திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் உடனுக்குடன் எண்ணப்பட்டு வருகின்றன.
அதேபோல், நேற்றுமுன்தினம் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 75 லட்சம் கிடைத்தது. சென்னையை சேர்ந்த நிஜலிங்கம் என்ற பக்தர் ஒரு கிலோ தங்கத்தை கோவில் உண்டியலில் காணிக்கையாக வழங்கினார்.
மேற்கண்ட தகவலை திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். - இது செய்தி.
இப்படி திருப்பதி உண்டியலில் மக்கள் பணத்தையும், பொன் பொருள்களையும் கொண்டு போய் காணிக்கையாக கொட்ட என்ன காரணம்?
புராணக்கதை சொல்வது வேறு. திருமலையார் தன் திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கினார்.
அந்த கடனை கட்டவே பத்தர்களிடம் காணிக்கையாக பெறுகிறார். இதுவரை அவர் வாங்கிய கடனுக்கு வட்டி தான் கட்ட முடிகிறதே தவிர அசலை அடைத்தபாடில்லை என்கிறது.
கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டியை விட கொடுமையான வட்டியாக இருக்கும் போல இருக்கிறதே என்று சிலர் யோசிக்கலாம். நம் யோசனை அதுவல்ல.
திருப்பதி சென்று வந்தால் ஒரு திருப்பம் வரும் என்றார் கண்ணதாசன். அந்த வார்த்தை உலகம் முழுவதும் பரவி விட்டது.
பலர் திருப்பதி சென்று வந்த பிறகு வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
இது ஒருபுறமிருக்க, ஒருவர் சொந்த தொழில் ஆரம்பிக்கிறார். தன் தொழிலுக்கு கூட்டாளியாக, ஒரு செல்வந்தரை சேர்த்துக் கொள்வது இயல்பு.
பலர் தங்கள் தொழில்த்துறை கூட்டாளியாக சேர்த்துக் கொள்வது திருமலையானைத்தான்.
அவர் எப்ப வந்து முதல் போட்டு முதலாளியானார் என்று கேட்கலாம். அவர் முதல் போடாத முதாலாளி.
தொழில் துவங்குவோர் அவரவர் விருப்பம் போல் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக் கொள்கிறார்கள். தொழிலும் அமோகமாக நடக்கிறது.
அப்படியானால் லாபத்தில் ஒரு பகுதியை ஒப்புக் கொண்ட மாதிரி கொடுப்பதுதானே முறை. அதுதான் உண்டியலில் பணம் கொட்டும் வித்தை.
உங்கள் நட்சத்திர பலன்களை தெரிந்து கொள்ள
தமிழ் புத்தாண்டு பலன்கள்
உங்கள் நட்சத்திர பலன்களை தெரிந்து கொள்ள
தமிழ் புத்தாண்டு பலன்கள்
No comments:
Post a Comment