உங்க பொண்ணுக்கு கல்யாணம். எண்ணி நாலு நாள்தான் இருக்கு.
வீடே...கல்யாண களைகட்டியாச்சு. உங்கள் பொண்ணு முகத்திலே சந்தோசம் தாண்டவமாடுது.
இருக்காதா பின்னே...!
வயது 30 . இதுவரைக்கும் நூற்றுக்கணக்கான வரனை பார்த்து எதுவும் அமையாம, நொந்து நூலான சமயத்தில் இந்த வரன் வந்ததது.
பையனை பாலா பார்த்தால் படத்தில் நடிக்கிறியான்னு கேட்பாருன்னு சொல்லற மாதிரி படு சுமார்ட். அமெரிக்காவில் வேலை. கைநிறைய சம்பளம். எல்லோருக்கும் ரெட்டிப்பு சந்தோசம்.
அதனால்தானோ என்னவோ உங்க தகுதிக்கு மீறி வரதட்ச்சனை கேட்ட போதும் தலையாட்டிடிங்க.
எப்போதுமே ஆபத்துக்கு உதவுற நண்பர்களும்.. நல்ல சம்பந்தம், ஓகே சொல்லு மத்ததை நாங்க பாத்துகிறோம்ன்னு உசுப்பேத்தி விட்டுட்டாங்க.
நண்பர்கள் தந்த தைரியம் ஒத்துக்க வச்சுது. எல்லாம் சரி.. விபரீதம் இப்போதான் வெடிச்சுது.
உதவி செய்றேன்னு சொன்ன நண்பர்கள் இப்போ ஒதிங்கிட்டாங்க. ஐயோ எதிர்பாராத செலவு. நெருக்கடி, பிரச்சனைன்னு ஆளுக்கு ஒரு பதில்.
உங்களுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. இதுவரை கடன் வாங்கி பழக்கபடாதவர். அதிக கௌரவம் பார்ப்பவர். இந்த சமயத்திலே உங்க ஜென்ம விரோதிக்கிடே இருந்து தகவல் வருது.
நான் உதவ தயாரா இருக்கேன். நேர்ல கூட வரவேண்டாம். ஒரு வார்த்தை போன்ல கேட்ட கூடப் போதும். கலயானத்தை ஜாம் ஜாம்ம்னு நடத்தலாம். தேவையான பணத்தை கொடுக்கிறேன் அப்படின்னு சொல்றார்.
இந்த நிலையில் நீங்க என்ன செய்வீங்க.
1 . இக்கட்டான நேரம்தான் மறுக்கலை. ஆனால் தர்றேன்னு சொல்றது சாதாரண நபர் இல்லை. விரோதி. ஜெம்ம விரோதி. இத்தனை காலமும் பல்வேறு வகையில் இடையூறு செய்தவர். அவர் கிட்டே உதவி கேட்கிறது தப்பு. அதுக்கு கல்யாணம் நின்னா கூட பரவாயில்லைன்னு நினைப்பின்களா?
2 .எந்த சூழ்நிலையிலும் உதவி செய்யுற நண்பர்கள் நிச்சயம் இந்த சமயத்திலும் உதவுவாங்க.எப்படியும் நம் சூழ்நிலையை எடுத்து சொல்லி அவங்க உதவியை பெறலாம்.அல்லது வேறு நபர்களிடம் உதவியை பெறலாம் என்று நினைப்பிங்களா?
3 .பழைய பகையை பரணில் தூக்கிபோட்டுட்டு, ஜென்ம விரோதிக்கிட்டேயே உதவியை நாடுவீங்களா?
ஒன்றை தேர்வு செய்தால்.
நீங்கள் அமைதியானவர். ஆழ்கடல் மாதிரி ஆர்ப்பாட்டம் இல்லாதவர். பெரும்பாலும் உங்கள் மனதில் உள்ளதை வெளிக்காட்டி கொள்வதில்லை.
ஆனால் நடக்க வேண்டிய காரியங்களை எப்பாடுபட்டாவது சாதித்து கொள்வதில் சமத்து.
உங்களுக்கென ஒரு லெட்சியம் இருக்கும். அதை நோக்கியே உங்கள் செயல்பாடு இருக்கும். விட்டு கொடுக்கும் மனப்போக்கு கொஞ்சம் குறைவு.
ஆனால் உங்கள் மணவாழ்க்கை மிக சந்தோசமாக அமையும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தங்கள் இல்லறத்துணையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வித்து கொள்வீர்கள்.
அதாவது உங்கள் கணவர் அல்லது மனைவி தலையாட்டி பொம்மை. நீங்கள் கோடு போட்டால் அவர் ரோடு போடுவார். ஆனாலும் வாழ்க்கை ஏற்ற இறக்கமாக இருக்கும்.
இரண்டை தேர்வு செய்தால்
தேக்குமரத் தேகம், தினவெடுத்த தோள்கள் என்று ஆஜானுபாகுவான உடல் அமைப்பை பெற்றவராக இருந்தாலும் கூட, பலவீனமானவர்கள்.
உங்களிடம் எவ்வளவு திறமை இருந்தாலும் கூட குடத்தில் இட்ட விளக்கு மாதிரி இருக்குமே தவிர, குன்றின் மேல் வைத்த விளக்காக இருக்காது.
உங்களுக்கு திட்டமில் இல்லை. சரியான நேரத்தில் சரியான வழியில் செல்வதில்லை. உங்கள் முன்னேற்றத்திற்கு யாராவது பக்க பலமாக இருந்தால், நீங்கள் வளர்ச்சி பெறமுடியும்.
மூன்றை தேர்வு செய்தால்
நல்ல நிர்வாகி. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும், பாடுற மாட்டை பாடி கறக்கணும் என்பதை அறிந்தே வைத்திருப்பவர். எப்போதுமே பந்தய குதிரையில் முந்திய குதிரை மாதிரி வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர்கள்.
ஆனால் முன்கோபி. படபடவென பொரிந்து தள்ளுவீர்கள்.என்றாலும் உடனடி கோவம், உடனடி சாந்தம் என கலவையான குணம் படைத்தவர்கள்.
சாதாரண நிலையில் பிறந்தாலும் வயது ஏற ஏற வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டே செல்லும். அதற்க்கு உங்கள் கடின உழைப்பும் காரணமாக இருக்கும்.
எதையும் ஈடுபாட்டோடு செய்வீர்கள். எளிதில் கிரகித்து கொள்வீர்கள். உங்களை வீழ்த்துவது கடினம். வாழ்த்துவது சுலபம். வாழ்க்கை ஏற்றம் பெரும். மிகப்பெரிய மாற்றம் வரும்.
No comments:
Post a Comment