மனித வாழ்க்கை நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. நம்மீது நம்பிக்கை கொண்டவர்கள் மீது அளவுக்கு அதிகமாக பாசத்தை நேசத்தை பொழியும் நாம், நம்மை நம்பாதவர்களை பற்றி சிறிதும் கவலை படுவதில்லை.
ஆனால் நவகிரகங்கள் அப்படி இல்லை. ஒருவர் நம்புகிறாரா, இல்லையா? ஏற்றுக்கொள்கிறாரா மறுக்கிறாரா என்பதை பற்றி எல்லாம் யோசிப்பதில்லை. ஒரே மாதிரியான பலன்தான்.
தெற்கு தெரு குப்புசாமி நம்மை கண்டுக்கிறதே இல்லை. அதனால் அவர் வாழ்க்கையில் என்ன நடந்தால் நமக்கென்ன என்று கிரகங்கள் சும்மா இருக்குமா என்றால் இருக்காது.
ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடத்திற்கு என்ன பலனை தரவேண்டுமோ அதை தரும்.
அந்த வகையில் கிரகங்கள் பாதக அமைப்பில் இருந்து அதன் திசா நடப்பில் வந்தால், என்ன மாதிரியான பரிகாரங்களை செய்யவேண்டும் என்று குறிப்பு இருக்கிறது.
அதை இப்போது பார்ப்போம்.
விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்கள் ஒன்பது. அதில் பத்தாவதாக வருவது கல்கி. அது இன்னும் எடுக்கப் படவில்லை.
அதனால் அதை தவிர்த்து மீதம் உள்ள ஒன்பது அவதாரங்களை ஒன்பது கிரக திசாபுத்திக்கு வணங்கலாம் என்று அந்த குறிப்பு சொல்கிறது. அந்த விவரம் இதோ.
சுக்கிர திசை உங்களுக்கு நடந்து அது சாதகமான் பலனை தந்தாலும் சரி, பாதகமான பலனை தந்தாலும் சரி வணங்க வேண்டிய அம்சம் பரசுராமர். நல்லது நடந்தால் நம்மைகள் கூடுதலாகும். தீமைகள் நடந்தால் குறையும்.
சூரியதிசை உங்களுக்கு நடந்து அது சாதகமான் பலனை தந்தாலும் சரி, பாதகமான பலனை தந்தாலும் சரி வணங்க வேண்டிய அம்சம் ராமன். . நல்லது நடந்தால் நம்மைகள் கூடுதலாகும். தீமைகள் நடந்தால் குறையும்.
சந்திர திசை உங்களுக்கு நடந்து அது சாதகமான் பலனை தந்தாலும் சரி, பாதகமான பலனை தந்தாலும் சரி வணங்க வேண்டிய அம்சம் கிருஷ்ணர். நல்லது நடந்தால் நம்மைகள் கூடுதலாகும். தீமைகள் நடந்தால் குறையும்.
செவ்வாய் திசை உங்களுக்கு நடந்து அது சாதகமான் பலனை தந்தாலும் சரி, பாதகமான பலனை தந்தாலும் சரி வணங்க வேண்டிய அம்சம் நரசிம்மர். நல்லது நடந்தால் நம்மைகள் கூடுதலாகும். தீமைகள் நடந்தால் குறையும்.
ராகு திசை உங்களுக்கு நடந்து அது சாதகமான் பலனை தந்தாலும் சரி, பாதகமான பலனை தந்தாலும் சரி வணங்க வேண்டிய அம்சம் விஷ்ணு . நல்லது நடந்தால் நம்மைகள் கூடுதலாகும். தீமைகள் நடந்தால் குறையும்.
குரு திசை உங்களுக்கு நடந்து அது சாதகமான் பலனை தந்தாலும் சரி, பாதகமான பலனை தந்தாலும் சரி வணங்க வேண்டிய அம்சம் வாமணர் . நல்லது நடந்தால் நம்மைகள் கூடுதலாகும். தீமைகள் நடந்தால் குறையும்.
சனி திசை உங்களுக்கு நடந்து அது சாதகமான் பலனை தந்தாலும் சரி, பாதகமான பலனை தந்தாலும் சரி வணங்க வேண்டிய அம்சம் கூர்ம அவதார விஷ்ணுவை . நல்லது நடந்தால் நம்மைகள் கூடுதலாகும். தீமைகள் நடந்தால் குறையும்.
புதன் திசை உங்களுக்கு நடந்து அது சாதகமான் பலனை தந்தாலும் சரி, பாதகமான பலனை தந்தாலும் சரி வணங்க வேண்டிய அம்சம் பலராமர் . நல்லது நடந்தால் நம்மைகள் கூடுதலாகும். தீமைகள் நடந்தால் குறையும்.
கேது திசை உங்களுக்கு நடந்து அது சாதகமான் பலனை தந்தாலும் சரி, பாதகமான பலனை தந்தாலும் சரி வணங்க வேண்டிய அம்சம் மச்ச அவதார விஷ்ணு . நல்லது நடந்தால் நம்மைகள் கூடுதலாகும். தீமைகள் நடந்தால் குறையும்.
இவர்களை வணங்கி உங்கள் கிரக தோஷங்களை விளக்கிக் கொள்ளுங்கள். நம்மையே நடக்கும். வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment