இதுதான் என் கடைசி பிள்ளை ஜாதகம். நல்லா கணிச்சு, குடும்ப பலனை சொல்லுங்க ஜோசியரே - ஒரு அப்பாவி அப்பாவின் வார்த்தை இது.
ஜாதகத்தை கையில் வாங்கிய ஜோசியரும், கணக்கு போட்டு, கிரகநிலைகளை ஆராய்ந்து, ஐம்பது வருஷத்துக்கு முன்பே பிறந்த அப்பா அம்மாவில் இருந்து, பத்து வருஷத்துக்கு முன்பு பிறந்த சகோதர சகோதரிகள் தலை எழுத்து வரை சொல்ல துவங்கினார்.
நன் கேள்வி இதுதான். இது சரியா? எப்படி சாத்தியமாகும்?
பத்தும் பத்தும் இருபதுன்னா கணக்கு சரி. பத்தும் பத்தும் பத்தொன்பதுன்னா எப்படி ஒத்து கொள்வது?
இந்த பழக்கங்கள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. நம் பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்தே கடைசி பிள்ளை ஜாதகம் குடும்பத்துக்கே பேசும் என்கிறார்கள்
எப்படி?
வருடம் தோறும் நிகழும் குரு பெயர்ச்சியோ , இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சனி பெயர்ச்சியோ சரி இல்லை, அல்லது ஜாதகத்தில் பாதக திசை நடப்பில் இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.
கிரகங்கள் என்ன செய்யும்? வயதுக்கு தகுந்த மாதிரி பலனை தரும்.
வயதில் மூத்தவர் என்றால் குடும்பத்தாரின் அன்பு கிடைக்காமல் செய்ய பார்க்கும். ஒதுக்கி ஓரம்கட்டும். இதுநாள் வரை குடும்பத்தையே கட்டி காத்தவர்கள், குடும்ப சூழலில் எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல முயலுவார்கள்.
ஆனால் வளர்ந்த பிள்ளைகளோ வார்த்தையால் கொட்டும். வயசுதான் போச்சு. வாயை மூடிகிட்டு சும்மா இருந்ததால் என்ன? என்பார்கள். பெரிசுகளின் மனம் தவிக்கும்.
அதுவே நடுத்தர வயது என்றால்.... நடப்பதே வேறு. வேலையில் தொல்லை, வேண்டாத சிந்தனை, முயற்ச்சியில் தடை, முன்னேற்ற குளறுபடி, குடும்ப குழப்பம், நண்பர்கள் உறவுகள் பிரிவு, விருந்துக்கு வைத்திருக்கும் பணம் மருந்துக்கு செலவாகும் அவலம் என்று பலன்கள் இப்படி இருக்கும்.
வாலிபத்தில் இருப்பவர்களுக்கு என்ன செய்யும்? அதுவும் படிப்பவராக இருந்து விட்டால் கதையே வேறு.
அஜித் படம் வந்து இருக்கு. முதல் ஷோ எப்படியும் பார்த்துடணும், குமார் வா மச்சி ஒரு சேதி இருக்குன்னு சொன்னான், போய் பார்க்கணும்.
கூட படிக்கிற அகிலாவும் நல்லா இருக்கு, அனுஷாவும் நல்லா இருக்கு. யாரை கரைக்ட் பன்றதுன்னு தெரியலை... இப்படியே அவர்கள் சிந்தனை படிப்பை தவிர மற்றவற்றில் தான் இருக்கும்.
ஆக ...... தனிப்பட்ட முறையில் அவர்கள் வாழ்க்கையை தான் கிரகங்கள் இயக்கி கொண்டிருக்கும். இது சரிதானே.
சரி..
ஆனால் பெற்றோரை சார்ந்து வாழும் கடைசி பிள்ளை, அப்பாவின் தலை எழுத்தை மாற்ற முடியுமா?
முடியாது ..... முடியாது.....முடியாது....
பொதுவா ஒரு விஷயம் இருக்கு. யோகம் இல்லாத தந்தைக்கு யோகமான பிள்ளை பிறக்காது. அப்படி பிறந்து விட்டால் அந்த குழந்தை அவருடன் இருக்காது.
பொதுவாக அப்பா அம்மாவின் ஜாதகத்தை ஒட்டியே பிள்ளைகளின் ஜாதக அமைப்பும் இருக்கும்.
காரணம்... பிள்ளைகள் சம்பாதிக்க போறதில்லை, குழந்தைக்கு என்று தனிப்பட்ட குடும்பம் இல்லை. தொழில் வளச்சி இல்லை.
அந்த வகையில் அப்பா நல்லா இருந்தால்........பிள்ளையும் சந்தோசமாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளை அப்பா பூர்த்தி செய்வார்.
அப்பா கஷ்ட்ட பட்டால், அவர் கடன் பட்டால் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. அப்போது பிள்ளைகளும் கஷ்ட்ட சூழலை சந்திக்க நேரிடும். இதுதான் எதார்த்த உண்மை.
வாழ்க்கை என்பதே ஒரு வட்டம். எவ்வளவு பெரிய வட்டமாக இருந்தாலும் ஒரு இடத்தில் வந்து முட்டும்.
இது தான் வாழ்க்கை சூத்திரம். ஒருவரின் தலை எழுத்தை ஒட்டியே மனைவி வருவாள். அவர்கள் ஜாதக அமைப்பை பொறுத்தே பிள்ளைகள் பிறக்கும். இதுதான் உண்மை.
ஒருவரின் தலை எழுத்தை ஒட்டியே மனைவி வருவாள். அவர்கள் ஜாதக அமைப்பை பொறுத்தே பிள்ளைகள் பிறக்கும். இதுதான் உண்மை.
படிக்காத அப்பாவிற்கு அறிவாளி பிள்ளை பிறக்கும். இது பிள்ளையின் ஜாதக அமைப்பு.
ஏழையாக பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாகவே இறந்து போன அப்பாவிற்கு, பிறந்த பிள்ளை வளர்ந்து வசதியாக வாழ்வான். காரணம் அவன் ஜாதக அம்சம்.
100 வயது வாழும் அப்பாவிற்கு அற்பாயுள் குழந்தை பிறந்து இறக்கிறது. அது அந்த குழந்தையின் ஜாதகம்.
ஆக.... பிறக்கும் ஒவ்வொருவருக்கும் தனி தனி ஜாதக அமைப்பும், கிரக நிலவரமும், தசா புத்தியும் வருகிறது. அதன் படியே அவர்கள் வாழ்க்கை பாதை போகும்.
பிள்ளைகளுக்கு வரும் யோகம் மற்றும் அவயோகம் என்பது அப்பாவின் ஜாதகத்தை ஒட்டியே இருக்குமே தவிர.... பிள்ளைகளின் ஜாதகம் குடும்பத்தையே மாற்றி அமைக்காது. அதனால் கடைசி பிள்ளை ஜாதகம் குடும்பத்துக்கே பேசும் என்பது அபத்தம்.

Super
ReplyDelete