வீடுகள் தோறும் கிரகங்கள் இருந்தால் அதற்கு கிரகமாலிகா யோகம் என்று பெயர். இனி பலன்களை பார்ப்போம்.
ஒருவர் ஜாதகத்தில் ஓன்று முதல் ஒன்பதாம் இடம் வரை கிரகம் இருந்தால் மகான், ஞானி.
ஒன்றாம் வீடு முதல் எட்டாம் வீடு வரை கிரகம் இருந்தால் கொடியவர், எதற்கும் துணிந்தவர், எந்த சட்ட திட்டங்களுக்கும் அடங்காதவர், பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குகிற மாதிரி இருப்பார்கள்.
ராகு அல்லது கேது தவிர்த்து தொடர்ச்சியாக ஆறு வீடுகளில் கிரகம் இருந்தால் வணக்கத்திற்கு உரியவர். புதிய கண்டுபிப்பாளர். ஊரே மெச்சுகிற அளவிற்கு வாழ்க்கை தரம் உயரும்.
ராகு அல்லது கேது தவிர்த்து தொடர்ச்சியாக ஐந்து வீடுகளில் கிரகம் இருந்தால் செல்வந்தர், ஆடம்பரபிரியர்கள். வாழ்க்கை சுபிச்சமாக இருக்கும்.
ராகு அல்லது கேது தவிர்த்து லக்னம் முதல் நான்கு ராசிகளில் கிரகம் தொடர்ச்சியாக இருந்தால் பிறர்மனை நோக்குவார்.
ராகு அல்லது கேது தவிர்த்து, லக்னம் முதல் மூன்று ராசிகளில் கிரகம் இருந்தால் முரட்டு குணம் உடையவர். பிறந்தது முதல் உழைத்து வாழ வேண்டிவரும்.
ஒன்றில் மட்டும் கிரகம் இருந்தால் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. சாதாரண நிலையில் வாழ்க்கை அமையும்.
விளக்கத்திற்கு நன்றி சார்...
ReplyDelete