அன்பு அனபர்களே வணக்கம்.
கடந்த டிசம்பர் 15 ம் தேதி பெரிய லட்சியம் , குறிக்கோள் எதுவும் இல்லாமல், வெறும் பொழுபோக்கிற்காக ஆரம்பிக்க பட்டது இந்த பிளாக்.
ஆனால் அதன் பிறகு மிக கவனமாக நல்ல செய்திகளை சொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன்.
முதல் நான்கு மாதங்கள் தினம்தோறும் 25 பார்வையாளர்கள் வருவதே பெரிசு. அதன் பிறகுதான் உண்மையில் பிளாக் சூடுபிடிக்க தொடங்கியது.
இப்போது தினம் தோறும் 500 முதல் 750 பேர் வந்து போகிறார்கள். இது இன்னும் பெருகி தினம் தோறும் 5000 பேர் வரும் அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது ஆசை, விருப்பம், லச்சியம்.
கடவுள் ஆசியால் இது நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த வளர்ச்சிக்கு தினமணி வலைப்பூ தான் முதல் காரணம். அதற்கு அடுத்தபடியாகத்தான் வருபவர்களுக்கு பிடித்த செய்திகள் இருந்தால் மீண்டும் வருவார்கள் என்பதால் நானும் அதிக முயற்ச்சி எடுத்து எழுதி வருகிறேன்.
இந்த பிளாக்கில் நான் மட்டும் எழுதவில்லை. என்னோடு இணைந்து பல நல்ல கட்டுரைகளை எழுதி வரும் என் அன்பு சகோதரி சுந்தரிஸ்ரீ க்கு நன்றி சொல்ல வேண்டும். அவ்வப்போது நண்பர் மதிவாணன் எழுதுவார். அவருக்கும் நன்றி.
நிற்க.
வரும் டிசம்பர் 15 வந்தால் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஜோதிடசுடரொளி.
இதன் உறுப்பினர்கள் என்று பார்த்தால் 88 பேர்கள்தான் இருக்கிறார்கள். அதை அதிகபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்போது இதை எழுதுகிறேன்.
நண்பர்களே உங்களுக்கு இந்த தளம் பிடித்திருந்தால் நீங்களும் உறுப்பினராக சேர்ந்து கொள்ளுங்கள். join this site என்பதை கிளிக் செய்து உங்கள் மெயில் முகவரியை கொடுத்து உறுப்பினார்க சேர்ந்து கொள்ளுங்கள்.
நான் போஸ்ட் செய்யும் கட்டுரைகள் உங்கள் மெயில் முகவரிக்கே வந்து விடும்.
மீதம் இருக்கும் நாட்களுக்குள் அதாவது ஒரு வருட நிறைவில் 365 நிரந்திர உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும் என்பது என் ஆசை. நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நன்றி..
என்ன செய்யப் போறீங்க? ஒ ... join this site என்பதை கிளிக் செய்து உறுப்பினராக போறிங்களா ஓகே .... ஓகே
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDelete