ஓடி மறைந்து விட்டது ஒரு வருடம். அடுத்த ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ஜோதிட சுடரொளி.
இந்த வலைதளம் சிறப்புற எனக்கு ஊக்கம் கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
இந்த இனிய நேரத்தில் என்னோடு இணைந்து பல நல்ல கருத்துக்களை எழுதும் அன்பு சகோதரி சுந்தரிஸ்ரீ க்கும், நண்பர் மதிவாணன் அவர்களுக்கும் நன்றி.
தினமணி வலைப்பூவில் உலா வர ஆரம்பித்த பிறகு படிக்கும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. தரமான கட்டுரைகளை தாயுள்ளத்தோடு பிரசுரம் செய்யும் தினமணிக்கும், அதன் இணையதள ஆசிரியர் ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி.
வலைபூ வழியாக எனக்கு கிடைத்த நல்ல நண்பர்களில் திண்டுக்கல் தனபாலனை சொல்லலாம். அவருக்கும் என் நன்றி.
பல பணிகளுக்கு இடையில் வாழ்த்து செய்தி அனுப்பிய பெரியவர் முத்துகுமாரசாமி ஐயா அவர்களுக்கும் நன்றி.
எதிர்காலத்தில் இன்னும் நல்ல செய்திகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பேன் என்ற உறுதியோடு விடைபெறுகிறேன் நன்றி.
No comments:
Post a Comment