நடிகர் ரஜினிகாந்த் அவர்களை நல்ல மனிதர், பண்பாளர், மனிதநேயம் மிக்கவர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த கருத்தில் இருந்து அவர் தவறி விட்டார் என்றும் சொல்ல முடியாது. ஆனால் சமீப காலங்களில் அவர் குரல் ஊடககங்களில் அதிகம் ஒலிக்கிறது.
அது பெரும்பாலும் மக்கள் சந்திக்கும் பெரும் துயரத்தை பற்றியோ, கண்ணெதிரே நடக்கும் அவலங்களை பற்றியோ, உயிர் துறக்கும் மீனவர்கள் பற்றியோ, நித்தம் நடக்கும் கொலை கொள்ளைகள் பற்றியோ செத்து மடிந்த ஈழ தமிழர்கள் பற்றியோ இல்லை.
அவரின் அன்புக்கு உரியவர்கள், சினிமாதுறை சார்ந்தவர்கள் பாதிக்கப் படும் போது மட்டும் உள்ளம் கொதிக்கிறது அவருக்கு.
கமலுக்கு சிக்கல் என்றதும் மௌனம் கலைத்தார். அவருக்காக குரல் கொடுத்தார். இப்போது குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது.
அன்பான மனிதரான சஞ்சய்தத் என் பாசத்திற்குரிய நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகிறது.
இந்த தண்டனையிலிருந்து அவருக்கு விலக்கு கிடைத்து எஞ்சியுள்ள நாட்களை அவர் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்”என தெரிவித்துள்ளார்.
நல்லது. யார் செத்தால் என்ன? எத்தனை உயிர்கள் மடிந்தால் என்ன? நட்பு தான் முக்கியம். அவர் தீவிரவாதியாக இருந்தாலும்.
No comments:
Post a Comment