மாந்தி S / O சனீஸ்வரன்.
இது ஒரு உபகிரகம்தான். இருந்தாலும் குத்தூசி போடுறதுல பத்து பாவ கிரகத்திற்கு சமம். இவாளும் பாவ கிரக வரிசையில் வருவதால் 3,6,11 ஐ தவிர எங்கிருந்தாலும் இடைஞ்சல், யாரோடு சேர்ந்தாலும் குடைச்சல்.
இது பெரும்பாலும் ஜோதிடர்கள் மத்தியில் பிரபலம் இல்லாத கிரகம். ஆனால் நல்லா போகும் வாழ்க்கையை செல்லாகாசாக்குவதில் கில்லாடி.
உம்மருக்கு என்ன கொடுத்து வச்ச மகராஜான்னு பலனை சொல்லிக்கொண்டிருந்தால், ஜாதகம் பார்க்க வந்த அன்பர் தங்கத்தை தவற விட்ட பொண்ணு தரையை பார்த்து நடப்பதுபோல், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பார்.
ஒன்பது கிரகத்திற்கு இருப்பது போல் இதற்கென தசாபுத்திகள் கிடையாது. ஒரு பாவத்திற்கு அதிபதியாக வருகிறமாதிரி ஆட்சி வீடுகள் கிடையாது. ஆனால் இருக்கும் இடத்தை வைத்து, சேரும் கிரகத்தை வைத்து பலனை தரும்.
ஆனால் நடைமுறையில் மாந்திக்கும் ஆட்சிவீடுகள் பற்றிய குறிப்புகள் உண்டு.
என்னவோ?
சொல்றேன். கும்பம் இருக்குல்ல கும்பம் அது ஆட்சி வீடு. தனுசு உச்ச வீடு. மிதுனம் நீச்ச வீடு.
உண்மையாகவா?
அப்பா சொத்துல பிள்ளைக்கு பங்குண்டு என்ற அடிப்படையில் சனியோட பிள்ளைக்கு கும்பம் ஆட்ச்சி வீடா வந்துச்சோ என்னமோ.உறுதிபடுத்த முடியாது.
அதனால் ஆட்சி வீடுகள் உண்டு என்பதை உறுதிபடுத்த முடியாததால் ஆரம்ப நிலையிலேயே இதை தள்ளுபடி செய்கிறேன்.
பழைய கிரந்த்தங்களை தேடி தேடி அலசி பார்த்தால் ஒரு சில இடங்களில் மட்டுமே மாந்தி பற்றிய குறிப்பு தென்படுகிறது. அதுவும் முழுமையாக இல்லை.
யோசித்து பார்த்தால் ஒரு விஷயம் புலனாகிறது. வழிப்பாட்டு தளங்களில் நவகிரங்களுக்கு இடமளித்து வணங்குதலுக்கு உரியதாய் ஏற்றுக் கொண்ட நம் முன்னோர்கள். உப கிரகங்களை அந்த வரிசையில் சேர்க்க வில்லை.
ஏன்? பெரிய அளவில் மாற்றம் எதையும் தந்து விடாது என்ற கோணத்திலா?
ஒரு வகையில் உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிலும், கேரளா, ஆந்திரா, இலங்கையிலும் கூட மாந்தியை குறிப்பிடாத ஜாதக குறிப்புகள் இல்லை.
பொதுவாக மாந்தியை கொண்டு அறியப்படும் பலன்கள் பின் வருவன.
திடீர் கண்டங்கள், தீர்க்க முடியாத வியாதிகள், மரணம் இவற்றை அறிய முடியும்.
அம்சத்தில் மாந்தி இருக்கும் ராசியை, பிறப்பு ராசி கட்டத்தில் இருப்பதாக வைத்து கொண்டு, அதற்கு திரிகோண ராசியில் கோச்சார சனி வரும் காலம் ஜாதகருக்கு கண்டங்கள் வரத்துவங்கும்.
அந்த ஜாதகருக்கு எட்டுக்குடையவன் திசை நடந்தால் திடீர் கண்டம், விபத்து, நஷ்டம், திருட்டு, வழிப்பறி, தீ விபத்து, போலிஸ் கேஸ் இதில் ஏதாவது ஓன்று நடப்பில் வரும்.
மாந்தி இருக்கும் ராசிக்கு திரிகோணத்தில் கோச்சார சனி வரும் காலம் ஆறுக்குடையவன் திசை நடப்பில் இருந்தால் தீராத வியாதி, சண்டை, பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது போல், பிரச்சனைகளுக்கு இடையே வாழும் சூழல், அவமானங்கள் அரங்கேறும்.
மாரக திசை நடப்பில் இருந்தால் மாரகம் செய்யும் கடமை மாந்திக்கே உண்டு.
No comments:
Post a Comment