நீங்க தனுசு ராசியா?
குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர் என்று அர்த்தம். ஆனாலும் நீங்க ஒரு தினிசு. அதாவது பிடிவாத குணம் கொண்டவர்கள். வெள்ளை காக்காய் மல்லாக்க பறக்குதுன்னா ஆமாம் காலு கூட மேலாக்க இருக்குன்னு சொல்லணும்.
இல்லைன்னா ...
கோவம்தான். எளிதில் உணர்ச்சி வசப்படுவீங்க. உங்களுக்குள்ள... ஒரு சிங்கம், ஒரு புலி, ஒரு கரடி, ஒரு எரிமலை தூங்குமாம். அது எப்போ வெடிக்கும், எப்போ கடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
ஆனாலும் தப்பான ஆட்டத்தை ஆட எப்போதுமே உங்களுக்கு பிடிக்காது. குறி வச்சா பொறி வச்ச மாதிரிதான். வச்ச குறி தப்பாது.
நீங்கள் கம்பீரமானவர். அடங்கி போவதும், அடி பணிவதும் கொஞ்சம் சிரமம். உரத்த குரலில் பேசுவதும், மற்றவரை ஊடுருவி பார்ப்பதும் உங்கள் மேனரிசம்.
அதுவும் இருட்டை ஒளி ஊடுருவி பார்ப்பது போல், மற்றவர் மனதை பார்ப்பவர்.
இன்னும் விளக்கமா சொல்லனும்னா... தண்ணிக்குள்ளேயே தடம் பார்க்குற ஆசாமி நீங்க தான் சாமியோவ்.
முன் கோவம், பின் சாந்தம் கொண்டவர்கள். சரவெடி மாதிரி பேசிட்டு சாவகாசமா உட்கார்ந்து யோசிப்பிங்க.
எப்படி?
கொஞ்சம் ஒவராத்தான் பேசிபுட்டோமோ......
அது சரி...
இருப்பினும் அன்பும் ஆன்மீகமும் சம பங்கு நிறைந்த்தவர்கள். உங்கள் வாழ்க்கை பாதையை எல்லாம் வல்ல இறைவனே வகுப்பதாய் நம்புகிறவர்.
மனிதர்களை நேசிப்பது மாதிரி பகவானிடம் யாசிப்பவர்கள். விதியை நம்புகிற உங்களுக்கு எதிரான சதி வலைகள் எடுபடுவதில்லை.
வாழ்க்கையில் எது வந்தாலும் இவ்வளவுதான் நம்ம குடுப்பினை என்றில்லாமல் போராடுவீங்க. ஆசைப்பட்ட வாழ்க்கையை ஓசைப்படாமல் அனுபவிக்க என்ன விலை கொடுக்கவும் தயங்காதவர்கள்.
வண்ணங்கள் இல்லாமல் வானவில் கூட தோன்றலாம். ஆனால் உங்கள் எண்ணங்கள் இருக்கிறதே ... அடடா.... பிரமாதம் போங்க.
உங்கள் வாழ்க்கை பாதையில் எப்போதும் புதுமைகள் பூத்திருக்கும். சவால்கள் காத்திருக்கும். அதை சந்தித்து, பின் சிந்தித்து சரித்திரமாக வாழும் உங்களுக்கு வாழ்க்கை என்பது நடிப்பல்ல. உயிர் துடிப்பு.
நீங்கள் நல்லவர்தான். நல்லவனாய் மட்டும் இருக்க கூடாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இளகிய மனதும் உண்டு.
உங்களை பற்றி நான் ஒரே வரியில் சொல்லுவேன். பாம்பை முட்டியில் கொல்லனும். புலியை குட்டியில் கொல்லனும் என்பதை புரிந்து வைத்திருப்பவர்.
ஆனாலும் ஒரு பழமொழி இருக்கு தெரியுமா....எல்லாருக்கும் பலன் சொல்லுமாம் பல்லி. கழனி பானையில் விழுந்துச்சாம் துள்ளி. அந்த கதையா உங்ககிட்டே காரியம் ஆகணும்ன்னா காக்கா பிடிச்சா போதும் கைமேல் பலன்.
ஈசியா எமாந்துடுவீங்க. உங்களிடம் இருக்கும் குறையே இதுதான்.
நான் ஒன்னு சொல்லவா... தனுசு ராசியில் பொண்ணு பிறக்க கூடாது, மீன ராசியில் ஆண் பிறக்க கூடாது.
எங்க?
ரெண்டுமே குருவின் வீடுதான்.
ஆனால் தனுசு என்பது கம்பீரம்.
மீனம் என்பது அமைதி.
தனுசு என்பது பிடிவாதம்.
மீனம் என்பது அனுசரிப்பு.
தனுசு என்பது முரட்டுத்தனம்.
மீனம் என்பது சாந்த குணம்.
தனுசு என்பது ஆண்மை.
மீனம் என்பது பெண்மை.
தனுசு ராசியில் பிறக்கும் பெண்ணுக்கு விட்டு கொடுக்கும் குணம் இருக்காது. ஆனால் மீன ராசி பெண் குடும்ப குத்து விளக்கு மாதிரி ரொம்ப அமைதி. அதுனால் தான் அப்படி சொன்னேன்.
No comments:
Post a Comment