மொழி இல்லாமல் விழியால் பேசும் காதலர்கள் முதல், , தாம்பத்திய வாழ்வில் இணைந்த தம்பதிகள் வரை தங்கள் அன்பை வெளிக்காட்டிக்கொள்ள, முத்தத்தை தான் முதல் மொழியாய் வைத்திருக்கிறார்கள்
முத்தம் என்பது இந்த இடத்தில் தான் தரவேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. என்றாலும் சில விதிகள் உண்டு.
தாய் தரும் முத்தம் தனி கவுரவம் பெரும்.
ஒரு தகப்பன் தன் மகளுக்கு முத்தம் தருவதாக இருந்தால் உச்சஞ் தலையில் தரலாம், அது சிறு பெண்ணாக இருந்தால், நெற்றியில் முத்தம் தரலாம்.
ஒரு சகோதரன் சகோதரிக்கு முத்தம் தருவதாக இருந்தால் கைகளில் முத்தம் தரலாம்.
இந்த முறைதான் முதல் அறிமுகத்தின் போது, ஆண் பெண் இருபாலாருமே செய்கிறார்கள் வயது வித்தியாசம் இல்லாமல்.
ஆனால் உஞ்சி முதல் உள்ளங்கால் வரை காதலர்களும், கணவன் மனைவியும் பரிமாறிக்கொள்ளலாம்.
இன்று அதிக நேரம் யார் முத்தம் கொடுக்கிறார்கள் என்று கலை கட்டும் போட்டிகள் மேலைநாடுகளில் அதிகம்.
ஆனால் இந்த முத்தம் எப்போது? யாரால்? எங்கு? முதலில் தோன்றியது என்பதற்கு வரலாற்று சான்றுகள் இல்லை. பந்தம் பாசம் என்று உச்சபட்ச அன்பை மனிதன் வெளிக்காட்ட தொடங்கிய போதே இந்த முத்தமிடுதல் வந்திருக்க வேண்டும்.
முத்தம் என்பது யார் யாருக்கு தருகிறார்கள் என்பதை பொறுத்து மாறும். யார் யாரிடம் இருந்து பெறுகிறார்கள் என்பதை பொறுத்து மாறும் .
ஆண் பெண்ணுக்கு தருகிற முத்தம் என்பது உறவு நிலையின் முதல் சாவி என்று சொல்லலாம்.
கணவன் மனைவிக்கு தருகிற முத்தம்.... அன்பில் சரிபாதி காமம் கலந்தே இருக்கும்.
ஆனால் காதலர்கள் பரிமாறி கொள்ளும் முத்தத்தில் தயக்கமும், மயக்கமும், இனம் புரியாத விருப்பமும், ஒரு வித எதிர்ப்பார்ப்பும் இருக்கும்.
முத்தத்தை பற்றி பல நாடுகளில் பரவலாக ஆராய்ச்சி நடந்திருக்கிறது. அத்தனை முடிவுகளும் சொல்லும் இறுதி அறிக்கை இதுதான்.
ஆணை விட பெண்ணே முத்தத்தை அதிகம் விரும்புகிறார்களாம். உறவு நேரம் என்றில்லை, ஒரு வருத்தமான நேரத்தில் கூட, முத்தம் கொடுத்தால் அதில் இருந்து எளிதில் விடுபடுவது பெண்கள் என்கிறது ஆய்வு.
ஆணை பொறுத்தவரை பெண்ணை அதற்கு தயார் படுத்த மட்டுமே ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என்கிறது அதே ஆய்வு.
காம சூத்திரத்தை பற்றி எழுதிய வாத்சாயனார் கூட முத்தமிடல் தான் முக்கியம் என்கிறார்.
பல ஆராட்சியாளர்கள் முத்தத்தை எந்த இடத்தில் கொடுத்தால் கிக் அதிகம் என்று ஒரு தியரியே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதில் தான் உதட்டோடு உதடு வைத்து கொடுக்கப்படும் முத்தம் முதல் இடம் பெறுகிறது.
இது பிரஞ்சு கிஸ் என்று சொன்னாலும்,இன்று இந்த முத்தம் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
இதை யாரும் குறை சொல்ல முடியாது என்றாலும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் பல தோற்று வியாதிகள் பரவ காரணமாக அமைகிறது என்கிறது மருத்துவ ஆய்வு.
ஆஸ்மா, டிபி என்று சொல்லக்கூடிய காச நோய் போன்றவை இந்த கிஸ் அடித்தல் மூலமாகவே பரவுகிறது. அதனால் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
உணர்வு வேகத்தில் உந்தப்படும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த யோசனைகள் வரும் என்று சொல்வதற்கில்லை.
என்னை கொல்ல மூன்று வழிகள்
துப்பாக்கி...
கத்தி...
அல்லது உன் முத்தம்.
முத்தான முத்த தகவல்....
ReplyDeleteமுத்தான முத்த தகவல்....
ReplyDelete\\இதை யாரும் குறை சொல்ல முடியாது என்றாலும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் பல தோற்று வியாதிகள் பரவ காரணமாக அமைகிறது என்கிறது மருத்துவ ஆய்வு.\\ புருஷன் தானே குடுக்கறான், அதனால் என்ன............ அதுல நோய் பரவும்னா அவன் வீட்டில் இருந்தால் கூட நோய் பரவும்.............
ReplyDelete