ads

Thursday, 7 March 2013

திரைக்கதை எழுதுவது எப்படி?


சினிமா ஒரு கனவு தேசம். சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறி, ஆவல், லட்சியம் கொண்ட ஆண் பெண் கூட்டம் எண்ணில் அடங்காது.

ஒரு பாரதிராஜா வெற்றி பெற்றால் 1000 பாரதிராஜாக்கள், சரியான வாய்ப்புகள் இல்லாமல் போராடுகிறார்கள். அல்லது போராடி பார்த்து விட்டு பின் வாங்கி போகிறார்கள். 

நடிப்பு, தொழில் நுட்பம், இசை, இயக்குனர் என்று எத்தனையோ பிரிவுகளில் இந்த தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

இருப்பினும் இன்று,  முன்பு மாதிரி இல்லை. இப்போது இளம் வயதில் வாய்ப்புகள் பெற்று ஜொலிப்பவர்கள்  ஏராளம்.

உங்கள் திறமைகளை உரசி பார்க்க என்று சொல்லவதை விட, இன்னும் மெருகேற்றி கொள்ள சின்ன சின்ன டிப்ஸ் கொடுக்கலாம் என்ற என்ற எண்ணத்தில் இதை எழுகிறேன். 

திரைக்கதை எழுதுவது எப்படி என்பதுதான் தலைப்பு.

இந்த தலைப்பை நான் தேர்வு செய்த காரணம் உங்களுக்கே புரியும். ஒரு படத்தின் வெற்றி தோல்வி, அதில் நடிக்கும் நடிகர் நடிகையை விட, நல்ல கதையும், உயிரோட்டமுள்ள திரைக்கதையும்தான் காரணம். 

மினிமம் கேரண்டி என்று சொல்லக்கூடிய நடிகர்கள் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவுகிறது. யார் என்றே தெரியாத புதுமுகங்கள் நடித்த படம் சக்கை போடு போடுகிறது. 

அதுமட்டும் அல்ல,  நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தெளிவான திரைகதை இல்லாமல் போனால், சொதப்பிட்டான் என்பார்கள். நல்ல நடிகர்கள், பெரிய தொழில் நுட்ப கலைஞர்கள் இருத்தும் இந்நிலை வந்து விடும்.

அதே சமயம் ஒரு வரியில் சொல்லிவிட்டு போகும் ஒரு செய்தியை இரண்டரை மணிநேர சினிமாவாக இருக்கையை விட்டு எழும்ப விடாமல் பார்க்க வைப்பவர்களும் உண்டு. அதற்கு தெளிந்த நீரோடைபோல் அமைந்த திரைக்கதைதான் காரணம்.

ஒரு முழு நீல திரைப்படத்தை எடுப்பதற்குத்தான் திறமை வேண்டும் என்பதல்ல. பத்து வினாடியில் வந்து போகும் சிறு விளம்பரம் படத்திற்கு கூட திறமை வேண்டும்.

சொல்லப்போகும் செய்தி, அதை சொல்லப்போகும் விதம், அதை கண்ணெதிரே காட்சியாக்கும் கதாபாத்திரம்,அந்த கதாபாத்திரம்  பேசும் வசனங்கள், அல்லது வெளிப்படுத்தும் உணர்வுகள், சுற்றுபுறம் எல்லாமே அந்த பத்து வினாடிக்குள் முடிந்து போக வேண்டும்.

அந்த பத்து வினாடிக்குள், அதை காண்போரை சுண்டி இழுக்க வேண்டும், சிந்திக்க வைக்க வேண்டும். அந்த நுகர்வு பொருளை வாங்க தூண்ட வேண்டும்.

அப்படியானால் இதற்கு எவ்வளவு திறமை வேண்டும் என்பதை  சொல்லி தெரிய  வேண்டியதில்லை.

சரி.. நாம் விஷயத்திற்கு வருவோம்.

திரைக்கதை எழுதுவது என்பது ஒரு சினிமாவின் முழு வடிவம். திரைக்கதை சொல்வது என்று ஓன்று இருக்கிறது.

அது எப்படி?

சார்... காலை நேரம்.  முற்றிலும் இருள் விலகவில்லை. கிழ் வானை காட்டுகிறோம், இளம் ஆரஞ்சு நிறத்தில் மேகங்கள் அடர்ந்த வானம் தெரிகிறது. சூரியன் உதயமாகி கொண்டிருக்கிறான்.

அந்த நேரத்தில் கீச் கீச் என்று பறவைகள் சப்தம் கேட்டுகொண்டிருக்கிறது. சாலைகளில் வாகங்கள் இரைச்சலோடு போய் கொண்டிருக்கிறது. கட் பன்றோம்.

ஒரு மிடில் கிளாஸ் பேமலி வீடு. அது ஒரு ஓட்டு வீடு.  வீட்டின் வாசலில் இரண்டு ஹிரோ ஹோண்டா பைக் நிற்குது. அதுக்கு பக்கத்திலே ஒரு சைக்கிள். கொஞ்சம் தட்டு முட்டு பொருட்கள், ஒரு பிளாஸ்டிக் வாலி எல்லாம் அந்த சைக்கிளுக்கு பக்கத்திலே இருக்கு.

மெல்ல வாசலை கடந்து உள்புறம் கேமரா போகுது. பளீர்ன்னு முழு வெளிச்சம் இல்லை. கொஞ்சம் இருள் இருக்கு.

கௌசல்யா சுப்பிரஜா   ராம பூர்வ..... சுப்பிரபாதம் பட்டு சத்தம் மெல்லிசா கேட்குது. அப்ப அந்த வீட்டின் பெட்ரூமை காட்டுறோம். ஒரு பெட்டில் ஒருத்தன் படுத்திருக்கான். அவன்தான் நம்ம கதாநாயகன்.

இப்படி கதையை விவரித்து சொல்வதுதான் திரைக்கதை சொல்வது. கிட்டத்தட்ட திரைக்கதை எழுதுவதும் இப்படித்தான். என்ன... அதை வார்த்தைகளால் சொல்கிறோம். எழுதுவது என்பது பேப்பரில் இருக்கும்.

இப்ப நான் ஒன்னரை நிமிடத்தில் முடியப்போகும் சின்ன கதைக்கு திரைக்கதை எழுதப் போறேன்.

ரெடி டேக்.

லொக்கேஷன் - சென்னை - அவுட்டோர்
பகல் வெளிச்சம்
சம்பவ இடம் மழலையர் பள்ளி.
கதாபாத்திரங்கள் - மூன்று அல்லது நான்கு  வயது இளம்  குழந்தைகள் 30 பேர்.  ஆசிரியர்  தோற்றத்தில் மூன்று நடுத்தர வயது பெண்கள்.


சீன் -1

பரபரப்பு இல்லாத பிரதான சாலை. மரங்கள் அடர்ந்த ஒரு கட்டிடத்தின் லாங்க் ஷாட்.

இப்போது கேமரா ஜுமாகி அந்த கட்டிடத்தின் பிரம்மாண்ட தோற்றத்தை காட்டுகிறது. அதில் ஆதித்தியா மழலையர் பள்ளி என்ற பெயர் பலகை தெரிகிறது.

சீன் -2

வகுப்பறைகள் இருக்கும் நீளமான அந்த பள்ளி வராண்டாவில் கேமரா நகர்கிறது.

வரிசையாக வகுப்பு அறைகள். முதல் வகுப்பு அறையை தாண்டும் போது ஆசிரியை பாடம் சொல்லி கொடுக்கும் குரல் ஒலிக்கிறது.

எ பார் ஆப்பிள், பி பார் பால், சி பார் கேட்.....!!

அடுத்த வகுப்பு அறையை கேமரா  கடக்கும் போது, வேறு ஒரு பெண் ஆசிரியை பாடம் நடத்தும் குரல் கேட்கிறது.


ஒன்

( ஒன் -  குழந்தைகள் கோரஸ் குரல் )

டூ

( டூ - குழந்தைகள் கோரஸ் குரல் )

த்திரி

( த்திரி- குழந்தைகள் கோரஸ் குரல் )

போர்

( போர்- குழந்தைகள் கோரஸ் குரல் )


அந்த நேரம், புடவை கட்டிய  இரு பெண் ஆசிரியைகள் கையில் பாலர் பள்ளி புத்தகம் வைத்து கொண்டு நடந்து வருகிறார்கள். அப்போது இருவரில் ஒரு ஆசிரியை, அருகில் வரும் ஆசிரியையை பார்த்து.....

விஸ்வருபம் பார்த்துட்டிங்களா என்கிறார்.

இம் ...பிரமாதமா இருக்கு... என்ற பதில் குரல் கொஞ்சம் தூரத்தில் கேட்கிறது.

சீன் -3

இடம் - வகுப்பறை, சுவற்றில் மழலையர் பள்ளிகளில் பயன் படுத்தும் போஸ்டர்கள் தொங்குகிறது.

இப்போது ஒரு வகுப்பறை. மாணவ மாணவிகள் தரையில் மேல் போடப்பட்ட பலகையின் மேல் அமர்ந்திருக்கிறார்கள்.

குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலை செய்து கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை புத்தகத்தை புரட்டி கொண்டிருக்கிறது, ஒரு குழந்தை படம் வரைந்து கொண்டிருக்கிறது.

சில  குழந்தைகள் ஆசிரியர் திசை நோக்கி இல்லாமல் வேறு வேறு திசைகளை பார்த்தபடி அமர்ந்திருக்கிறது.


அப்போது ஆசிரியை தனக்கு முன்னாள் இருக்கும் மேஜையின் முன்னால் வந்து குழந்தைகளை நோக்கி சொல்கிறார்.

செல்லங்களா... இன்னைக்கு அன்னையர் தினம். அன்னையர் தினம்னா.. அம்மாவுக்கு மதிப்பு அளிக்கும் நாள். 

இப்போ நான் ஒவ்வொருத்தரா   கூப்பிடுவேன். இங்கே வந்து உங்க அம்மாவை பத்தி சொல்லணும் சரியா?

என்று சொன்னவர் சாந்தினி... நீங்க வாங்க முதல்ல.  என்கிறார்.


அந்த குழந்தை எழுந்து ஆசிரியருக்கு முன்னால் வருகிறது. அந்த குழந்தையை தூக்கி மேஜையின் மேல் நிற்க வைக்கிறார்.

அது தன் இரு கைகளால் தன் மினிஸ்கர்ட்டை பிடித்தபடி நிற்கிறது.  விலகி இருந்த குழந்தையின் சட்டையை சரிசெய்த படி ஆசிரியை அந்த குழந்தையிடம் கேட்கிறார்.

உங்க மம்மியை பத்தி சொல்லுங்க.

குழந்தை பதில் சொல்ல தெரியாமல் நிற்கிறது.

மீண்டும் கெஞ்சலான குரலில்... சாந்தினியை அம்மா என்ன சொல்வாங்க? 

அந்த குழந்தை சற்று தயங்கி சொல்கிறது...  தங்கபொண்ணுன்னு சொல்வாங்க.

அப்பறம் என்ன சொல்வாங்க?

செல்லம்ன்னு சொல்வாங்க. 

அப்பறம்...

இம்.. பதில் சொல்லாமல் அந்த குழந்தை நிற்க, தரையில் இறக்கி விடுகிறார். அந்த குழந்தை போய் தன் இடத்தில் போய் அமர்ந்ததும், காவியா... நீங்க வாங்க.


காவியா குழந்தை முன்னால் வந்ததும், மேஜையின் மேல் தூக்கி நிற்க வைக்கிறார். அந்த குழந்தை தன் இரு கைகளையும் கட்டி கொண்டு நிற்கிறது.

ரிலாக்ஸ்... குழந்தையின் கைகளை பிரித்து இயல்பாக விடுகிறார்.

உங்க அம்மாவை பத்தி சொல்லுங்க.

எங்க அம்மா நிறைய சாக்லேட் வாங்கி தருவாங்க.

வேற..

நரி கதை சொல்லுவாங்க. 

அடடா அப்பறம்...

ஸ்கூல் பாடம் எல்லாம் சொல்லி தருவாங்க.


வெரிகுட் 

அந்த குழந்தையை இறக்கி விடுகிறார். அந்த குழந்தை தன் இடத்தில் போய் அமர்கிறது.

சுபா.. நீங்க வாங்க.

சுபா அருகில் வந்ததும்,  சுபாவை மேஜை மேல் தூக்கி நிற்க வைக்கிறார்.

அந்த குழந்தை கன்னத்தை சொரிந்து கொள்கிறது.

அப்போது உங்க அம்மாவை பத்தி சொல்லுங்க என்கிறார் ஆசிரியை.

என் அம்மா என் வயத்துக்குள்ளே  இருக்காங்க. என்று தன் வயிற்றை  காட்டுகிறது.

அச்சச்சோ... சுபா கண்ணு வயத்துக்குள்ளேயா அம்மா இருக்காங்க.

ஆமாம்... நான்... நான்... பிறந்த உடனே எங்க அம்மாவை தூக்கி முழுங்கிட்டேனாம். பாட்டி சொன்னாங்க.

ஆசிரியை கண்கள் கலங்குகிறது.


அவ்வளவுதான் கதை. இது உங்க மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துது. இப்படி உணர்வு பூர்வமா கதைக்களம் நகர்ந்தால் படம் பார்ப்பவரின் மனதை நம் வசப்படுத்தலாம்.

சரி.. இது இத்துடன் இருக்கட்டும். வேறு ஒரு விளக்கத்தோடு பின் சந்திப்போம்.







9 comments:

  1. நன்றி எதுக்கு நண்பரே. உங்கள் ஏற்றுமதி வழிகாட்டி உண்மையில் சூப்பர். கலக்குற மச்சி.

    ReplyDelete
  2. Thank you !!!!!
    மிக நன்றி!!!

    ReplyDelete
  3. super innum niriya vendum engaluku.

    ReplyDelete
  4. sir ungal mobil number kitaikuma thish is mynumber 09594618033

    ReplyDelete
  5. அருமையான விளக்கம் நிறைந்த படைப்பு நன்றி !

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...