கமல்ஹாசனின் விஸ்வருபம் பல தடைகளை தாண்டி வெற்றி பெற்று விட்டது. இதே விஸ்வருபம் படம் சிக்கலில் மாட்டி தவித்தபோது, கமலஹாசன் பேட்டி அளித்தார்.
இந்த படத்திற்காக என் சொத்துக்களை அடமானம் வைத்து, நிறைய முதலீடு செய்திருக்கிறேன். படம் வெளி வராமல் போனால் என் வீடு கூட எனக்கு சொந்தமில்லாமல் போய்விடும் என்றார்.
உடன் அவர் நலன் விரும்பிகள் 100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளார் என்று செய்தியை வெளியிட்டார்கள். கமல் இதை மறுக்க வில்லை.
ஆனால் உண்மை நிலவரம் வேறு.
விஸ்வருபத்தின் அனைத்து பணிகளும் கடந்த மே மாதமே முடிந்து விட்டதாக கமல் முன்பு தெரிவித்திருந்தார்.
அதே மாதத்தில் நடந்த கேன்ஸ் பட விழாவிற்கு கூட அனுப்பியதாக கூறினார்கள். ஆனால் அதன் பிறகு ஆறு மாத காலம் கமல் செய்த வேலை விஸ்வருபம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்ததுதான்.
ஆக 100 கோடி பட்ஜெட் என்பது விஸ்வருபத்தின் மொத்த பட்ஜெட் அல்ல. இரண்டாம் பாகத்திற்கும் சேர்த்து செய்த செலவுதான் அது.
இப்போது விஸ்வருபத்தின் இரண்டாம் பாகம் வெளிவரப் போகிறது. இதன் படபிடிப்புகள் நடந்து வருதாக சொல்லப்படுகிறது.
விஸ்வருபத்தின் இரண்டாம் பாகத்தை மூ என்ற பெயரில் வெளியிட போவதாக செய்திகள் வருகிறது.
விஸ்வருபம் இரண்டாம் பாகமான மூ படத்தில் மூன்று வேடங்களில் கமல் நடிக்கிறாராம்.
விஸ்வருபம் படத்தில் முல்லா உமர் அமெரிக்காவில் இருந்து தப்புவது போல் காட்சி அமைக்க பட்டிருந்தது.
இரண்டாம் பாகத்தில் முல்லா உமர் இந்தியாவில் நாச வேலையில் ஈடுபட திட்டமிடுவது போலவும், அதை கமல் முறியடிப்பது போலவும் திரைக்கதை உருவாக்கி உள்ளது. இதுதான் இப்போதைய நிலவரம்.
நிலவரத்திற்கு நன்றி...
ReplyDeleteநீண்ட இடைவேளைக்கு பிறகு உங்கள் வருகை. எப்படி இருக்கீங்க. நலமா?
ReplyDelete