ads

Wednesday 6 March 2013

வீரசிங்கம் - நேதாஜி


வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் தோல்விமேல் தோல்வி வந்தது. பர்மாவில் இருந்த ஜப்பான் படைகள் அங்கிருந்து பின் வாங்கின. 

அமெரிக்க தளபதி மக்ஆர்தர் பெரும் படையுடன் ஜப்பானை நெருங்கி கொண்டிருந்தார். ஏப்ரல் 30 ம் தேதி ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரை ரஷ்ய படைகள் முற்றுகை இட்டன.

இனி தப்ப வழியில்லை என்பதை அறிந்து கொண்ட ஹிட்லர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். அதை தொடர்ந்து ஜெர்மன் சரண் அடைந்தது. ஜெர்மன் சரணடைந்த பிறகும் ஜப்பான் போரை நிறுத்தவில்லை.

எனவே 1945 ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பான் நகரான ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது.  அப்படியும் ஜப்பான் சரண் அடையாததால், இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் இன்னொரு நகரான நாகசாகி மீது வீசியது.


இதை தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 12ம் தேதி ஜப்பான் தோல்வியை ஒத்துக் கொண்டு சரண் அடைய தீர்மானித்தது. அப்போது நேதாஜி மலேசியாவில் இருந்தார். அவர் உடனே கார் மூலம் சிங்கபூர் திரும்பினார்.

சுதந்திர அரசாங்கத்தின் இதர தலைவர்களுடனும், தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.  1945 ஆகஸ்ட் 15ம் தேதி ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசும்போது, ஜப்பானின் சரணாகதியை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அன்றிரவு நேதாஜி தூங்கவில்லை. விடிய விடிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று, ராணுவ தளபதிகளுக்கு கட்டளைகள் பிறபித்தார்.

முக்கியமாக ஜான்சிராணிப் படையில் உள்ள பெண்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். இதற்கிடையே ஜப்பான் அரசிடம் இருந்து நேதாஜிக்கு ஒரு செய்தி வந்தது.

ரஷ்யா பக்கம் இருக்கும்  மஞ்சூரியா பக்கம் உங்களை பத்திரமாக கொண்டு போய் சேர்த்து விடுகிறோம். அதன் பிறகு என்ன செய்வது என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள், என்பது தான் அந்த செய்தி.

அதன் படி அடுத்தநாள் காலை பாங்காக் (தாய்லாந்து) செல்வதென்றும் அங்கிருந்து மஞ்சுரியாவிர்க்கு புறப்படுவது என்றும் நேதாஜி முடிவு செய்தார். 1945 ஆகஸ்ட் 16ம் தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்படும் முன் இரண்டு செய்திகளை வெளியிட்டார்.


முதலாவது செய்தி இந்திய தேசிய ராணுவத்திற்கு.

 ஜப்பான் சரணடைந்து விட்டாலும் டெல்லியை அடைய பல வழிகள் இருக்கின்றன. இதியாவை மீட்பதுதான் நமது லச்சியம் என்பதே அந்த செய்தி.

அடுத்த செய்தி

கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களுக்கு நமது வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத நெருக்கடியான நேரம் இது. நமது தற்காலிக தோல்வியை கண்டு மனம் தளராதீர்கள்.

இந்தியாவின் விடுதலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெகு விரைவில் இந்தியா சுதந்திரமடையும்.  ஜெயஹிந்த்.


இந்த செய்தியை வெளியிட்டு விட்டு காலை 10மனி அளவில் பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். பிற்பகலில் பாங்காக் போய் சேர்ந்தார்.

அதன் பின்னர் மின்னல் வேகத்தில் நடைபெற்ற நிகழ்சிகள் பின் வருமாறு.

ஆகஸ்ட் 17 அதிகாலை பாங்காக் நகரில் இருந்து சைகோன் ( தென் வியட்நாம்) நகருக்கு விமானத்தில் புறப்பட்டார்.

துணைத்தளபதி கர்னல் ஹபிப் - வுர்-ரகிமான், கர்னல் குல்ஜாராசிங், கர்னல் பிரிதம்சிங், மேஜர் அபித் ஹசன் ( நேதாஜி நீர்முழ்கி கப்பலில் பயணம் செய்த போது உடன் இருந்தவர் ) ஆலோசகர் தேவநாத் தாஸ் நேதாஜியின் சுதந்திர அரசாங்கத்தில் பிரச்சார இலாக்கா மந்திரியாக  பதவி வகித்த எஸ். எ. ஐயர் ( தமிழர்) ஆகியோர் உடன் சென்றனர்.

ஆகஸ்ட் 18 காலை 10 மணிக்கு விமானம் சைக்கோன் விமான தளத்தில் இறங்கியது. அங்கு ஜப்பானிய போர் விமானம் ஓன்று புறப்பட தயாராக இருந்தது.



நாளை தொடரும்

2 comments:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...