உலகத்தில் உள்ள அத்தனை பொருள்களையும் மனிதன் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் புரிந்து கொண்டு விட்டான்.
அதனால் அவன் இயற்கையான அமைப்புகளை மாற்றி அமைக்கக் கூடிய வல்லமை கொண்டவனாக ஆகிவிட்டான். இந்த நிலையில் கடவுளை நம்ப வேண்டியதின் அவசியம் என்ன?
மனிதன் இன்று உலகத்தின் அமைப்பை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறான். வானவெளியில் பிரயாணம் செய்யவும் கற்றுக் கொண்டிருக்கிறான்.
ஆனால் அவனால் மனித வாழ்க்கையில் அன்றாட மாற்றங்களை கணிக்க முடியவில்லை. நாளைக்கு என்ன நடக்கும் என்று அவனால் சொல்ல முடியவில்லை.
மனிதன் இந்த முயற்சியில் ஈடுபட்டால் அதற்கு எவ்வளவு பலன் கிடைக்கும் என்று அவனால் சொல்ல முடிவதில்லை. முயற்சி ஒரு விதமாகவும். அதற்கு பலன் வேறு விதமாகவும் அமைந்து விட்டால் அதன் காரணத்தை அவனால் விளக்க முடிவதில்லை.
மனிதனை மீட்டு வழிகாட்ட அவன் பெரும் சக்தியான கடவுளைதான் நாட வேண்டியிருக்கிறது.
மனிதன் இன்று எத்தனையோ இயந்திரங்களையும், கம்பியுடர்களையும் கண்டுபிடித்து விட்டான்.
பல்லாயிரக்கனக்கான மக்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு சில கருவிகளே செய்து விடுகின்றன. இவை எல்லாம் விஞ்ஞான அற்புதங்களே.
ஆனால் இவற்றில் ஒரு சிறு கருவி கூட தானே இயங்க முடியாது. பழுதாகி விட்டால் தானே சரி செய்து கொள்ள முடியாது. அதற்க்கு ஒரு மனிதன் தான் தேவைப்படுகிறான்.
அந்த மனிதனை உண்டாக்கும் வல்லமையை இன்றும் எந்த விஞ்ஞானியும் கண்டு பிடிக்கவில்லை. இறந்து விட்ட சிறு எறும்புக்கு கூட எந்த விஞ்ஞானியும் உயிர் கொடுக்க முடியாது.
ஆகையால் தனது படைப்பு வாழ்க்கை, முடிவு ஆகிய மூன்றுமே மனிதன் தன்னை ஆட்டி படைக்கக் கூடிய வேறு சக்தி ஒன்றைத்தான் நம்பி இருக்கிறான்.
ஆகையால் கடவுள் நம்பிக்கை அவசியமா என்று நாம் கேட்க வேண்டியதில்லை. அதை ஒத்து கொள்ளாமல் வாழ முடியாது என்பதை புரிந்து கொண்டால் போதும், அப்படி புரிந்து கொள்ள இயலாதவர்கள் எத்தனை விஞ்ஞான அறிவு பெற்றிருந்தாலும், அது அவனை முழுமையானவனாக செய்ய முடியாது.
சுவாமி. சிவருப தாமோதரதாசா.
அவரவர் உணர வேண்டும்...
ReplyDeleteகடவுளால் படைக்கப்பட்ட களிமண்ணைக் கொண்டு புது புதிதாய் பொம்மைகள் செய்வதற்குதான் பெயர் விஞ்ஞானம் .அந்த பொருட்கள் ஒன்று அழிக்க பயன்படும், அல்லது அழிந்து மீண்டும் அதே களிமண்ணாகப் போகும்.
ReplyDeleteஇந்த உயிர் வசிக்கும் உடலுக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய இயலவில்லை. என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது எப்படி நடக்கிறது என்பதை தானாகவே அறிய இயலாத அகம்பாவம் பிடித்த கூட்டம்
உயிரற்ற கருவிகளின் துணைகொண்டு உயிர் வாழும் இந்த கோயிலை ஆராய்ந்து பல நூறு ஆண்டுகளாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றன .இன்னும் அனுமானத்தில்தான் கதை அளக்கின்றனர்
எந்த கருவிகளுமின்றி சித்தர்கள் அனைத்தையும் இறைவனருளால் அறிந்தவர்கள் மட்டுமின்றி அவர்களால் ஆக்கவும் செய்யமுடியும் .அழிக்கவும் செய்யவும், அழித்ததை மீண்டும் அப்படியே தோற்றுவிக்கவும் சக்தி படைத்தவர்கள்.
இப்போதுள்ள விஞ்ஞான முன்னேற்றங்களினால் விளைந்த நன்மைகளை விட கோடி தீமைகளும், அழிவுகளும் நிகழ்ந்துள்ளன என்பது கலப்படமற்ற உண்மை.
மனித பிறவி எடுத்ததே மகேசனை அறிவதர்க்குதான் என்று பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே உலகுக்கு உணர்த்தியது நம்முடைய மகான்கள்.
ஏதோ கோடியில் ஒரு சிறு துகளை அறிந்துகொண்டுவிட்டு அனைத்தையும் அறிந்து கொண்டு விட்டதாக பகல் கனவு காணும் கூட்டம்..அதனால் அகந்தை கொண்டு கடவுளே இல்லை என்று பிதற்றும். கூட்டம்.
அபோல்லோ விண்கலம் ஆபத்தில் சிக்கியபோது
இதே ஜன்மங்கள் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்ததை யாரும் மறக்க முடியாது.
விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா சென்ற
விண்கலம் வெடித்து சிதறியதை இவர்களால் ஏன் தடுக்க முடியவில்லை?
இது போன்ற கணக்கற்ற சம்பவங்கள் நடந்தும்
தன்னை மீறிய சக்தி ஒன்று உள்ளது அதுதான் அனைத்தையும் செய்கிறது என்று வீம்புக்காக ஏற்றுகொள்ளாமல் இருக்கும் கூட்டம் இந்த உலகில் அன்றும் உண்டு இன்றும் உண்டு. என்றும் இருக்கும்.
கடவுளால் படைக்கப்பட்ட களிமண்ணைக் கொண்டு புது புதிதாய் பொம்மைகள் செய்வதற்குதான் பெயர் விஞ்ஞானம் .அந்த பொருட்கள் ஒன்று அழிக்க பயன்படும், அல்லது அழிந்து மீண்டும் அதே களிமண்ணாகப் போகும்.