ஒரு ஊரில் நதி வெள்ளபெருக்கேடுத்தோடி, ஒரு தனவந்தரின் மாடி வீட்டின் தரை தளத்தில் நீர் புக ஆரம்பித்தது. அவர் மிகவும் தெய்வபக்தி கொண்டவர்.
அவருக்கு உதவி செய்ய ஒருவர் முன்வந்து, ஐயா... வெள்ளம் உங்கள் தரை தளத்தில் புக ஆராம்பித்து விட்டது.
மேலும் தண்ணீர் வருவதற்குள் இந்த இடத்தை காலி செய்து வேறிடம் சென்று விடலாம் வாருங்கள்.
நான் சாமான்களை எடுத்து வர உதவி செய்கிறேன் என்றார். அதற்க்கு தனவந்தர்.... யாருடைய உதவியும் எனக்கு தேவையில்லை. கடவுள் காப்பாற்றுவார். நீங்கள் போகலாம் என்று விரட்டி விட்டார்.
வெள்ளம் பெருக்கெடுத்து தரைத்தளம் மூழ்கி, முதல்மாடி தளத்திற்கும் நீர்வந்து விட்டது. முதல் மாடியில் குடியேறிய தன்வந்தரிடம், முன்பு வந்த அதே மனிதர். நான் உங்களுக்கு இப்போதாவது உதவட்டுமா...என்று கேட்டார்.
கடவுள் காப்பற்றுவார். நீங்கள் போகலாம் என்று அனுப்பி விட்டார்.
மேல் மொட்டை மாடிக்கு சென்று ஆகாயத்தை பார்த்த வண்ணமிருந்த போது, வெல்ல தாக்குதலில் இருந்து அவரை மீட்டு விடுவிக்க, ஒரு ஹெலிகாட்டார் கயிறு துணையோடு வந்த போதும், கடவுள் காப்பாற்றுவார் என்று ஆத்திரத்தோடு கூச்சளிட்டார்.
அட மடையா... உன்னை காப்பாற்ற நான்கு முறை முயன்றேன். ஆனால் நீதான் ஏற்கவில்லை. உன் தலையெழுத்து நீரில் மூழ்கி சாக வேண்டும் என்பது தான், என்று அசரிதி கேட்டது.
நல்லதொரு பகிர்வு...
ReplyDeleteஇன்று தான் உங்கள் பகிர்வே எனது மெயிலில் வந்தது...
சில பதிவுகளை மட்டும் படிக்க முடிந்தது... இங்கே 16 மணி நேரம் மின்சார வெட்டு...
நன்றி சார்..
நல்லதொரு பகிர்வு...
ReplyDeleteஇன்று தான் உங்கள் பகிர்வே எனது மெயிலில் வந்தது...
சில பதிவுகளை மட்டும் படிக்க முடிந்தது... இங்கே 16 மணி நேரம் மின்சார வெட்டு...
நன்றி சார்..