ஒரு முறை சர் தாமஸ் லிப்டன் தம்முடைய கடையின் பல்வேறு பிரிவுகளை பார்வை இட்டுக்கொண்டே வந்தார்.
அவர் யார் என்பதை அறியாத புதிய விர்ப்பனையாளன் ஒருவன், அவர் எந்த பொருளும் வாங்காமல் போவதை பார்த்து, அவரிடம் போய் எங்கள் கம்பெனி தயாரிப்பில் உருவான லிப்டன் வெண்ணையை பற்றி தெரியுமா என்று கேட்டான்.
அவன் மேலும் அதை வாங்கி உபோகித்து பார்க்கும் படியும் சிபாரிசு செய்ய ஆரம்பித்து விட்டான். அதற்கு அவர் தமக்கு இப்போது அது தேவையில்லை என்றும், நான் கடையில் என்ன இருக்கிறது என்று பார்க்க மட்டுமே வந்தேன் என்றார்.
இருந்தும் விடவில்லை அவன். அவரை நச்சரித்து வெண்ணையை வாங்க வைத்து விட்டான்.
சில நாள் கழித்து அந்த விர்ப்பனையாலனுக்கு உயர் பதவி கிடைத்தது.
இரண்டாவது உலகப்போரின் போது ரஷ்யா விழப்போவது இன்றா நாளையா உலகம் எதிர்ப் பார்த்துக்கொண்டிருந்தபோது, முப்பெரியார் மாநாட்டில் ஸ்டாலின் என்ன பேசினார் தெரியுமா?
நம்முடைய நிலை இப்படி இருக்கிறது என்றா?
இல்லை பெர்லினை எவ்விதம் முற்றுகையிட்டு வெல்வது என்பது பற்றி.
அதே மாநாட்டில் ருஸ்வெல்ட் எதை பற்றி பேசினார் தெரியுமா? ஜெர்மனியை தோற்கடித்தபின் அதனை எவ்விதம் ஆட்சி செய்வது என்பதை பற்றி.
சிறிய மனிதனுக்கும் பெரிய மனிதனுக்கும் உள்ள வேறு பாடு இதுதான்.
முன்னேறுவது எப்படி என்ற நூலில் இருந்து.
No comments:
Post a Comment