இன்றைய இளசுகளுக்கு மாற்றம் என்பது உடையில் மட்டும் இல்லை. விதம்விதமாய் தலைக்கு டை அடித்து கொள்வது, முடி பேசன் செய்து கொள்வது என்று தொடங்கி இப்போது டாட்டூஸ் வரைவது ஒரு பேஷன் ஆகி விட்டது.
மற்றவரை கவனிக்க வைக்கத்தான் பேசன் என்றாலும் பச்சை குத்தி கொள்வதால் என்ன பாதிப்பு வரும் என்று யாரும் உணருவதில்லை.
இதில் வயது வித்தியாசம் எல்லாம் இல்லை.
உடலில் ஆங்காங்கே வண்ண வண்ணமாக டாட்டூஸ் எனப்படும் பச்சை குத்திக் கொள்கின்றனர்.
பச்சை குத்திக்கொள்வதினால் உடல் அழகு வருகிறது என்பது ஒரு புறம் இருக்க, அதனால் அதிக பாதிப்புகள் என்ன என்பதை யாரும் உணருவதில்லை.
பல வண்ணங்களில் பச்சைக் குத்தும் போது இவற்றில் சேர்க்கப்படும் இராசாயன பொருட்களால் நோய் தொற்று கிருமிகள் உடலில் சேர்ந்து விடுகிறது.
அதனால் , தோல் அரித்து, வீக்கம் ஏற்படுத்துகிறது. பச்சை குத்தினால் அதை நீக்க வேண்டும் என்றால் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும். வேறு வழியில்லை.
அது மட்டுமா தோல் வியாதி, அரிப்பு, போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் மற்றவர்களை விட, பச்சை குத்தி கொண்டவர்களுக்கே அதிகம் என்கிறது ஆய்வு குறிப்பு.
எனவே உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் யோசித்து செய்யுங்கள். வினையை வெத்தலை பாக்கு வச்சு அழைத்த மாதிரி எதையும் செய்ய வேண்டாம்.
அருமை சகோ நன்றிகள் பல பல
ReplyDelete