Follow by Email

Monday, 18 March 2013

வலியில்லாமல் வெற்றியில்லை!!

சின்ன வார்த்தைகளின் தாக்குதல்களால் சுருண்டு விழுந்து விடுகிறோம். சின்ன தோல்வியால் மனம் உடைந்து போகிறோம், 

எதிர்மறையான விமர்சனங்கள் நம்மை காயபடுத்தி விடுகிறது. கோவப்படுத்தி விடுகிறது.  ஏற்பட்டு விடும் அவமானங்கள் நம்மை குறுக வைத்து விடுகிறது.

நேரம் கிடைக்கும் போது நம் உணர்வுகளை எல்லாம் தூர ஒதுக்கி வைத்து விட்டு அமைதியாக உட்கார்ந்து சிந்தித்து பார்த்தால்,  இந்த சம்பவங்களினால் நாம் பாதிக்க பட தேவையில்லை என்பதை உணர்வோம். 

இவையெல்லாம் எல்லா மனிதர்களுக்கும் நேர்கிறது என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரன மனிதர் முதல் சாதித்த மனிதர் வரை எல்லோருமே இது போன்ற பிரச்சனைகளை கடந்துதான் வந்திருக்கிறார்கள். இதை தெளிவாக தெரிந்து கொண்டால் இவற்றினால் நாம் பாதிக்கப் படபோவதில்லை. பாதித்தால் நஷ்டம் நமக்குத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மனிதர்கள் பலவிதம். எல்லோரும் நம்மை புரிந்து கொள்ள மாட்டார்கள். எல்லோரும் நம்மை தட்டிக் கொடுத்து வளர்த்து விட மாட்டார்கள். 

நமக்கு நன்கு தெரிந்தவர்களே சில சமயம் தூக்கி எரிந்து எரிந்து பேசிவிடும் போது மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் பிரயோசனம் இல்லை. 

ஒரு முதலாளியாய் உங்களை நினைத்து பாருங்கள்.உங்கள் பணியால் ஒரு தவறு செய்துவிடும் போது உங்களால் அவனை பேசாமல் திட்டாமல் இருக்க முடியுமா? நீங்கள் பிறரிடம் பெரும்தன்மையுடன் நடந்து கொள்கிறீர்களா? 

ஒரு தவறு நடந்துவிடும் போது உங்களால் கோவப்படாமல்  இருக்க இருக்க முடியுமா?

உலகில் அவமானப்படாதவர்கள், தோல்விகள் அடையாதவர்கள் யாரும் இல்லை.

அமிதாபச்சன் சினிமாவில் சான்ஸ் கேட்டு சென்ற போது, இவன் என்ன ஒட்டக சிவிங்கி மாதிரி இருக்கான். இந்த மூஞ்சி எல்லாம் சினிமாவுக்கு சரியாய் வராது என்று திருப்பி அனுப்பினார்களாம்.

அவர் துவண்டு விடவில்லை. நம்மால் நடிகனாக முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அவர் துவண்டு போயிருந்தால் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியாது.

அன்னை தெரஸா தான் பராமரிக்கும் குழந்தைகளின் செலவிற்காக ஒவ்வொரு கடையாக நம்கொடை கேட்டு தட்டினை ஏந்திய போது, அத்தட்டில் எச்சில் துப்பி அவமானப் படுத்தினானாம் ஒரு கடைக்காரன்.

தெரஸா உணர்ச்சி வசப்பட்டு கோவத்தில் கொந்தளிக்க வில்லை. அமைதியாய் அதை துடைத்து விட்டு மீண்டு தட்டி நீட்டினார். கலங்கி போன கடைக்காரன் அதிக பணம் கொடுத்து அனுப்பினானாம்.

மைக்கல் ஜோர்டான் என்பவர் உலகின் மிக சிறந்த கூடை பந்து வீரர். பள்ளிகூடத்தில் அவரை கூடை பந்து விளையாட லாயக்கு இல்லாதவன் என்று டீமில் இருந்து விரட்டி விட்டார்களாம்.

புகழ் பெற்ற அறிவியல் மேதை ஜஸ்டினை இன்று அறியாதவர் யாரும் இல்லை. அவர் மண்டு மக்கு என்று பிராகிரஸ் ரிப்போர்டில் எழுதப்பட்ட குறிப்புகளோடு பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டவர்தான் அவர்.

நோர்மா  என்ற பெண்மணி மாடலாக ஆசைப்பட்டு ஒரு கம்பெனியில்  வாய்ப்பு கேட்டார். கேலியாக சிரித்து போ போய் எங்காவது கிளார்க் வேலையை பாரு. இல்லைன்னா கல்யாணம் செய்துகிட்டு புள்ளை குட்டியை பெத்துக்க என்று சொல்லி அனுப்பி விட்டார்களாம்.

ஆனாலும் மனம் நொந்து போகாத அந்த பெண்மணிதான் மர்லின் மன்றோ என்று புகழ் பெற்றார்.

இங்கே அவமானபடாதவர்கள் காயப்படாதவர்கள்  யாரும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டால் எழுந்து நிற்க வேண்டும் என்ற உத்வேகம் உங்களுக்கு வரும்.

- மதிவாணன்


1 comment:

  1. நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள் மதிவாணன் அவர்களே...

    ReplyDelete