Follow by Email

Saturday, 3 March 2012

காதல் ரொமான்ஸ் ரெண்டும் ஒன்றா?

கொடுக்கல் வாங்கல் வியாபாரத்தில் மட்டும் இல்லை.  மனித வாழ்க்கையிலும் உண்டு.   அன்பை கொடுத்து அன்பை வாங்குவதுதான் வாழ்க்கை.  அன்பில்லாத மனசு அரக்கனுக்கு சமம்.

சிறியவர்கள் பெரியவர்கள் மேல் வைப்பது அன்பு.  பெரியவர்கள் சிறியவர்கள் மேல் வைப்பது பாசம்.  ஆண் பெண் இருபாலாருக்கு  இடையே வருவது நேசம். அதைத்தான்  காதல் என்கிறார்கள்.

காதல் என்பதே கவனித்தல் என்றுதான் அர்த்தம்.  காணமல் போன நம்மை வேறு ஒருவரிடம் கண்டு பிடிப்பது காதல் என்பார்கள்.  மனித வாழ்க்கையில் இந்த காதல் மட்டும் இல்லாமல் போயிருந்தால்,  மனிதன் மிஷினாக தான் இருந்திருப்பான்.

தன்னை அழகு படுத்தி கொள்ள ஆசை வராது.  அலங்கரித்து கொள்ள நாட்டம் இருக்காது.  என்னை பொறுத்தவரை காதல் என்பது தன்னை நேசிக்க வைப்பது.

காதல் மாதிரியே ரொமான்ஸ் என்பதும் தவிர்க்க முடியாத ஓன்று.  ரொமான்ஸ்க்கு அர்த்தம் கேட்டேன் என் தோழியிடம்.  அது கட்டில் சமாச்சாரம் என்று கண்ணடித்தாள்.  

பலர் இப்படித்தான் நினைக்கிறார்கள்.  இது தவறு.  

சரி.... காதலும் ரொமான்ஸ்சும் ஒன்றா அல்லது இரண்டும் வேறு வேறா?

ஒன்றோடு ஓன்று இனைந்தது.  

காதல் என்பது உணர்ச்சி மயமானது. உந்துதல் சக்தி நிறைந்தது.  தான் தன் சுகம் என்ற கோணத்தில் யோசிக்க வைப்பது.  தனக்கே தனக்கு என்று நினைக்க வைப்பது.  தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பார்ப்பது.

ரொமான்ஸ் என்பது அப்படி அல்ல. வேடிக்கை, வினோதம், சிரிப்பு, சந்தோசம் நிறைந்தது.  அய்யோடா..... என்று திகைக்க வைப்பது.  காதல் வானில் சிறகுகள் விரித்து, வான வீதியில் பறக்கவா என்று, சொல்லாமல் சொல்ல வைப்பது.

காதலிக்க நேசம் நிசமானது என்று  தெரிந்தால் போதும். ஆனால் ரொமான்ஸ் அப்படி அல்ல.  இங்கு பேச தெரிய வேண்டும்.  சின்ன விஷயத்தை  சினிமா படம் போல், விவரிக்க தெரிய வேண்டும்.

நேற்று நீலக்கலர் சுடிதார் போட்டு இருந்தே தெரியுமா? சூப்பர்.  அப்படியே வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை மாதிரி இருந்தே.  அதிலும் காது ஓரத்தில் குத்தி இருந்த ரோஜாப்பூ.....அடடா... என்ன சொல்றதுன்னே தெரியலை  கலக்கிட்டே போ.  கலவரப்படுத்த தெரிய வேண்டும்.

நான் ரோட்டில் நடந்து வந்துகிட்டு இருந்தேனா...எதிர் பக்கம் போகலாம்னு நினைச்சேன். டக்குன்னு ரோட்டை கிராஸ் பண்ணினேன்.  திடீர்ன்னு ஒரு கார் வேகமா வந்துடிச்சு.

அய்யய்யோ... அப்பறம்.

நான் டக்குன்னு கட் பண்ணி ஓரத்திலே விலகிட்டேன்.  இப்படி விவரிக்க தெரிய வேண்டும்.  இவர் கிட்டே பேசிக்கிட்டு இருந்தா நேரம் போறதே தெரியலை என்று நினைக்க வைக்க வேண்டும்.

அடேய் ... என் ராஜ குமாரா.. அப்படியே என்னை அள்ளிக்கோ,  கட்டி பிடி, இறுக்கி அணை,  மூச்சு முட்டுற மாதிரி நெருக்கு என்று உருக வைக்க வேண்டும். 

இன்று பெரும்பாலும் வாழ்க்கை கசந்து போவதற்கு என்ன காரணம்?  பெரும்பாலான மன முறிவுகளுக்கு காரணம் தான் என்ன? 

எதிலும் ஒட்டுதல் இல்லாதவர்கள்.  நான் அப்படித்தான் என்று ஒரு தலை பச்சமாக நினைப்பவர்கள். நீதான் புரிஞ்சு நடந்துக்க வேண்டும் என்று நினைப்பவர்களாக இருப்பார்கள்.

ஒரு நாட்டின் மீது குண்டு வீசி விட்டு,  பின் உட்க்கார்ந்து பேசி கொள்ள முடியும் என்றால், ஒருவரோடு ஒருவர் பேசி பழகியவர்கள், ஒரே வீட்டில்  இருந்து குடும்பம் நடத்தியவர்கள், மன வேற்றுமையை தீர்க்க முடியாதா?

பொதுவாக உறவுகள் மேம்பட பாராட்டும் பரிசும் முதல் இடத்தில் இருக்கிறது.  மனைவியை சந்தோசப்படுத்த வைர முக்குத்திதான் வேண்டும் என்றில்லை. 

இன்னைக்கு நீ வச்ச ரசம் சூப்பர்ன்னு சொல்லிபாருங்கள்.  சந்தனகலர் புடவையில கலக்குற போன்னு வர்ணித்து பாருங்கள்.   சும்மா நாய் குட்டி மாதிரி சுத்தி சுத்தி வரும்.

ஒரு உண்மையை சொல்ல போனால்..  மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

நான் உன்னை நேசிக்கிறேன்... நீ என்னை நேசிக்கிறாய்...பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்திருக்கிறோம் என்று நினைப்பவர்கள்.

நான் 100 % சுத்தமானவன்.  என் அன்பு உண்மையானது.  நீ அப்படி அல்ல.  போலியாக பழகி, போலியாக சிரித்து,  போலியாக வாழ்பவர்கள் என்று நினைப்பவர்கள்.

இன்னும் சிலர் உன் அன்பு நிஜம். அதில் போலி இல்லை.  என்றாலும் என்னால் அப்படி இருக்க முடியவில்லை.  என்று நினைப்பவர்கள்.

இன்னும் சிலர் என்னிடம் இருந்து என்ன வேண்டும்?  உன்னிடம் இருந்து என்ன தருவாய் என்று ஆதாய கணக்கு பார்ப்பவர்கள்.

நீங்கள் எந்த ரகம்?

நீங்கள் முதலாம் வகை என்றால் சபாஷ்.

இரண்டாம் வகை என்றால் உங்களுக்களுக்கு என் அனுதாபங்கள். 

முன்றாம் வகை என்றால்.... நீங்கள் திருந்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

கடைசி வகை என்றால் இது வாழ்க்கை.  வியாபாரம் அல்ல.     


No comments:

Post a Comment