ஒரு மனிதர் ஜென் துறவியிடம் பேசிக்கொண்டிருந்தார். நூறு வருடங்கள் கழித்தது நீங்கள் எங்கே இருப்பிர்கள் என்று துறவியிடம் கேட்டார்.
ஒரு குதிரையாகவோ, கழுதையாகவோ நான் மாறி இருப்பேன் என்றார் துறவி.
அதற்கப்பறம் என்ன ஆவீர்கள்? மறுபடியும் அந்த மனிதர் கேட்டார்.
நரகத்திற்கு போவேன் என்றார் துறவி. அந்த மனிதருக்கு ஆச்சரியம்.
ஞானமும், அளவற்ற நல்ல குணமும் உள்ள நீங்கள் ஏன் நரகத்திற்கு போக வேண்டும் என்று கேட்டார்.
நான் நரகத்திற்கு போகவில்லை என்றால் நரகத்தில் உனக்கு யாரு உபதேசம் செய்வது என்று பதிலுக்கு கேட்டார் துறவி.
பரிசுத்தமான இடத்திற்கு உரியது பௌத்தம் என்று சொல்ல முடியுமா? அசுத்தமான கழிவறைக்குள் புத்தர் நுழைந்ததில்லை என்று சொல்ல முடியுமா? அவர் இல்லாத இடமே இல்லை.
சொர்க்கத்தில் இருக்கிறார் என்றாலும், நரகத்தில் தான் புத்தரின் தேவை அதிகம் என்றார் துறவி.
No comments:
Post a Comment