ads

Saturday, 11 February 2012

குட்டி கதைகள் / TAMIL SHORT STORY

பழிக்கு பழி 

அது ஒரு சிற்றூர். அதை ஒட்டி ஒரு காடு.  அந்த சிற்றூரில் வசித்து வந்தான் ஒருவன்.  அவன் ஒரு நாள் காட்டுக்கு போனான்.  ஒரு மானை பிடித்து வந்தான்.  

மிகவும் ஆசையாக வளர்த்து வந்தான்.  அதற்கு வேண்டியதை எல்லாம் செய்தான்.  

இந்நிலையில் ஒரு நாள் அந்த மான் காணாமல் போனது.  பிரியமாக வளர்த்த மான்,  அதை யார் கொண்டு போயிருப்பார்கள். 

கடத்தியவன் யாராக இருந்தாலும் அவனை சும்மா விடக்கூடாது. கடவுளே என்றான்.

கடவுள் நேரில் வந்தார்.  என்னை ஏன் அழைத்தாய்,  உனக்கு என்ன வேண்டும் என்றார்.

இவன் என்ன கேட்டு இருக்க வேண்டும்?  காணாமல் போன மான் எனக்கு வேண்டும் என்றுதானே.  ஆனால் அவன் அப்படி கேட்கவில்லை.

இப்படி கேட்டான்....  என்னுடைய மான் காணாமல் போனதற்கு யார் காரணமோ,  அவன் என் முன்னாள் வந்து நிற்க வேண்டும். அவனுக்கு என் கையால் தண்டனை கொடுக்க வேண்டும்.

பாசம் பின்னால் போய் விட்டது.  பழி வாங்கும் எண்ணம் முன்னால் வந்து விட்டது.

கடவுள் கொஞ்சம் தயங்கினார்.  அப்பறம் சொன்னார்... பக்தா... அது வேண்டாமே.

கடவுளே என்ன இது.  பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்றுவது உன் கடமை அல்லவா.

ஏன் கடமைதான்.  இருந்தாலும்.... என்று இழுத்த கடவுள் மீண்டும் ஒரு முறை யோசித்து கேளேன் என்றார்.

நன்றாக யோசித்துதான் கேட்கிறேன்.

நீ கேட்கிற வரத்தை கொடுக்கிறேன்.  அப்பறம் என்னை குறை சொல்ல கூடாது.

மாட்டேன்.

கடவுள் முகத்தில் புன்னகை.  சரி... உன் மான் காணாமல் போக யார் காரணமோ... இதோ உன் எதிரில்...

எதிரே தோன்றியது ஒரு சிங்கம்.

தென்கச்சி கோ. சுவாமிநாதன் சொன்ன சுவையான கதை இது 





இப்படித்தான் பலர் .

ஒரு விவசாயி இரவு காவலுக்காக வயலுக்கு வந்தான்.  கையில் ஒரு லாந்தர் விளக்கு.  இரவில் கடும் குளிர்.  அவன் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உள்ளவன்.

சுருட்டு பிடித்தால் குளிருக்கு இதமாக இருக்கும் என்று சுருட்டை எடுத்து வாயில்  வைத்து கொண்டு தீபெட்டிக்காக சட்டை பைக்குள் கையை விட்டான்.
 தீபெட்டியை கொண்டு வராதது தெரிந்தது.

விளக்கை தூக்கி கொண்டு பக்கத்து வயலுக்கு நடந்தான்.  அங்கு இவனை போலவே இன்னொரு விவசாயி வயல் காவலுக்கு வந்திருந்தான்.

அண்ணே ரொம்ப குளிருது...  சுருட்டு குடித்தா இதமா இருக்கும்.  தீப்பெட்டி கொண்டு வர மறந்துட்டேன்.  உங்க கிட்டே இருந்தால் கொடுங்க என்றான்.

அந்த விவசாயி சிரித்தான்.

பைத்தியகாரா...  இதற்காகவா இவ்வளவு தூரம் நடந்து வந்தாய்.  அது தான் உன் கையில் லாந்தர் வைத்திருக்கிறாயே, அதில் பத்த வச்சிருக்க வேண்டியதுதானே என்றான்.

இன்று பலர் இந்த விவசாயி மாதிரிதான் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...