காதலிக்கிறான்..
நட்ட நடுப்பகலில்
மொட்டை மணல் பரப்பில்
சுட்ட நினைவின்றி
சூரிய குளிர் தாங்கி
நிற்கிறானே.....
அவள் வரவுக்காக
அவன் காதலிக்கிறான்.
அவன் காதலிக்கிறான்
நீண்ட இரவுகளில்
நீல வான ஓடைதனில்
நீந்தும் முழு நிலவின்
சுடும் வெப்பம் தாங்கவில்லை
விடிந்தால்தானே
என் விடிவெள்ளி
வருவாள் என்று
தூங்காமல் தவிக்கிறானே
அவன் காதலிக்கிறான்.....
நட்ட நடுப்பகலில்
மொட்டை மணல் பரப்பில்
சுட்ட நினைவின்றி
சூரிய குளிர் தாங்கி
நிற்கிறானே.....
அவள் வரவுக்காக
அவன் காதலிக்கிறான்.
அவன் காதலிக்கிறான்
நீண்ட இரவுகளில்
நீல வான ஓடைதனில்
நீந்தும் முழு நிலவின்
சுடும் வெப்பம் தாங்கவில்லை
விடிந்தால்தானே
என் விடிவெள்ளி
வருவாள் என்று
தூங்காமல் தவிக்கிறானே
அவன் காதலிக்கிறான்.....
என்ன திடீர்ன்னு காதல் கவிதைன்னு நினைக்கிறிங்களா. எல்லாம் காரணமாத்தான். நீங்க லவ்பன்றின்களா. உங்க காதல் எத்தனை சதவிகிதம் உண்மையானது என்பதை கண்டு பிடிப்போமா.
அதுக்கு கிழே உள்ள கேள்விகளுக்கு எதாவது ஒரு பதிலை தேர்ந்து எடுக்கணும். அதுக்கு தகுந்த மாதிரி மார்க். நான் ரெடி... நீங்க ரெடியா?
என் நித்திய கடமைகளில் ஓன்று.
1 . காலை எழுந்ததும் ஒரு ஹாய் சொல்லி மேஜெஸ் அனுப்புவேன்.
2 . நானா அனுப்புறது இல்லை. அனுப்பினா அனுப்புவேன்.
3 . சாரி... எனக்கு அந்த பழக்கம் இல்லை.
நான் ஒரு பொருள் வாங்கினால்
1 . வாங்கட்டுமா என்று ஆலோசனை கேட்பேன்.
2 . வாங்கின பிறகு சொல்லுவேன்.
3 . இதெல்லாமா போய் சொல்லுவாங்க. நான் சொல்ல மாட்டேன்.
பிரச்சனைகளுக்கு தீர்வு
1 . அவளுக்கு ஒரு பிரச்சனை என்று தெரிந்தால் உடனே தீர்க்க முயல்வேன்.
2 . நாமாக கேட்பது நாகரிகம் இல்லை என்று அமைதியாக இருப்பேன்.
3 . அது அவங்க பிரச்சனை. நாம கண்டுக்க கூடாதுன்னு விட்டுடுவேன்.
சந்திப்பு
1 . கணக்கெல்லாம் இல்லை. சந்தர்ப்பம் கிடைச்சா மிஸ் பண்ணாம கண்டிப்பா சந்திப்பேன்.
2 . வாரத்தில் ஒரு நாள் மட்டும்.
3 . அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. நான் பிரியா இருந்தால் மட்டும் சந்திப்பேன்.
பரிசு
1 . வளையல், மணி, பர்ஸ் , கொலுசு இப்படி.... சின்ன சின்னதா பரிசு பொருள் வாங்கி கொடுத்து அடிக்கடி அசத்துவேன்.
2 . பிறந்த நாளுக்கு மட்டும் தான்.
3 . இப்போ லவ் தானே. கல்யாணத்துக்கு அப்பறம் பார்க்கலாம்.
பேசும் போது
1 . நேரில் சந்திக்கும் போது எங்கள் எதிர்காலம் பற்றிதான் அதிகம் பேசுவேன்.
2 . அந்த சமயத்தில் உள்ளதை பற்றி தான் பேசுவேன்.
3 . அவள் அழகை பற்றிதான் அதிகம் பேசுவேன்.
பகிர்ந்து கொள்ளுதல்
1.எனது அன்றாட நிகழ்வுகளை பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லுவேன்.
2 . அவசியம் ஏற்பட்டா சொல்லுவேன்.
3 . அதெல்லாம் இல்லை.
அவள் விருப்பம்
1.என் தனிப்பட்ட பழக்கங்கள் பற்றி சொல்லும் கருத்துக்களை ஏற்று கொள்வேன், ( உதாரணம்: சிகரெட் பிடிக்காதிங்க... தண்ணி அடிக்காதிங்க...)
2 . எப்போதாவது கேட்பது உண்டு
3 . நான் கண்டுக்கிறதே இல்லை.
தவறாமல் செய்வது
1 . காலை மாலை போன் செய்யாமல் இருந்தது இல்லை
2 . பேசினா பேசுவேன்.
3 . காரணம் இருந்த மட்டும் பேசுவேன். இல்லைனா இல்லை.
அறிமுகம்
1 .என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிமுகம் செய்து வைப்பேன்.
2 . இப்ப அதற்கு அவசியம் இல்லை.
3 . அப்படியெல்லாம் இல்லை.
மேலே உள்ள கேள்விகளில் நீங்கள் ஒன்றை தேர்ந்து எடுத்து இருந்தால் அதன் மதிப்பு 10
இரண்டை தேர்ந்து எடுத்து இருந்தால் அதன் மதிப்பு 5
மூன்றை தேர்ந்து எடுத்து இருந்தால் அதன் மதிப்பு 3
உங்கள் மார்க் 70 க்கு மேல் இருந்தால் உங்கள் காதல் ஆழமானது, உண்மையானது, உங்கள் காதலி ஒரு அதிர்ஷ்டசாலி.
உங்கள் மார்க் 50 க்கு கீழ் என்றால், நீங்கள் இன்னும் தீவிரமாக காதலிக்க வில்லை என்று அர்த்தம்.
உங்கள் மார்க் 30 . 35 என்றால் உங்கள் காதல் ஒரு டைம் பாஸ் தான். அதில் உண்மை இல்லை.
No comments:
Post a Comment