அப்பாடா.. தப்பிச்சிட்டோம். பயமுறுத்திக்கொண்டிருந்த 2012 ம் வருடத்தை ஒருவாறாக வழி அனுப்பி வைத்து விட்டு, வெற்றிகரமாக 2013ம் ஆண்டுக்குள் நுழைந்து விட்டோம். நிம்மதி பெருமுச்சு விடதொன்றுகிறது.
2012 டிசம்பர் 21இல் உலகம் அழியப்போகிறது என்ற செய்தி உலக மக்களை அதிகமாகவே அச்சுருத்திக்கொண்டிருந்தது.
அதோடு அழியும் அழியாது என்ற வாதங்களும் ஜோசியமும் பரபரப்பை ஏற்ப்படுத்தி கொண்டிருந்தது.
ஆனாலும் எதைபற்றியும் கவலைப்படாமல் வாழக்கையை எப்போதும் போல் ஒட்டிக் கொண்டிருந்தவர்களும் இருந்தார்கள்.
வழக்கம் போல் அடுத்தவரின் பணத்தை வழிப்பறி செய்தவர்கள், வழிப்பறி செய்து கொண்டு தான் இருந்தார்கள். கொலை செய்பவர்களும், வன்முறையில் ஈடுபடுபவர்களும் கருமமே கண்ணாக இருந்தார்கள்.
ஒருகால் இந்த செய்தி உண்மையாகவே ஆகி இருந்தால் என்னதான் ஆகி இருப்போம்.
செத்து சாம்பலாய் அல்லது தண்ணீருக்குள் மூழ்கி புதைந்தல்லவா போயிருப்போம். நாம் சேமித்து பாதுகாத்து வைத்திருக்கும் நம் உடமைகளும் நம்முடன் சமாதி அல்லவா ஆகி இருக்கும்.
செத்து போகப்போகிறோம் என்று நாள் குறித்தால் கூட ஏதும் நல்ல காரியம் செய்ய மட்டும் பலருக்கு மனம் வருவதில்லை. பெட்டியில் வைத்து பூட்டிய பணத்தை எண்ணி எண்ணி பார்த்து விட்டு செத்து போகிறவர்களும் உண்டு.
சரி போகட்டும் விடுங்கள்.
எல்லோரும் ஒரு நாள் போய் சேரத்தான் போகிறோம். எப்படியோ 2012 கண்டத்தை தாண்டி விட்டோம். ஆனாலும் இந்த பூமிக்கு அழிவு ஏற்ப்படுத்தும் காரியங்களை ஒட்டு மொத்த உலக ஜனங்களும் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
காடுகளை அழிப்பது முதல், பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவது வரை, நீர் நிலைகளில் ஆலைகளின் கழிவுகளை திறந்து விடுவது முதல், கப்பல்களில் கொண்டு போய் கடலில் கழிவுகளை கொட்டுவது வரை, நாம் செய்கிற எல்லா செயல்களுமே பூமிக்கு சாவுமணி அடித்துக்கொண்டிருக்கிறது.
தொழிற்ச்சாலைகளின் பெருக்கம், புகை எல்லாமே இந்த பூமிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் சவக்குழி வெட்டும் வேலையை சரியாய் செய்து கொண்டிருக்கின்றன.
நாடு, இன, மத, ஏழை, பணக்காரன் வேறுபாடுகளை களைந்து, இந்த விஷயத்தில் மட்டும் கை கோர்த்துக் கொள்வதில் உலக மனிதன் பரந்த மனப்பான்மையோடு நடந்து கொள்கிறான்.
ஆற்று மணலை அள்ளி நிலத்தடி நீரை வற்ற செய்வதில் பெரும் போட்டியே நடக்கிறது. என்ன ஆகப்போகிறதோ... !
சரி... 2013 பிறக்கிறது
உங்கள் பேரன்களும் பேத்திகளும், உங்கள் அடுத்த கட்ட தலைமுறைகளும் வாழையடி வாழையாய் வாழப்போகும் இந்த பூமியை பாதுகாக்க நீங்கள் செய்யப்போவது என்ன?
மதிவாணன்
No comments:
Post a Comment