சிந்தனை 1
நான் வாழ்கையில் நிறைய சம்பாரிச்சு கோடிஸ்வரனா மாறனும்.

ஏன்?
பணம் இருந்தால் தான் எல்லாரும் மதிப்பாங்க.
அப்படியா? அப்ப நீங்க பணத்தை மதிக்கிறிங்களா... மனிதனை மதிக்கிறிங்களா..?
இது என்ன கேள்வி?
இல்லை.... பணத்தை மதிக்கனும்னா... வைரமுத்து சொல்ற மாதிரி திருப்பதி வெங்கடாசலபதியை கும்பிட வேண்டிய அவசியம் இல்லை. திருப்பதி உண்டியலை கும்பிடலாம். பணத்தை மதிக்கனும்னா மகலக்ஷ்மியை கும்பிட வேண்டிய அவசியம் இல்லை. பணம் அடிக்கிற நாசிக் மிஷினை கும்பிடலாம்.
என்ன சொல்ல வர்றீங்க?
சரி... பணம்னா எத்தனை கோடி வேணும்? ஒரு ரூம் நிறைய பணத்தை அடுக்கி வச்சுட்டா.... உங்களுக்கு நிம்மதி இருக்குமா? பயம் வந்துடாதா? பணத்தை எப்படி பாதுகாக்கிறதுன்னு.
அய்யய்யோ... திருடன் வந்துடுவானோ, யாராவது திருடிக்கிட்டு போயிடுவானோ, யாருக்காவது தெரிஞ்சு போய்டுமோன்னு பயந்தே சாக வேண்டி வரும் தெரியுமா?
சரிங்க... ஓடி ஓடி சம்பாரிச்சு நிறைய பணம் இருக்கு. ஆனால் பணம் சம்பாதிக்கிறதுல குறியா இருந்ததுனால ஆரோக்கியத்தை கவனிக்கலை. உடம்பு பூரா நோய் வந்துட்டு.
டாக்டர் அதை சாப்பிடாதே... இதை சாப்பிடாதேன்னு 1008 கண்டிசன் போடுரார்ன்னு வச்சுக்குவோம். இப்போ அந்த பணத்தை வச்சு என்ன செய்றது.
ஒரு உண்மை தெரியுமா? உலக கோடிஸ்வரன் பில்கேட்ஸ் காலைல நியுயார்க்குல கண் முழிச்சு, மதிய சாப்பாட்டை லண்டன்ல சாப்பிட்டு, நைட் பாரிஸ்ல தூங்குறார்.
ஆனால் அவர் ரொம்ப சந்தோசமா இருக்கார்ன்னு நினைக்கிறிங்களா. சரியாய் தூங்காமல், பிளைட்டுல அசௌகரியமா படுத்து, அங்க கொடுத்ததை சாப்பிட்டு, மிஷின் மாதிரி வாழ்ந்து கிட்டு இருக்கார்.
ஆனால்... அவர் கிட்டே வேலை செய்யுற சாதாரண மேனேஜர் ஒன்பது மணிக்கு வேளைக்கு வந்து, ஜாலியா வேலை பார்த்துட்டு, மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டு, ரெண்டு மணிவரைக்கும் ரெஸ்ட் எடுத்துட்டு, பின் வேலை பார்த்து, அஞ்சு மணிக்கு வீட்டு போய், பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு சினிமாவுக்கு போய், ராத்திரி பத்து மணிக்கு பொண்டாட்டியை கட்டி பிடிச்சுக்கிட்டு தூங்குறார்.
இப்போ சொல்லுங்க யாரு சந்தோசமா இருக்காங்க. உலக கோடிஸ்வரன் பில்கேட்ஸ்சா.... அவர் கிட்டே வேலை செய்ற சாதாரண மேனேஜரா?
சிந்தனை 2
வாங்க சார்... எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கேன்.
கைல என்ன பேக். திருச்சி சாரதாஸ் போயிட்டு வர்ற மாதிரி இருக்கு.
எனக்கு சட்டை எடுத்தேன். ரொம்ப காஸ்ட்லி.
அப்படியா? என்ன விலை....
1500 ரூபா.
ஓ... இந்த சட்டை யாருக்கு?
எனக்குதான்.
இல்லையே ....வேற யாருக்கோ.
இல்லை. இது எனக்குத்தான்.
அட போங்க சார்... நீங்க 2000 ரூபாய்க்கு சட்டை எடுத்தாலும் அது உங்களுக்கு இல்லை. எங்களை மாதிரி ஆளுங்க பெருமையா நினைக்கனும்மு போடுறிங்க. நீங்கன்னு இல்லை. எல்லாருமே இப்படித்தான்... மத்தவங்க பெருமையா நினைக்கணும்னு தான் பெரும்பாலும் செய்யுறோம். புரியுதா?
சிந்தனை 3
நான் யார் தெரியுமா? நான் என்ன படிச்சு இருக்கேன் தெரியுமா?
ஓ... ரொம்ப படிச்சவரா...
ஆமாம் மாஸ்டர் டிகிரி.
சந்தோசம். எனக்கு ஒரு சந்தேகம்.... படிப்புன்னா என்ன சார்.
இது கூட தெரியாதா?
இல்லை எனக்கு தெரிஞ்ச வரை படிப்புங்குறது மேச்சிங்.
அப்படின்னா...
அந்த புத்தகத்துல உள்ளதை இந்த பேப்பர்ல சரியா எழுதி இருக்கிங்களான்னு சரி பார்க்கிறதுதான் படிப்பு.
ஆனால் உலக அறிவை கத்துகனும்னா ... வெளி உலகத்துக்கு தான் வரணும். தெரியுமா. நாம சந்திக்கிற ஒவ்வொரு மனிதனும் வாத்தியார். ஒவ்வொரு சம்பவமும் அறிவு. ஒகே.

No comments:
Post a Comment