ads

Saturday, 10 March 2012

ஆமை புகுந்த வீடு ...!

எல்லாரும் சொல்றாங்க.  ஆமை புகுந்த வீடும், அமினா புகுந்த வீடும்  விளங்காதாம்.  
 
என்னடா இது.  அமினா சரி.... கோர்ட் உத்தரவை நிறைவேற்ற வருகிறவர்.  ஒரு வீட்டை, ஒரு நிறுவனத்தை, ஒரு தொழில்சாலையை மூடவோ, சப்த்தி செய்யவோ வருகிறவர்.  
 
கோவில்ல புகுந்து கொள்ளை அடிக்கிறவன் குருக்களுக்கு தட்சனையா கொடுப்பான்.  அந்த மாதிரி தான் அமினா கதையும்.  கோர்ட் என்ன சொல்லிச்சோ அதை அப்படியே செய்வார்.  
 
ஆனால் இந்த தம்மா துண்டு ஆமை.  ஒரு மனிதரின் வாழ்க்கையை புரட்டி போடுகிற அளவிற்கு வல்லமை வாய்ந்ததா?  ஆமை வந்துட்டா செல்வம் போய்டுமா.. செல்வாக்கு போய்டுமா,  குடும்ப வண்டி கொடை சாஞ்சுடுமா இதுதான் கேள்வி. 
 
நம்மை சுற்றி எத்தனயோ பழமொழிகள் உலா வருகிறது.  அடேய்... அவ நாலாவது பொண்ணுடா... நாதாங்கி முளை கூட மிஞ்சாது.  அட்ட தரித்திரம் பிடிச்சவ வேண்டாம்.  
 
வெள்ளி கிழமை ஆம்பிளை பிள்ளை பிறந்தால் கொல்லி கட்டையோடு தான் பிறக்கும். 
 
அதாவது......... பிள்ளை பிறந்ததும் வீட்டில் இருக்கிற பெருசுங்க எல்லாம் எமலோகத்துக்கு டிக்கெட் வாங்கிடுமாம்.
 
பூராடத்தில் பொண்ணு பிறந்தா உறவாடாது. 
 
இது என்னவாம்? 
 
பொண்ணு குறுகிய மனப்பான்மை உள்ள பொண்ணு.  தான் தன் சுகம்னு இருக்குமாம்.  கூட்டு குடும்பத்துக்கு சரியாய் வாராது என்கிறார்கள்.  
 
உண்மையா? 
 
அட நீங்க வேற.,  இது எல்லாம் ஒரு டுபாக்கூர் பழமொழி. இது எல்லாம் சும்மா.  எதுகை மோனையா சொல்ல நல்லா இருக்கும்.  நடைமுறை வாழ்க்கைக்கு சரியாய் வருமா?
 
ஆமை என்பது உயிர்.  ஒரு கடவுள் படைப்பில் அதுவும்  ஓன்று.  ஆமை ஒன்றும் கேவலமான படைப்பு இல்லை.  300 வருடங்களுக்கு மேல் உயிர் வாழும் திறன் படைத்து.  

நீரிலும், நிலத்திலும் வாழும் தன்மை அதற்கு உண்டு. அவ்வளவு ஏன்..... தசாவதார நாயகன் விஷ்ணு பகவான் கூட கூர்ம  அவதாராம்  எடுத்திருக்கிறார். 
 
நிலைமை இப்படி இருக்க ஆமையை வைத்து இப்படி சொல்வது சரியா? 
 
தப்பு தப்பு...  
 
ஆமையின் இயற்கை குணம் என்ன? 
 
இயல்பாகவே மறைந்து வாழும் குணம் உள்ளது.  குப்பை கூளம் எங்கே இருக்கிறதோ அங்கே மறைந்து வாழும். 
 
அது வீடு வரை  வருகிறது என்றால்... அந்த வீடு சுத்தம்  இல்லை.  சுகாதாரம் இல்லை.  அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு வீட்டை எப்படி பராமரிக்கிறது என்று தெரியவில்லை என்று அர்த்தம்.  
 
அப்படி பட்ட வீடுகள் என்னதான் செல்வ செழிப்பாய் இருந்தாலும் ஒரு நாள் ஒளி இழந்துதான் போகும்.   
 
உண்மையில் ஒரு பழமொழி அப்படியே பலிக்கிறது என்றால் இதுதான்.  எருக்கு முளைச்ச மனையும், எதுக்கும்  உதவாத துணையும் விளங்காது.  
 
எருக்கு இருக்கே... அது ஒரு மனையில் முளைக்க கூடாது.  அதிலும்  வெள்ளெருக்கு இருக்கே... ரொம்ப டேஞ்சர்.  

அது எங்காவது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் முளைக்கும்.  அது ஒரு மனையில் முளைத்தால் நிச்சயம் அந்த வீடு நாளடைவில் வம்சம் தழைக்க வாரிசு இல்லாமல் போகும்.  

ஆனால் ஆமை கதை அப்படி இல்லை.  இதை ஒரு வீட்டில் நில்லாமை நிலையாமை, பொறமை, கல்லாமை நுழைந்து விட்டால் அந்த வீடு விளங்காது என்று கூட சொல்வார்கள்.  ஒரு வேலை இந்த ஆமை தானோ.


 
உண்மைதானே.    
 
 

 

3 comments:

  1. கல்லாமை...நில்லாமை...பொறாமை...சரிதான்...இந்த ஆமைதான்...

    அப்படியே word verification எடுங்கள்...கமெண்ட் போட கஷ்டமா இருக்கு

    ReplyDelete
  2. மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் பதிலால்

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...