வெறிகொண்ட குதிரையாய் விரைகிறது காலம். காலத்தின் முதுகில் நம் பயணம்.எதிலும் அவசரம்,24 மணி நேரம் போதவில்லை.
உறங்கி விழித்து, குளித்து உண்டு, ஓட்டமாய் ஓடி, பரபரப்பாய் வழியில் சிந்தித்து முடிவெடுத்து, வாரத்தின் முதல் நாளான ஓய்வு நாளை நினைத்தபடி. சீறி விரைகிறது நம் அன்றாடம்.
தொலைபேசி, தொலைக்காட்சி, குழந்தை குட்டிகளுடன் கொஞ்சல், உறவுகளுடன் கதைத்தல், ஒதுக்கி வைத்த குடும்ப வேலை என காலில் சக்கரம் கட்டியபடி கரிக்கிறது ஓய்வு நாள். படிக்க தினசரி நாளிதழுக்கு ஒரு பத்து நிமிடம் அவ்வளவுதான்.
இலக்கியம், கலை, கவிதைகளின் தொடர்புகள், தொலைக்காட்சி பார்வையுடன் முடிகின்றன. உலகம், அறிவியல், ஆன்மிகம், நாட்டு நடப்புகள், நல்ல விஷயங்கள், ஜோதிடம், பரிகாரங்கள் வாழ்வியல் உண்மைகள் இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள ஆர்வம் உண்டு நேரமில்லை.
அனைத்தையும் ஒரு அரை மணி மேரத்தில் பார்த்து வாசிக்க வழி இருந்தால் நலம். இப்படித்தான் பலரின் எதிர்ப்பார்ப்புகள். அந்த எதிர்ப்பார்ப்புகளை ஈடு செய்வது போல், இன்னையதள பிளாக்குகள் வந்து விட்டன.
அவற்றில் எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியாய் ஒளி வீசி பிரகாசிக்கிறது ஜோதிட சுடரொளி. வாழ்வியலின் எல்லா அம்சங்களையும் தொட்டு பேசுகிறது.
ஒரு வாரத்திற்கு தேவையான அனைத்து பொருள்களையும் ஒரே இடத்தில் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் பையை எடுத்துக் கொண்டு சந்தைக்கு செல்லும் குடும்ப தலைவி போல் ... இந்த பிளாக்கில் தைரியமாய் ஒரு சுற்று வரலாம்.
பழம் பொருள்களை தேடி தேடி சேகரித்து குவித்து வைக்கும் புராதன கலை பொருள்களின் காதலனை போல் எல்லாவிதமான நல்ல விஷயங்களையும் தன பிளாக்கில் கொண்டு வந்து விட வேண்டும் என்று ஆசை படுகிற ஸ்ரீகிருஷ்ணர் அவர்களின் இதயத்தை, இந்த பிளாக் தொடங்கியதில் இருந்து, அதன் வாசகனாய் இருப்பவன் என்பதினால் என்னால் அறிய முடிகிறது.
ஓராண்டுகள் முடிந்து விட்டது. இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ஜோதிட சுடரொளி.
பொது அறிவு களஞ்சியமாய், ஆன்மீக விளக்காய், நல்லது கேட்டது உரைக்கும் நலம் விரும்பியாய், இலக்கண வாகனமாய், பொழுது போக்கு சாரளமாய் ஜோதிட சுடரொளி திகழ வேண்டும். உச்சி வான சூரியனாய் ஒளி வீசி பிரகாசிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
- மதிவாணன்
No comments:
Post a Comment