வீரசிங்கம்-நேதாஜி முதல் பகுதி
புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஒருவருக்கு மட்டுமே இடம் இருக்கிறது என்று ஜப்பான் அதிகாரிகள் கூறினார்கள். விமானத்தில் போவதா வேண்டாமா என்று ஒரு கணம் நேதாஜி யோசித்தார்.
புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஒருவருக்கு மட்டுமே இடம் இருக்கிறது என்று ஜப்பான் அதிகாரிகள் கூறினார்கள். விமானத்தில் போவதா வேண்டாமா என்று ஒரு கணம் நேதாஜி யோசித்தார்.
சைகோன் நகரை எந்த நிமிடமும் பிரிட்டீஷ் அமெரிக்க படைகள் கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது. அந்த படைகளிடம் சிக்கினால் தன்னை கைது செய்வது நிச்சயம்.
போர் கைதியாக பிடிபடுவதை நேதாஜி விரும்பவில்லை. எனவே விமானத்தில் போவதே மேல் என நினைத்தார். விமானத்தில் ஏறி அமர்ந்தார்.
கடைசி நேரத்தில் இன்னொருவர் வரலாம் என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள்.
எனவே ஹபீப் -வுர் - ரகிமான், நேதாஜி அருகில் போய் அமர்ந்தார். விமான நிலையத்தில் கூடி இருந்தவர்களி பார்த்து நேதாஜி ஜெய் ஹிந்த் என்று கூறினார். விமானம் புறப்பட்டது.
அது எந்த இடத்திற்கு போகிறது என்று அறிவிக்க படவில்லை. நேதாஜியின் கடைசி விமான பயணம் அதுவாக இருக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை.
ஆகஸ்ட் 19ம் தேதி ஜப்பான் ரேடியோ நேதாஜி இறந்து விட்டார் என்ற திடுக்கிடும் செய்தியை அறிவித்தது.
ஜப்பான் ரேடியோ கூறியதாவது.
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தின் தலைவராக நேதாஜி 1945 ஆகஸ்ட் 16ம் தேதி ஜப்பானிய அரசுடன் பேச்சு நடத்த விமானத்தில் புறப்பட்டார்.
18ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பார்மோசா தீவில் உள்ள தைஹோக்கு விமான நிலையத்தில் அவர் விமானம் விபத்துக்குள்ளானது.
அதில் அவர் படுகாயம் அடைந்தார். ஜப்பானில் ஒரு மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமால் அன்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்தார்.
அவர்தான் பயணம் செய்த ஜெனரல் சுனாமாசா என்ற ஜப்பானிய அதிகாரி விபத்து ஏற்பட்ட உடனேயே மரணம் அடைந்தார்.
நேதாஜியின் உதவி தளபதி ஹபீப் வுர் ரகிமானும் மற்றும் நான்கு ஜப்பானிய அதிகாரிகளும் பலத்த காயம் அடைந்தனர் இவ்வாறு ஜப்பனிய ரேடியோ அறிவித்தது.
இந்த செய்தி இந்திய மக்களை நிலை குலைய செய்ததது. நேதாஜி இறந்து விட்டார் என்பதை பலர் நம்பவில்லை.
நேதாஜி இறந்து விட்டார் என்றால் அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்க வில்லை என்று கேட்டனர்.
ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து படுகாயம் அடைந்த ஹபீப் வுர் ரகிமான் நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன் என்று கூறினார்.
ஆயினும் முத்துராமலிங்க தேவர் உட்பட பல தலைவர்கள் நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்றே கூறி வந்தானர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1956 இல் நேதாஜி பற்றிய உண்மைகளை கண்டறிய மூவர் கொண்ட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
அந்த கமிட்டி டோக்கியோ, சைகோன், பாங்காக் உட்பட பல இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது.
இறுதியில் கமிட்டியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை. டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவர் அஸ்த்திதான் என்று அறிக்கை கொடுத்தார்.
மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் ( நேதாஜியின் அண்ணன் ) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். 1967 இல் 350 எம். பி க்கள் கையெழுத்திட்டு நேதாஜி பற்றி மீண்டும் விசாரணை நடத்தும் படி ஜனாதிபதியிடன் மனு கொடுத்தார்.
அதன் படி ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி. டி கொசலாவை கொண்ட ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
அவர் ஜப்பான் தைவான் உட்பட பல நாடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார்.
முடிந்ததா...?
ReplyDelete