தலைமுடியை பராமரிப்பதற்கு நவீன மருந்துகள் மற்றும் வழிமுறைகளை விட, பாரம்பரியமாய் நம் மக்கள் கடைபிடித்து வரும் இயற்க்கை வைத்திய முறைகளே நல்ல பயன் தரக்கூடியதாக இருக்கிறது.
அந்த வைத்திய குறிப்புக்கள் இங்கே இடம் பெறுகின்றன.
சமையலுக்கு பயன்படுத்த தேங்காய் உடைக்கும் போது, அதன் தண்ணீரை வீணாக்காமல் தலையில் விட்டு ஊறவைத்து பின் குளித்தால், முடிகள் ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.
முடி உதிர்வதை தடுக்க தேங்காய் பால் பிழிந்து அதை தலையில் ஊற்றி ஊறவைத்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
ஒரு கைபிடியளவு பச்சை கறிவேப்பிலையை நூறு மில்லி தேங்காய் எண்ணையில் போட்டு கொதிக்க விட்டு, அந்த எண்ணையை தளிக்கு தேய்த்து வந்தால் முடி கொட்டுவது குறையும். வாரம் இரண்டு முறை இப்படி செய்வது நல்ல பலன் கிடைக்கும்.
கறிவேப்பிலையை அரைத்து அதை தேங்காய் பாலுடன் கலந்து தலையில் தேய்த்து உலரவிட்டு குளித்து வந்தால் முடி செம்பட்டையாவது மாறும்.
அழகுக் குறிப்பு அருமை! பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteபயன் தரும் பகிர்வு...
ReplyDeleteநன்றி...