ads

Saturday, 1 December 2012

வியக்க வைக்கும் பிரமீடுகள்



இந்த அதிசய பிரமீடு கெய்ரோ நகரத்தின் மேற்கு பகுதியில் பத்து மைல் தொலைவில் உள்ளது. 

இதை கட்டுவதற்காக ஒரு மைல் நீளம், ஒரு மைல் அகலம் உடைய சதுர பூமியை சதுரப்படுத்தி இருக்கிறார்கள். 

அதன் பிறகுதான் இதன் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டிருப்பதாக சரித்திரம் கூறுகிறது. 

இதன் நான்கு மூலைகளும் மிகவும் சரியாக பூமிமட்டம் பார்த்தே கட்டப்பட்டிருக்கிறது. 

இதற்காக ஒரு சதுர மைலுக்கு பிரமீடை சுற்றிலும் குறுகிய அகலமுள்ள பள்ளம் தோண்டி, அந்த பள்ளத்தில் தண்ணீரை நிறைத்து நிலமட்டம் பார்த்து, ஒரு அங்குலம் கூட ஏற்றத்தாழ்வு இல்லாத வகையில் சமப்படுத்திய பின்புதான்,  அங்கு அஸ்திவாரமே தோண்டி இருப்பதாக  கூறுகிறார்கள். 

கி மு 4000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் நாகரிகத்தின் உச்சகட்டத்தில் இருந்திருக்க வேண்டும். கட்டட கலை நுட்பம் வடிவமைத்தல் முதலியவற்றில் இவர்கள் வல்லவர்களாக இருந்திருக்க வேண்டும். 

இல்லையெனில் இவர்கள் எப்படி இவ்வளவு அற்புதமான கிஸா பிரமீடை உருவாக்கி இருக்க முடியும். 

இந்த கட்டுமானத்திற்கு மட்டும் 26 லட்சம் கருங்கல் பாறை கற்கள் உபயோகபடுத்தபட்டுருப்பதாக கூறப்படுகிறது.  

இதில் ஒவ்வொரு கல்லும் இரண்டு முதல் எழுபது டன் வரையுள்ள கற்களை சதுரமாகவோ அல்லது நீண்ட சதுரமாகவோ வெட்டி எடுத்து, அவற்றை ஒழுங்காக செதுக்கி சீர்படுத்தி ஒன்றின் மேல் ஒன்றாக பிரமீடு வடிவத்தில் 450  அடி உயரத்தில்  கட்டி இருக்கிறார்கள். இதை பார்த்து உலகமே பிரமிக்கிறது.

கற்கள் எல்லாம் நன்றாக செதுக்கப்பட்டு ஒரு அங்குலத்தில் நூறில் ஒரு பங்கு கூட இடைவெளி இல்லாது சேர்த்து வைத்திருக்கிறார்கள். இதன் உயரம் 450 அடி.

அதாவது 45 மாடி கட்டிடத்தின் உயரம் இதன் உயரம்.உள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் கூறுகிறார்கள்.

செங்குத்தாக நான்கு முக்கோணங்களை சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது மாதிரியே, இந்த பிரமீடின் தோற்றமும் அளவுகளும் இருக்கும்.

ஒரு சதுர மைல் பரப்பளவில் 450  அடி உயரத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான பிரமீடை கட்டினது மட்டும் அல்லாமல், அதற்கு மேல் வெள்ளை சுண்ணாம்பு பாறை கற்களை கொண்டு வந்து இந்த பிரமீடு முழுவதும் போர்வை போல் போர்த்தியும் இருக்கிறார்கள் என்றால் இவர்களது திறமையை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை.

இந்த பிரமீடை கட்டுவதற்கு வானசாஸ்திரம், புவியியல் சாஸ்திரம் மற்றும் கட்டிடக்கலை, தொழில்நுட்பம் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய அறிவு, பஞ்சபூதங்களின் தன்மை முதலியவற்றில் வல்லவர்களுடைய உதவி இல்லாமல் இதை கட்டி இருக்க முடியாது என்பது ஐரோப்பிய ஆராச்சியாளர்களின் கருத்தாகும்.

மேலும் பிரமீடின் உள்ளே இருந்து வான மண்டலத்தில் உள்ள நச்சத்திரங்கள், கிரக நிலைகளை கூட பார்க்கக் கூடிய வசதிகளை அனுசரித்து கட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பிரமீடின் சக்திக்கும் மேலே சொல்லப்பட்ட விஷயங்களுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது என்பதில் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில் இதுவரை ஒருமித்த கருத்து வரவில்லை.

ஆனால் பிரமீடின் உள்ளே ஒரு மாபெரும் சக்தி இயங்குவதாக மட்டும் அனைத்து ஆராச்சியாளர்களும் ஒப்புக் கொள்ளகிறார்கள்.

2 comments:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...