ராமர் கட்டிய பாலம் பல லச்சம் ஆண்டுகளாக ராமேஸ்வரம் கடலில் முழ்கி இருப்பது போல், மகாபாரத காலத்தில் கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது.
தொல்லியல் ஆராச்சியில் புதைந்த பகுதிகளை காண முடிந்ததால், துவாரகை இருந்தது உண்மை என்பது நிருபணம் ஆகி உள்ளது.
இந்திய தேசிய கடல் ஆராட்சி கழகம், துவாரகை கடல் பகுதியில் 1983 முதல் 1990 வரை 18 ஆராட்சிகளை மேற்கொண்டது.
குஜராத் மாநிலம் லோத்தல் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் S .R .ராவ் தலைமையில் ஆய்வு நடந்தது. பழமையான நகரமான துவாரகை கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
ஆய்வின் போது துவாரகையின் ஒரு பகுதியான பேட் துவாரகையில் கி மூ 1528 ஆம் அண்டை சேர்ந்த மன்பாண்டத்தையும், கடற்கரையில் 500 மீட்டர் சுவர் ஒன்றையும் கண்டனர். கிருஷ்ணர் ஆண்ட துவாரகை என முடிவு செய்தனர்.
இந்த முடிவுகளை ராவ் தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாராக என்னும் நூலாக ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆய்வின் மூலம் மகாபாரதம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பது உறுதியானது.
மகாபாரத முடிவில் வந்த கலியுகம் தொடக்கி 5113 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பே துவாரகை மூழ்கியதால் இந்நகரம் முழ்கி 5200 ஆண்டுகளாகின்றன என்பது உறுதிப்படுத்தபடுகிறது.
கோமதி நதிக்கரையில் அமைந்த துவாரகைக்கு துவாரமதி, துவாரவதி, குசஸ்தலை என்ற பெயர்களும் உண்டு. துவாரகைக்கு அருகில் உள்ள பேட் துவாரகையிலும் கிருஷ்ணர் வாழ்ந்தற்கான ஆதாரங்கள் உள்ளன.
அங்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கு ஓன்று தொடர்புடைய குடியிருப்புகள், மூன்று பிரமாண்ட கட்டிட தொகுப்புகள் தென் படுகின்றன. சுவரை கட்ட பயன்படுத்திய கற்கள் 5600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக உள்ளன.
பேட் துவாரகை ஒரு தீவு பகுதியாகும். இங்குதான் கிருஷ்ணர், சத்தியபாமா, ஜாம்பவதி ஆகியோர் பொழுது போக்க வந்துள்ளனர்.
ஆங்காங்கே பூந்தோட்டம் ஏரிகளும் உள்ளன. கடலில் மூழ்கிய துவாரகையில் அடிப்படை வசதி உள்ள குடியிருப்பு, வியாபார இடங்கள்,அகன்ற இடங்கள், அழகான துறைமுகம் இருந்துள்ளன.
தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் இழைக்க பட்ட கட்டிடங்களும் இங்கு பிரசித்தமாக விளங்கி உள்ளன.
குருஷேத்திர யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்கு பின் துவாரகை கடலுக்குள் முழ்கி உள்ளது. இதனை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை பிரபாஸ் என்ற உயரமான மலை பகுதிக்கு அழைத்து சென்று பாதுகாத்தார்.
தற்போது இப்பகுதி சோம்நாத் எனப்படுகிறது. அழிந்த துவாரகையை நீர்முழ்கி கப்பலில் சென்று பக்தர்கள் பார்ப்பதற்கு இந்திய கடல் அகழ்வாராட்சி கழகம் ஏற்பாடு செய்கிறது.
தேவலோக தச்சன் விஸ்வகர்மா இந்நகரத்தை கட்டியதாக புராணங்கள் சொல்கின்றன. துவாரகை அழிந்த பிறகு அங்கு மூன்று முறை கோவில் கட்டபட்டிருக்கிறது.
எல்லாமே கடலில் முழ்கி இருக்கலாம். அல்லது பிற சமயத்தால் அழிக்கபட்டிருக்கலாம். தற்போது உள்ள கோவிலில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதற்கு தற்போது துவாராகநாத்தி மந்திர் என்று பெயர்.
நன்றி மக்கள் ஓசை
No comments:
Post a Comment