ஊழ்வினை என்பதில் இருந்து விடுபட நினைப்பவர். காலம் வரும் வரை காத்திருப்பது உங்களுக்கு பிடிக்காது. முன்னேற்றத்திற்கான முதல் அடி எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி, முயற்ச்சி செய் என்பது உங்கள் மூலதனம்.
ஆடம்பர பிரியர்கள். அலங்கார வஸ்துகளில் அதிக நாட்டமுண்டு. காக்கா மாதிரி கலரா இருந்தாலும், துக்கலா தெரியுறதுக்கு என்ன கலர்ல ஆடை உடுத்தணும் என்பதை அறிந்து வைத்திருப்பவர். அதனால் எப்ப பார்த்தாலும் பளிச்.
தர்ம குணமும், தயாள சிந்தனையும் உண்டு. உதவும் மனப்பான்மை கூடவே இருக்கும். அவனன்றி அணுவும் அசையாது என்று நம்புவதால் வர வேண்டியது வரும், வர வேண்டிய நேரத்தில் வரும்.
யாரையும் வாழ்த்தவில்லை என்றாலும், வீழ்த்த நினைப்பதில்லை. அதனால் ஊர் நிறைய உறவு கூட்டம் இருக்கும். பேச்சில் இனிமை, வார்த்தைகளில் லாவகம் இருப்பதால் எதிரிகள் கூட எளிதில் வசப்படுவதுஉண்டு .

வெளிப்படையாய் பேசினாலும் வெகுளி அல்ல. கண்டிப்பாய் பேசினாலும் முரட்டுத்தனம் இல்லை.
உற்ற உறவுகளே குற்றவாளி ஆனாலும் சுற்றம் என்று பார்ப்பதில்லை. குற்றம் குற்றம்தான் என்று வாதிடும் நீதிமான்கள். தர்ம தேவதை, தர்மத்தின் தூதுவன், என்றெல்லாம் போற்றப்படும் சனி பகவான் உச்சம் பெரும் ராசி.
தர்ம தேவதை கையில் வைத்திருக்கும் தராசு சின்னம்தான் உங்கள் ராசி அடையாளம்.
எல்லாம் பெரிய கடவுளை நம்புகிறவர். அதனால் வாழ்த்துவது சுலபம், வீழ்த்துவது கடினம்.
எல்லாம் பெரிய கடவுளை நம்புகிறவர். அதனால் வாழ்த்துவது சுலபம், வீழ்த்துவது கடினம்.
No comments:
Post a Comment