ஒரு நதியை பார்க்கும் போது நேற்றிருந்த நதியே இன்றும் இருப்பதாய் தோன்றுகிறது.
ஆனால் நேற்றிருந்த நீர் திவலைகள் ஒன்றாவது இப்போது இல்லை.
ஒரு சுடர் எரிவதை பார்க்கும் போது ஒரே சுடர் எரிவதாய் தோன்றுகிறது.
அல்ல ...
ஒரு கணத்தில் எறிந்த சுடர் அடுத்த கணத்தில் இல்லை.
இந்த உலகத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருக்கிறது.
இந்த மாற்றத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஏற்றுக் கொள்ளவேண்டும்.
மாறிக் கொண்டே இருப்பதுதான் இயற்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
.................................................................................................................................................................
எனக்கு தெரியாது... ஒரு வேளை இல்லாமலும் இருக்கலாம்.
அப்படியானால் கடவுள் இல்லையா?
எனக்கு தெரியாது...ஒரு வேளை இருக்கலாம்.
உங்களுக்கு இந்த ஆராய்ச்சி தேவையில்லை.
ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
நல்லது... நன்றி...
ReplyDelete