ads

Tuesday, 11 December 2012

பிரபு தேவா பேட்டி



பரபரப்பான வாழ்க்கை. கடிகார முள்ளோடு போட்டி போட்டுக்கொண்டு ஆரம்பமாகிறது இவரது காலை பொழுது. 

டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி, நடன நடிகராகி, பின் கதாநாயகனாகவும் மாறி, இப்போது வெற்றி கரமான திரைத்துறை இயக்குனர். அது பிரபு தேவா. அவர் அளித்த விறு விறு பேட்டி.

நடன இயக்குனாராக சினிமா உலகில் நுழைந்தீர்கள். ஒரு நடிகராக பரிணாமம் பெற நீங்கள் எவ்வளவு தூரம் உழைத்தீர்கள் அதை பற்றி சொல்லுங்களேன். 

சினிமாத்துறையை பொறுத்தவரை யாராக இருந்தாலும் ஆரம்பம் அப்படி ஒன்றும் பிரமாதமாக இருக்காது. நான் திரைத்துறைக்கு வந்த காலத்தில் எந்த இயக்குனராக இருந்தாலும் சொதன்னை முயற்சியில் தயக்கம் காட்டியவர்கள்தான் அதிகம். 

ஒரு ஆக்சன் ஹிரோவை  வைத்து படமெடுப்பவர், அவரை  வித்தியாசமான ரோலில் நடிக்க வைக்க யோசிப்பார்.  எதற்கு இந்த விஷ பரிச்சை என்ற எண்ணம் தான் காரணம். எனக்கும் அதுதான் நடந்தது. 

ஆரம்ப கால என் படங்களே அதற்கு சாட்சி. வசனம் பேசியதை விட பாட்டு காட்சியில் ஆடியதே அதிகம். முதல் ஐந்தாறு படங்கள் அப்படித்தான் வந்தது.  அதன் பிறகுதான் பிரபு தேவாவிற்கு நடிக்கவும் நடிக்கவும் தெரியும் நம்பினார்கள். (சத்தமாக சிரிக்கிறார்) 

ரசிகர்களை பொறுத்தவரை என் வித்தியாசமான நடனத்தையே விரும்புகிறார்கள் என்பதயும் புரிந்து கொண்டேன்.  நடனத்தோடு நடிப்பையும் கவனம் செலுத்தினேன். 

வாழ்க்கையில் வருத்தப்பட்ட சம்பவங்கள், அவமான  சம்பவங்கள், புண்பட்ட சம்பவங்கள்?

சிலவற்றை சொல்லலாம். அதை அவமானம் என்று சொல்ல தேவையில்லை. விபரம் வேண்டாமே.

என்னை பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டவே விரும்புகிறேன்.

உங்கள் நடனத்தை பற்றி?

முறைப்படியான எந்த நடன அசைவுகளையும் நான் பின்பற்றுவதில்லை. பாரத நாட்டியத்தை தவிர வேறு எந்த நாட்டியத்தையும் முறையாக கற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் என் நடன காட்சிகளில் எல்லா நடன நுட்பங்களையும் புகுத்தி இருக்கிறேன். ஜாஸ், ஜல்சா, பிரேக் போன்றவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

இன்னும் இருக்கு...அது நாளை 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...