அவ்வப்போது அரசியலில் அதிர்வேட்டு போடும் சுப்பிரமணியசாமியின் மதுரை அலுவலகம் நேற்று தாக்கப்பட்டது தெரியும்.
தினம்தோறும் அரசியல் நிகழ்வுகளை கண்காணிக்கும் பார்வையாளர்களுக்கு ஒரு விஷயம் புரியாமல் இருக்கும். இந்த சுப்பிரமணியசாமி என்ன செய்தார். ஏன் அவர் அலுவலகம் தாக்கப்பட்டது?
விஷயம் இதுதாங்க.
சுப்பிரமணிம் சுவாமி, கடந்த 28-ம் தேதி கொழும்பு சென்று இறங்கினார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் அழைப்பை அடுத்து, அவர் சென்றிருந்தார் என்பது தான் தகவல்.
ஜனாதிபதியின் இல்லமான அலரி மாளிகையில் சந்திப்பு நடந்தது.
என்ன பேசி இருப்பாங்க?
தெற்க்கே இருந்து செய்தி வந்ததா? வடக்கே இருந்து தூது வந்ததான்னு பேசியிருக்க மாட்டாங்க.
இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழக நிலவரம் பற்றி தான் பேசியதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின் போது ராஜபக்ஷேவின் சகோதரர் கோட்டாபய, இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆகியோரும் உடனிருந்தனர்.
சுப்பிரமணிய சாமியால் தமிழக நெருப்பை அணைக்க முடியும் என்று ராஜபக்ஷே நினைக்கிறாரா? அல்லது அவரை வைத்து ஏதாவது குட்டையை குழப்ப முடியுமா என்று திட்டம் போடுகிறாரா என்று தெரியவில்லை.
பலரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சுப்பிரமணியசாமிக்கு இது கெட்டகாலமோ என்னவோ? வம்பை விலை கொடுத்து வாங்கி வந்திருக்கிறார்.
அவர் அலுவலகம் தாக்கப் பட்டது தொடர்பாக இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.
யாருன்னு தெரிஞ்சாதானே பிடிக்கிறதுக்கு?
No comments:
Post a Comment