மனித வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் கலந்தே நடக்கிறது.
நல்லது நடக்கும் போது, கடவுளை நினைக்கிறானோ இல்லையோ, நல்ல வாழ்க்கையை தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல, ஆலயம் செல்கிறானோ இல்லையோ, கெட்டது நடக்கும் போது மட்டும் மனதில் இறைசிந்தனை வந்து விடுகிறது.
செய்யட்டும் இதை யாரும் குற்றம் சொல்லவில்லை.
நமது கேள்வி...கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யலாமா?
ஏன் செய்யணும்?சொல்லுங்க?
எதுக்கு செய்யணும்... சொல்லுங்க?
பசித்தவன் சாப்பிடுவது தான் முறை. யாருக்கு வியாதியோ? அவர்தான் மருந்துண்ண வேண்டும். இதுதானே எதார்த்தம், உண்மை.
அதை விட்டுட்டு சகல சௌபாக்கியங்களுடன் இருக்கும் இறைவனுக்கு, இறைவன் நாமத்திற்கு செய்வதால் என்ன பயன்.
இது என்ன கதையா இருக்கு... இறைவனை மகிழ்விக்க செய்யக்கூடாதா?
வேண்டியது வரணும், விரும்பியதை பெறனும், இறைவா... உன் திருநாமத்திற்கு அர்ச்சனை செய்திருக்கிறேன். அதை சிறு காணிக்கையாக ஏற்றுக்கொண்டு எனக்கு நல்லது செய்.... என்று சொல்வதாக வைத்து கொள்ளக்கூடாதா?
ஐயா...அர்ச்சனை செய்யும் போது கவனித்திருக்கிர்களா....
சுந்தரி நாமஸ்திய, உத்திரட்டாதி நட்சத்திரிய, மீன ராசி ஜாதஸ்த்ய, சக குடும்பானாம், தைரிய, வீரிய,விஜய, ஆயுகு, ஆரோக்கிய அஸ்வர்யானாம், அபிவிரித்தியர்த்தம் என்றதான் மந்திரம் சொல்வார்கள்.
இதுதான் முகவரி எழுதப்பட்ட தபால் மாதிரி. அதன் பின் எந்த இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறோமோ அந்த இறைவனின் நாமாவளிகளை சொல்லி பூஜிப்பார்கள்.
நாமாவளி என்பதே இறைவனை போற்றி புகழ்வது என்றுதான் பொருள். சரியா!
இதனால் சலமான பேர்களுக்கும் தெரிவிப்பது என்ன வென்றால் கோவிலில் அர்ச்சனை செய்ய போகும்போது, உங்கள் பெயர், ராசி, நட்ச்சத்திரம் சொல்லி வழிபாடு செய்யுங்கள். அதுவே சிறப்பு.
No comments:
Post a Comment