ads

Thursday 28 March 2013

கட்சத் தீவை திரும்ப தருகிறோம் ஆனால்...!!


இலங்கையில்  என்ன நடக்கிறது என்று உண்மையில்  இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு தெரியுமா தெரியாதா என்பதே தெரியவில்லை. 

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பது இலங்கை விஷயத்தில்  எதிரொலிக்கிறது. 

ஒரு அரசாங்கம் செய்த தவறுக்கு அப்பாவி பொது மக்களை குறை சொல்கிறோம். தண்டிக்க முயல்கிறோம்.  அப்படி செய்பவர்கள் ஹிரோக்களாக மாறி விடுகிறார்கள்.

புத்த மதத்தை கடை பிடித்தாலும், பெரும்பான்மை சிங்களவர்கள் ஹிந்து வழிபாட்டை தவறாமல் செய்பவர்கள். அவர்கள் இந்தியாவிற்கு, வழிபாடு செய்ய வந்தால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம். 

சிங்கள காடையர்கள் ஓட ஓட விரட்டியடிப்பு என்று இந்த வெக்கங்கெட்ட  தனத்தை கொட்டை எழுத்தில் போட்டு விளம்பர படுத்தியது ஊடகங்கள். இந்த தாக்குதலில் புத்த பிக்குகளும் தப்பவில்லை.



இப்போது,  நீண்ட காலமாக இருக்கும் கட்ச தீவு பிரச்சனை  விஸ்வருபம் எடுத்துள்ளது. 

மீனவர் பிரச்சனைக்கு  தீர்வு காண வேண்டுமானால், இலங்கை வசம் உள்ள கட்ச தீவை திரும்ப பெற வேண்டும் என்ற கோஷம்   அதிகரித்து விட்டது. 

அதற்கு தகுந்த மாதிரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார். 

இதன்  எதிரொலி  இலங்கையில் எப்படி இருக்கிறது ?

இலங்கையில் வாழும் இந்தியர்களின் தலையில் இடி விழுந்து விடும் போலிருக்கிறது.

கட்ச தீவை திரும்ப  தருவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. தற்சமயம்  இலங்கையில் மொத்தம் 8,42,323 இந்திய தமிழர்கள் உள்ளனர். (இரண்டாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கு )

இவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள் என்றால், இவர்களுக்கு இந்திய பிரஜாவுரிமை கொடுக்க முடியாது என்று இந்திய அரசு சொல்கிறது.

உங்கள் நாட்டவர்களான இவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்.

அதற்கு  பரிசாக  அவர்களுடன் சேர்த்து கச்சதீவையும் கொடுத்து விடுகிறோம் என்கிறார் இலங்கையின் புத்த மத அமைப்பான லக்பல சேனாவின் தலைவர் டாக்டர் சுதத் மல்லிக்காராச்சி.

இந்த தமிழர்கள், வெள்ளைக்காரர்கள்  காலத்தில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தேயிலை தோட்டங்களில் பணிபுரிய கொண்டு செல்லப்பட்டவர்கள்.

அந்த காலகட்டத்தில் தான் மலேசியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளுக்கும் தமிழர்கள், விருப்பத்தின் பேரிலும், கட்டாயமாகவும் கொண்டு செல்லப்பட்டார்கள்.

(எப்படி நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் இளைய தலைமுறையினர் பாலாவின் பரதேசி  படத்தை பார்க்கவும் )

இது இப்படியே வளர்ந்து கொண்டு போனால், தேயிலை தோட்ட தொழிலாளர்களாகவும், பெரும் தொழில் நடத்தும் வணிகர்களாகவும் வளர்ந்து விட்ட இந்திய தமிழர்களுக்கு  இலங்கையில் தீம்ப்பாகத்தான் விடியும்.



5 comments:

  1. உண்மை நிலையை வெளிப்படையாக கூறியிருக்கின்றீர்கள். ந்ன்றி!

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது சரி ஆனால் கச்சத்தீவு தனித்திர முறையில் பெறப் பட்டது. முன்னர் நேரு சீனாவிற்கு இந்திய நிலம் கொடுத்தார் , இந்திரா இலங்கைக்கு கட்சத்தீவு கொடுத்தார் வாஜ்பாய் கார்கிலில் ஒருபிடி மண் கூட தரவில்லை. எதிர்காலத்தில் இலங்கையில் சிங்களர்களே இருக்க மாட்டார்கள் ஏனென்றால் சீனாவை உள்ளே விட்டு லாபம் பார்கிறார்கள் அவன் அங்கே 25 சதவீதம் வந்து விட்டான் கப்பல் துறைமுகம் கட்டி விட்டான் கல்வி கேள்வியாகி விட்டது.

    ReplyDelete
  3. தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  4. உண்மையில் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்கள் சக்கர வியூகத்தில் சிக்கிய அபிமன்யு மாதிரி சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தான் வசிக்கிறார்கள். இது வரை அவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சனை இல்லை. இப்போது சிங்களர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதால், கட்ச தீவை திரும்ப கேட்க வேண்டும் என்பதால் எதிர்ப்புகள் வருகிறது. காவேரி பிரச்சனையில் வாட்டாள் நாகராஜ் மாதிரி ஆட்கள் கிளம்புவார்கள் இல்லையா. அது போல.

    ReplyDelete
  5. பச்சோந்தி போல நாக்கை நீட்டி பூச்சிகளை
    பிடித்து உண்ணும் அரசியல்வாதிகளை நம்பினார்
    வாழ்வு அதோகதிதான்.

    அவர்கள் தப்பித்துவிடுவார்கள் கொள்ளை அடித்த பணத்துடன்

    அவர்களை நம்பிய அப்பாவி மக்கள் பிணமாகத்தான்
    போனார்கள் ஒவ்வொரு நாட்டிலும்.

    கடவுளை நம்பியவர்கள் என்றும்
    வீணாவதில்லை.

    சில நேரங்களில் கடவுளும் கைவிட்டுவிடும்
    சம்பவங்களும் உண்டு ஆனால் அதற்கு
    காரணம் கடவுளில்லை.

    மனிதர்களின் அவ நம்பிக்கைதான் காரணம்.

    நல்லது நடக்க அவர்கள் சார்பில் நாம் பிரார்த்திப்போம்.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...