இந்த பூமி தன் இறுதி காலத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. உயரினங்கள் அனைத்தும் அழிந்து போகும் என்கிறார்கள்.
ஆனால் 2012 டிசம்பரில் உலகம் அழியும் என்றெல்லாம் நம் முன்னோர்கள் சொல்லி வைக்கவில்லை. யுகங்களின் முடிவில் மகாபிரலயம் தோன்றும்.
அப்போது உயிர்கள் அழியும். மீண்டும் பிரம்மா முதலில் இருந்து தன் படைப்பு தொழிலை ஆரம்பிப்பார் என்று நமக்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
யுக முடிவு வரை தோன்றும். நாம் இருக்காப்போவதில்லை. அல்லது ஒருகால் பல பிறவிகள் எடுத்து அந்த யுக முடிவின்போது நாம் வாழ்ந்தாலும் ஆச்சரியம் இல்லை. யார் சொல்லமுடியும்.
நேற்று நம்முடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் இன்றில்லை. ரெத்தமும் சதையுமாக நம்முடன் பேசிக்கொண்டிருந்தவர் எங்கே போயிருப்பார்?
மறைந்து போன நம் அப்பா, அம்மா சுற்றங்கள், சொந்தங்கள் எங்கே? இந்த வாழ்க்கைக்கு பின் என்ன? என்பதைப்பற்றி எல்லாம் நாம் கவலைபடுவதில்லை. இந்த நொடி வரை நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதே நம் மகிழ்ச்சி.
நமக்கும் ஒரு நாள் மரணம் வரும். அது நாளையோ இல்லை இன்னொரு நாளோ இருக்காலாம்.
சரி... மரணத்திற்கு பின் மனிதர் நிலை என்ன? இறப்புக்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற சிந்தனை எழும்போது, இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் மனதில் ஓடுகிறது.
வயது முதிர்ச்சியடைந்து நம் மனதின் வேகத்திற்கு உடல் ஈடு கிடைக்காமல் போகும்போதே, மனம் இப்படி திரும்பி பார்க்கும் சம்பவங்கள் நடக்கிறது.
ஆனால் ரத்தமும், இளமை துடிப்புடன் இருக்கும் போது, எதுவும் நம் மூளையில் ஏறுவதில்லை. ஆன்மாவின் பயணம் தொடர்க்கிறது.
நம் வினைகளுக்கேற்ப வரும்பிறவி அமைகிறது. எனவே... இந்த வாழ்க்கையை செம்மையாக வாழவேண்டும் என்கிற போதனைகளை எல்லாம் கேட்க நம் காதுகள் விரும்புவதில்லை.
மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்கிற எண்ணமும் தோன்றாமல் போய் விடுகிறது. தன் சுயநலத்திற்காக அடுத்தவனின் நலனை சிதைக்க தயாராகி விடுகிறோம்.
உண்மையில் மனித வாழ்க்கை மிக சிறியது. நம்முடைய ஒரு வருடம் தேவர்களின் ஒரு நாளாம். ஒரு மகாயுகம் என்பது பிரம்மாவின் பாதி நாள். இரண்டு மாகாயுகம் பிரம்மாவின் ஒருநாள் .
ஒரு மனிதன் 70 வருடம் வாழ்ந்தாலே முழு வாழ்க்கையை வாழ்ந்து முடித்ததாய் கருத வேண்டி இருக்கிறது. பிரம்மா கண் சிமிட்டும் நேரத்தில் கழிந்து விடுகிறது நம் வாழ்க்கை.
இந்த சின்ன வாழ்க்கையை நடத்தத்தான் எவ்வளவோ போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது. நட்பு, பகை, சண்டை,சச்சரவுகள் என அல்லல் படுகிறோம்.
இந்த வாழ்க்கையை அமைதியாய், சந்தோசமாய் அனுபவித்து நிறைவு செய்ய நமக்கு தெரியவில்லை.
நாமும் சந்தோசமாக இருந்து, அடுத்தவரையும் சந்தோஷமாக்கி செல்லும் வாழ்க்கைதான் உயர்ந்த வாழ்க்கை. அப்படி வாழ நமக்கு தெரியவில்லை. அல்லது பயிற்றுவிக்க படவில்லை.
அன்பும் அமைதியுமாய் மக்கள் இப்பூமியில் வாழ்ந்த யுகம் ஒன்று இருந்ததாம். அதை சத்யுகம் என்றார்கள். படித்திருக்கிறோம், பார்த்தில்லை.
சண்டை சச்சரவு இல்லாமல், மனிதனை மனிதனே கொல்ல ஆயுதம் செய்யாமல், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஏமாற்றி பிழைக்காமல், அன்பு மட்டுமே செலுத்திக்கொண்டு, அமைதியாய் மனிதன் வாழ்ந்த வாழக்கையை எண்ணிப்பார்த்தாலே எத்தனை இனிமையாக இருக்கிறது.
ஒரு வேலை அதுதான் சொர்க்கமோ என்னவோ?
ஒன்றை எப்போதும் நம் ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும். நமக்கு மேலான சக்தி ஓன்று உண்டு.
அவனுக்கு இறைவன் என்று நம்முனோர்கள் பெயர் சூட்டினார்கள். இயற்கை சக்தி, பிரபஞ்ச சக்தி என்றும் நாம் அதற்கு பெயர் சொல்லிக்கொள்ளலாம்.
உலகில் உள்ள எல்லா இனத்திற்கும் இறை நம்பிக்கை இருக்கிறது. இறைவன் இருக்கிறான். நம் ஒவ்வொரு செயலும் அவனால் கண்காணிக்கப்படுகிறது.
நம் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பதே உண்மை.
இறைநம்பிக்கைதான் இந்த உலகில் மனிதனை மனிதனாக வாழவைத்து கொண்டிருக்கிறது. இறைநம்பிக்கைதான் மனிதர்களை விலங்குகளில் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.
இறைவன் என்ற ஒருவன் மீது நம்பிக்கை இல்லாமல் போயிருந்தால் இங்கே மனிதர்களில் பலர் மிருகங்களாக திரிந்து கொண்டிருப்பார்கள்.
ஆன்மிகத்தையும், அன்பையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும், மனித சேவையையும் வாழ்க்கையின் அடிப்படையாய் கொண்டு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் நாம்.
அதனால் தெய்வ பிறவிகளாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் மனிதனாக வாழ்வோமே.
-மதிவாணன்
அப்படிச் சொல்லுங்க...! (மதிவாணன்) பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
ReplyDeleteUnmayana Varigal.
ReplyDelete..Nandri Ayya...
UNMAYANA VARIGAL...
ReplyDeleteNANDRI AYYA...
Unmayana Varigal.
ReplyDelete..Nandri Ayya...