ads

Friday, 7 December 2012

பெரியவங்க பேசுகிறார்கள்!!


மிக சிறந்த உண்மைகள் எளிமையாக உள்ளன. தலைசிறந்த மனிதர்களும் அப்படியே இருக்கின்றனர். 

-ஹேர்

நூலகத்தில் இருக்கும் புத்தகம் போல் அமைதியாக இரு. அப்போதுதான் அனைவரும் உன்னை பற்றி அறிந்து கொள்ள விரும்புவார்கள்.

-அறிஞர் அண்ணா.


சரித்திரத்தை உண்டாக்கும் மனிதர்களுக்கு அதை எழுத நேரம் கிடைப்பதில்லை.

-மெட்டர்னிக்.

அளவுக்கு அதிகமான பணமும், தகுதிக்கு மீறிய புகழும் ஒருவனுக்கு இருந்தால், எல்லாமே அவனுக்கு துச்சமாகத்தான் தெரியும். 

-கவிஞர் கண்ணதாசன் 


ஒவ்வொரு பறவை இனத்திற்கும் இறைவன் உணவு அளிக்கிறார். ஆனால் அவ்வுணவை பறவையின் கூட்டுக்கிற்குள்  அவர் இடுவதில்லை. 

-ஹாலண்டு

அடிக்கடி கோவப்பட்டால் நம் கோவத்திற்கு மரியாதை இல்லை. கோவமே படாவிட்டால் நமக்கே மரியாதை இல்லை.
-காந்திஜி 


நீ குழந்தைகளைப் போலவே இருக்க பாடுபடு. ஆனால் உன்னைப் போலவே அவர்களை ஆக்க முயலாதே.

-கலீல் கிப்ரான்  

கூட்டத்தில் இருக்கும் போது வார்த்தைகளில் கவனமாய் இரு.  தனியாய் இருக்கும் போது உன் எண்ணங்களில் கவனமாய் இரு.

-விவேகானந்தர். 


ஏறிக்கொள்ள அரசனுடைய தோள்கள் கிடைக்குமானால், குள்ளன் அரசனை விட அதிக தூரம் பார்க்க முடியும். 

கோல்ரிட்ஜ் 


வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிக்கிறோம் என்பதை மறந்து விடாதே. 


H .ஸ்ரீகிருஷ்ணன் 


பழம் வேண்டுமானால் பூவை பாதுகாக்க வேண்டும்.
- பல்கேரியா 




No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...