டெல்லி காவல் நிலையங்களில் டெலிபோன் மணி அடித்தாலே, ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் போலீசார்.
ஏன்?
ஏதாவது கற்பழிப்பு கேசாக இருக்கும் என்றா?
அதன் தாக்கத்தால் வந்த வினைதான். மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பு சம்பவம் நடந்த பிறகு, தூக்கு தண்டனை உறுதி என்று தெரிந்த பிறகும், பெண்களிடம் அத்துமீறும் சம்பவம் குறையவில்லை டெல்லியில்.
அதனால் படித்த பல பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்து கொள்ள சட்டம் என்ன சொல்கிறது என்று இணையதளங்களில் ஒருபுறம் தேடுதல் வேட்டை நடத்தினாலும், மறுபுறம் காவல் நிலையங்களுக்கு போன் செய்து விவரம் கேட்கிறார்களாம்.
இதற்கு விளக்கம் சொல்லியே ஓய்ந்து போன போலீசார், இப்போது போனை பார்த்து பயந்து கிடக்கிறார்கள்.
இதில் திருப்தியுறாத பலர் காவல் நிலையத்திற்கே நேரில் வந்தது விளக்கம் கேட்கிறார்களாம்.
அம்மா தாய் குலங்களே....ஒருவரின் உயிருக்கு, நிச்சயமான முறையில் அச்சுறுத்தல் உள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டால், துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்படும் என கூறி போலீசார் பெண்களை சமாதான படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அட ராமா!
No comments:
Post a Comment