ஒரு தோட்டக்காரன் இருந்தான். தோட்ட்டக்காரனுக்கு என்ன வேலை?
தோட்டத்தை பராமரிக்கணும். உரம் வைக்கணும். தண்ணீர் பாய்ச்சனும். இதுதானே. இந்த கடமையில் இருந்து அவன் தவறினதே இல்லை.
ஒரு நாள் வழக்கமா தண்ணீர் ஊற்றும் நேரம் வந்தது. ஆனால் பயங்கரமான மழை. தோட்டக்காரன் என்ன செய்திருப்பான்னு நினைக்கிறிங்க.
கொட்டுற மழையில் குடையை படிச்சுகிட்டு தண்ணீர் ஊற்றினான். ஏன் தெரியுமா?
தோட்டக்காரன் தன கடமையில் இருந்து தவறிட்டான்னு யாரும் சொல்லக்கூடாது. அதுக்குதான். இந்த தோட்டக்காரன் மாதிரிதான் சனி பகவான்.
கலியுகத்தில் சகல தெய்வங்களின் சாட்சியாக இருப்பவர். நம்மையோ தீமையோ செய்ய கடமை பட்டவர். அவர் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை, பல்வேறு பெயர்களில் வந்து பிடித்து கொண்டாலும், நடக்கும் பலன் என்னவோ ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
ஒருவருக்கு பார்க்கும் வேலையில் பிரச்சனை என்றால், மற்றவருக்கு வேலை இல்லாத பிரச்சனை வரும்.
ஒருவருக்கு கடன் தொல்லை வந்தால், மற்றவருக்கு கடன் கொடுத்த பணம் வராமல் போகும்.
ஒருவருக்கு குடும்ப கலகம் என்றால், மற்றவருக்கு குடும்பம் அமையாமல் சிக்கல் வரும்.
ஒருவருக்கு நோய் தொல்லை என்றால், மற்றவருக்கு தன் வாயே வம்பை அழைத்து வரும்.
ஒருவருக்கு தொழிலில் நஷ்டம் வந்தால், மற்றவருக்கு தொழிலை நடத்த முடியாத அளவிற்கு கஷ்டம் வரும்.
ஆக.... எந்த வகையிலாவது சனி பாதிக்காமல் இருப்பதில்லை. சனி தரும் பாதிப்புகளில் இருந்து தப்ப என்ன செய்யலாம்?
ஓன்று பரிகாரம் செய்யலாம். பொதுவாக சனிக்கு செய்யும் பரிகாரமே ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு, சனி பகவானுக்கு எள்தீபம் எண்ணெய் ஏற்றி சனி பிரீதி செய்வது.
மற்றொன்று தன்னை வருத்தி கொள்ள தயாராவது.
எப்படி?
சொல்றேன். சனி யாரு? கடன் கொடுத்தவரை கடன் வாங்க வைக்கிற சனி. அரியாசனம் இருந்தும் அதிகாரம் இல்லாமல் செய்கிற சனி, நமக்கு நாமே சில கஷ்டத்தை ஏற்படுத்தி கொண்டால் சமாதானமாகி விடுவார்.
அதுதான் எப்படி?
வாய்ப்பிருந்தால் வெளிநாடு போவதுதான்.
என்ன சார். வெளிநாடு போறது எவ்வளவு பெரிய விஷயம். நம்ம தாத்தாங்க காலம் வரை...அட.... எரோப்பிலான் போகுதுன்னு வானத்தை அண்ணாந்து பார்த்தே வாழ்க்கையை முடிஞ்சு போச்சு.
வெளிநாடு போனா நல்லா சம்பாதிக்கலாம். ஒரு நல்ல வாழ்கையை அம்மைசுக்கலாம். இதை போய் சனியோட முடிச்சு போடுறிங்களே நியாமா?
நீங்க சொல்றது சரிதான் போஸு. வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள, வருமான வாய்ப்பை பெருக்கி கொள்ள, வெளி நாடு யோகம் என்பது ஒரு கொடுப்பினைதான்.
ஆனால் வெளிநாட்டு வாழ்க்கையில் வரும் சட்ட சிக்கலில் தான் சனி பகவானே வருகிறார்.
எப்படி?
அதாவது இப்போ வீட்டிலே இருக்கீங்க. உங்களை கேள்வி கேட்பார் யாரும் இல்லை. உங்க இஷ்ட்டத்துக்கு ஊரை சுத்திட்டு வரலாம்.
நல்லா தூங்கலாம். T .V . பார்த்து கிட்டே என்னம்மா சாப்பாடு ரெடியான்னு கேள்வி கேட்கலாம். ரொம்ப டயர்டா இருக்கு ஒரு காபி போட்டு தாயேன்னு வீட்டில் உள்ளவங்க கிட்டே கேட்கலாம்.
ஆனால் வெளி நாட்டு வாழ்க்கையில் இது சாத்தியமா? டைம் முக்கியம். சரியான நேரத்திற்கு போகணும். சரியாய் வேலை பார்க்கணும். நம் தேவைகளை நாமே செய்யணும்.
துணி துவைப்பதில் இருந்து சாப்பாடு வரை சகலமும் இதில் அடக்கம்.
ஒன்னை கொடுத்து ஒன்னை கெடுக்கிற சனி, வருமான வாய்ப்புகளை உயர்த்தி தந்தால், சொகுசு வாழ்க்கையை இல்லாமல் செய்து விடுவார். அது நாள் ஏழரை சனி நடக்கும் போது, வெளிநாட்டு வாய்ப்பு வந்தால், மூட்டை முடிச்சை கட்டி கிட்டு கிளம்பிட வேண்டியதுதான்.
அதானால் சனி பாதிப்பு இருக்காது. உள்ளூரில் இருந்தால் வரும் சங்கடத்தை சந்திக்க தயாராக வேண்டியதுதான். ஓக்கேவா.
No comments:
Post a Comment