கதவு மூடிய பிறகு ஆலயத்திற்கு முன்பு நின்று சாமியை வணங்குதல் கூடாது.
சாமிக்கு அலங்காரம் செய்வதற்காக திரை போட்டு இருந்தாலும், அந்த நேரத்தில் வணங்குதல் தவறு.
கற்ப்பூர தீபமாக இருந்தாலும், சாமிக்கு காட்டிய திருவிளக்கு தீபமாக இருந்தாலும், அதை வணங்கும் போது, கரங்களை தீபத்திற்கு வெளிப்புறம் இருந்து குவித்து, கையில் கரி படாமல் வணங்க வேண்டும்.
அசுப காரியங்கள் செய்யும் போது இரட்டை கோடு கோலம் போடக்கூடாது
துளசி மாடத்திற்கு பூஜை செய்யும் போது வேறு செடியில் இருந்து தான் தளங்களை பறிக்க வேண்டும்.
கோவில் மண்டபத்தில் படுத்து உறங்க கூடாது. அது குருமார்களாக இருந்தாலும் சரி. அப்படி உறங்கினால் அடுத்த பிறவியில் மலை பாம்பாக பிறப்பார்களாம். தர்மசாஸ்திரம் சொல்கிறது.
அதிகாலை சூரிய உதயத்திற்கு சற்று முன்பும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று சற்று முன்பும் விளக்கு ஏற்ற வேண்டும்.
இல்லறததொடர்பு இல்லாமல் தனித்து தூங்கி எழுந்த பின் முகம் கழுவி, தூங்க செல்லும் முன், குளித்த உடன், வெளியில் புறப்படும் முன், சூரியன் உதிக்கும் போது, சூரியன் மறையும் போது, நல்ல காரியம் துவக்கும் முன், சாப்பிடுவதற்கு முன்பும் விபூதி அணியலாம்.
ஆலயத்தில் வணங்கும் போது இறைவனின் இடப்புறத்தில் பெண்களும், வலப்புறத்தில் ஆண்களும் நின்று வணங்க வேண்டும்.
No comments:
Post a Comment